விவசாயி அடைந்த வருத்தம்

 

கிராமத்திலிருந்து ஒரு விவசாயி நகரத்துக்கு வந்தான். பசி எடுத்தது. அவனுக்கு ஒரு சிற்றுண்டி விடுதிக்குச் சென்று, ஒரு தோசை கொண்டு வரச் சொல்லி, சாப்பிட்டான், பசி அடங்க வில்லை. மேலும், ஒரு தோசை கொண்டு வரச் சொல்லி, அதையும் சாப்பிட்டான். அப்பொழுதும், அவன் வயறு நிறைய வில்லை. மூன்றாவது தடவை, ஒரு தோசை வரவழைத்து அதையும் சாப்பிட்டான். பசி அடங்கவில்லை.

பிறகு ஒரு மசால் வடையைக் கொண்டு வரச் சொல்லி, அதைச் சாப்பிட்டதும் பசி அடங்கியது.

அப்போது அந்த விவசாயி தன் தலையில் அடித்துக் கொண்டு, ” என்னைப் போல் மூடன் எங்கேயாவது இருப்பானா?. மூன்று தோசைகளையும் வாங்கிச் சாப்பிட்டு, காசை வீணாக்கிவிட்டேனே! முதலிலேயே ஒரு மசால் வடையை வாங்கித் தின்றிருந்தால், பசி அடங்கியிருக்குமே” என்று மனம் வருந்தினான்.

- மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் தொகுப்பிலிருந்து (ஜூன் 1998). 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு அரசன் தன்னுடைய நாட்டு மக்கள் கடைப்பிடித்து வரும் பழக்கங்களும், நடைமுறைகளும் நாகரீகம் இல்லாமல், இருப்பதாக வெறுப்படைந்தான். அவற்றை எல்லாம் மாற்றி அமைத்து, புதுமையான பழக்கங்களை புகுத்த விரும்பினான். அரசன் ஒரு நாள் அமைச்சர்களைக் கூட்டிவைத்து, "ஒரு குழுவினர் முன்னேறிய நாடுகளுக்குச் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு சிற்றூரில் ஆனந்தன் என்பவன், தன் மனைவியோடும், இரண்டு குழந்தைகளோடும் வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் கைவசம் இருந்த பணமும், நகையும் செலவழிந்தது; வேலை எதுவும் கிடைக்கவில்லை, சில நாட்கள் பட்டினி கிடக்கவும் நேரிட்டது. மனைவி, மக்களோடு ஊர் ஊராக அலைந்தான் ஆனந்தன். அடுத்த ஊரில் இருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
பெருஞ்சித்திரனார் இல்லம். வண்டியிலிருந்து பொன் மணிகளை இறக்கி வீட்டிற்குள் கொண்டுவந்து வைக்கின்றனர். பட்டாடை அணிந்து பல வகைப் பொன் அணிகளைப் பூட்டிய கோலத்தோடு பெருஞ்சித்திரனார் வீட்டிற்குள் நுழைகிறார். அவர் மனைவி மலர்ந்த முகத்தோடு வரவேற்கிறாள். பெருஞ்சித்திரனார் கூறுகிறார்: "ஆருயிரே அனைவர்க்கும் பகுந்து கொடு. ...
மேலும் கதையை படிக்க...
காய்ந்த நெல்லை யறுத்து அடித்து, குற்றிச் சமைத்துக் கவளங் கவளமாய்த் திரட்டி யானைக்கு உணவு அளித்தால் சிறு நிலத்தில் விளைந்த நெல்லும் பல நாள் உணவாகும்! நூறு காணி நிலமாயினும், யானையை மேய விட்டால், அது தின்பது குறைவாகவும், அதன் கால்கள் அழித்து ...
மேலும் கதையை படிக்க...
ஆற்றின் நடுவே ஒரு மணல் திட்டு. இலையற்ற பெரிய மரம் நிற்கிறது. அம்மரத்தடியில் அமர்ந்தான் கோப்பெருஞ் சோழன். வடக்குத் திசை நோக்கி உண்ணா விரதமிருக்கத் தொடங்கினான். நண்பர் சிலர் வந்து அருகே அமர்ந்தனர். பூதநாதனார் ஓடோடி வந்தார். அருகில் அமரப் போனார். ...
மேலும் கதையை படிக்க...
இடையன் ஆடுகளை ஓட்டுகிறான். குகையொன்று குறுக்கிடுகிறது. குகையைக் கண்டதும் ஆடுகளை வேறு பக்கம் திருப்புகிறான். அவன் நெஞ்சம் படபடக்கிறது. ஆடுகளை வேகமாக விரட்டுகிறானே, ஏன்? புலியின் குகை அது. புலிக்கு அஞ்சி பயந்தோடுகிறான். பாவம் புலி கண்டால் அவன் ஆடுகளின் கதி ...
மேலும் கதையை படிக்க...
சேரமான் இரும்பொறையைக் கண்டு பாட இளங்கீரனார் சென்றார். அவன் புலவர் முகத்தைப் பார்த்தான். ஏனோ அவனுக்குக் கபிலர் நினைவு வந்து விட்டது: தமிழ்ப்புலம் உழுத கபிலன் இன்று இருப்பின் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று தன் ஆற்றாமையை வெளியிட்டான். இளங்கீரனார் கூறினார்: அரசே! சிறப்புற்ற பெரியோர் ...
மேலும் கதையை படிக்க...
மருதன் இளநாகனார் நன்மாறனைப் பார்க்கச் சென்றார். வரவேற்றான் மன்னன். நல்ல விருந்தளித்தான். உள்ளம் மகிழ்ந்தார் புலவர். அரசனுக்குச் சிறந்த உறுதிப்பொருளைக் கூறத் தொடங்கினார். அரசே , சினங்கொண்ட கொலை யானை உன் நாட்டைக் காக்காது. திக்கைக் கடக்கும் குதிரைப் படை உன் அரசை ...
மேலும் கதையை படிக்க...
ஒரு முது மகள்; அவள் தோற்றம் எப்படி இருக்கிறது? மணப் பொருள் மறந்த கூந்தல். நரைத்த தலை பஞ்சடைந்த கண்கள், சுருக்கம் விழுந்த தோல். அவள் வற்றி உலர்ந்த கள்ளி போல் தோன்றுகின்றாள். ஆனால் அவள் பெற்றெடுத்த மகன் யார் தெரியுமோ? ...
மேலும் கதையை படிக்க...
ஒரு வரிப்புலி , வேட்டைக்குக் கிளம்பியது. மிருகங்களை அடித்துத் தின்றது; பசிதீர்ந்த பின், குகைக்கு ஒடி வந்தது. குகையினுள்ளே கல்லிடுக்கில் புலி படுத்தது. உண்ட மயக்கம் நன்கு உறங்கி விட்டது. மாலை வந்தது நிலா எழுந்தது- ஒளியைச் சொரிந்தது. காடெங்கும் ஒரே வெளிச்சம்! குகையினுள்ளும் நிலவின் ...
மேலும் கதையை படிக்க...
எதையும் எளிதில் மாற்ற முடியுமா?
சாமத்தியமான சோதிடன்
எல்லோர்க்கும் கொடு!
முறையாகத் திறை கொள்க!
பிந்தி வந்தார்
பகைவர்களின் நடுக்கம்
அவரவர் பங்கு!
நல்லறத்தை நம்பு
உறை மோர்த் துளி
புலி கிளம்பிவிட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)