விருந்தோம்பல்

 

ஓரு கிராமத்தில் ஒரு விவசாயத் தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். அக்கிராமத்தில் இருக்கும் வறியவர்களுக்கு தினமும் நல்ல உணவு கொடுப்பது அவர்களது வழக்கம். கிராமத்துக்கு வரும் அந்நியர்களையும் நல்ல முறையில் உபசரிக்க அவர்கள் தயங்குவதே இல்லை. அதனால் ஊரில் அவர்களுக்கு மிகவும் நல்ல பெயர்!

விருந்தோம்பல்ஒருமுறை அவர்களுடைய இல்லத்துக்கு ஒரு துறவியும் சீடனும் வந்தனர்.

அவர்களை அன்புடன் வரவேற்ற விவசாயி, தனது மனைவியைக் கூப்பிட்டு, சீக்கிரம் சமையல் செய்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டான்.

அதற்கு அவர் மனைவி, “பத்துநா(ள்) ஆகும்..” என்றாள். பின்னர், “நீங்கள் போய் வாழையிலை நறுக்கிட்டு வாங்க!’ என்று கூறினாள்.

அவர் உடனே, “எட்டுநா(ள்) ஆகும்!’ என்றார்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த துறவி, “அவசரம் வேண்டாம்… நான் சாப்பிட ஆறுநா(ள்) ஆகும்’ என்றார்.

இந்த உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. எதுவும் விளங்காமல் விழித்துக் கொண்டிருந்தான்.

எனினும் அப்போதைக்கு ஒன்றும் கேட்காமல் இருந்துவிட்டான்.

ஆனாலும் விருந்து நடந்தது… இருவரும் வயிறாரச் சாப்பிட்டார்கள். விருந்து முடிந்தபின் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு இருவரும் கிளம்பினர்.

போகும் வழியில், சீடன் மெதுவாகத் தன் சந்தேகத்தைக் கேட்டான். துறவியும் அதற்கு விளக்கம் அளித்தார். என்ன விளக்கம் கூறியிருப்பார் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா? இல்லையென்றால் பக்கத்தைத் திருப்பிப் பார்க்கவும்.

- எம்.ஜி.விஜயலெக்ஷ்மி கங்காதரன் (டிசம்பர் 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
(முன்கதை மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்) இராமநாதன் காந்தார நாட்டில் கற்சிலை அரசரிடம் விடை பெற்று பட்டு தேசத்தை நோக்கி தன் தேரில் விரைந்தார். கற்சிலை மன்னரிடம் பேசிய போது அவர், மந்திரவாதி பல முறை தன் முன்னால் தோன்றிய போது தன்னை மதிக்காத ...
மேலும் கதையை படிக்க...
வாடிப் போன கத்திரிச் செடியாய் வந்திறங்கிய ஆதித்யாவிற்கு வாசலில் இருந்த புது ஜோடி செருப்பு சற்று ஆசுவாசத்தைக் கொடுத்தது. யாராவது விருந்தாளி வந்தார்கள் எனில் விதவிதமான இனிப்புகள், பலகாரங்கள் உண்ணக் கிடைக்குமே... அந்த உற்சாகம். பூஜையறை அலமாரியில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் அந்த ...
மேலும் கதையை படிக்க...
ஒரே ஒரு தடவை
அம்மா''ஏதோ வேலையாக இருந்த சீதா திரும்பினாள். கிடார் வகுப்பிலிருந்து சரவணன் வீடு திரும்பி இருந்தான். ""காபி கொண்டு வரட்டுமா?'' ""வேண்டாம்மா. இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஏன்னு கேளு'' ""யாரையாவது லவ் பண்றியா?'' ""போம்மா நீ. ஒரு அம்மா தன் பையன் கிட்டே கேக்கற கேள்வியா இது? ...
மேலும் கதையை படிக்க...
மாணவி, மனைவி, தாய்
என்னம்மா பணம் கட்டியாச்சா?'' நர்ஸ் கேட்டாள். ""இன்னும் இல்லேமா... பணம் புரட்டத்தான் போயிருக்காக. வரவும் கட்டுறோம். நீங்க அவளக் கவனிங்கம்மா, ரொம்ப பயமாயிருக்கு'' என்று கெஞ்சும் குரலில் கூறினாள் தனலெட்சுமி. ""என்னத்தக் கவனிக்குறது? ஆபரேஷன் பண்ண வேண்டிய கேசை நான் என்ன கவனிக்க முடியும்? ...
மேலும் கதையை படிக்க...
சிநேகிதம்
உள்ளே கூடம் அமளிப்பட்டது. வனஜாவின் குரல் வழக்கம் போல் உயர்ந்திருந்தது. இந்த ஒரு வாரத்தில், டோலுவுக்கு லூட்டியடிக்கும் குழந்தைகள், இந்த வீடு, வனஜாவின் வெட வெட உடலுக்குச் சற்றும் பொருந்தாத சன்னமில்லாத குரல் எல்லாம் பழகியிருக்கும். வருஷங்கள் கழித்து டோலுவைச் சந்திப்பேன் ...
மேலும் கதையை படிக்க...
தக தக தங்க குதிரை இராமநாதன்
சிறகு உதிர் காலம்!
ஒரே ஒரு தடவை
மாணவி, மனைவி, தாய்
சிநேகிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)