அவர் ஒரு நெறிப்படுத்தும் அறிஞர்; வழிகாட்டி; வாழ்வின் அனைத்துச் சவால்களையும் சமாளிப்பதற்கு வழிகாட்டுவதில் வல்லவர்; உலகெங்கும் அவர் புகழ் பரவியிருந்தது.
அவரது கூட்டத்திற்கு ஒரு நகரத்தில் ஏற்பாடாகியிருந்தது. குறித்த நேரத்தில் கூட்டம் தொடங்கியது. அரங்கம் நிரம்பி வழிந்தது. கூட்டத்திற்கு வருகை தந்திருந்தவர்கள் அனைவரும் இளைஞர்கள். வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்னும் வெறியுடன் இருப்பவர்கள்.
குறிப்பிட்ட நேரத்தில் அறிஞர் வந்தார். பேச்சை ஒரு கேள்வியுடன் ஆரம்பித்தார்.
“”உங்களில் யார் யார் வெற்றி பெற விரும்புகிறீர்கள்” என்று கேட்டதுதான் தாமதம், அங்கிருந்த அனைவரும் கைகளை உயர்த்தி எழுந்து நின்றனர்.
அறிஞர் கூறினார், “”பின் ஏன் இங்கு உட்கார்ந்துகொண்டு உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்குகிறீர்கள்? கடுமையாய் உழைத்திட உடனே புறப்படுங்கள். இருக்கும் ஒவ்வொரு விநாடியும் உங்கள் வெற்றிக்குத் தேவை! புறப்படுங்கள்!” என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
- வெ.சத்தியசீலன், கிழவன் ஏரி. (பெப்ரவரி 2013)
தொடர்புடைய சிறுகதைகள்
ராமையா வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு வீட்டுக்குள் வந்தார். வீடு நிசப்தமாக இருந்தது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதது போல், சுவரில் இருந்த பழைய கடிகாரம் பதினோரு முறை காறிற்று.
""இன்னும் பொட்டுண்டு வரலையா?'' என்று சமையலறையைப் பார்த்துக் கேட்டார். ""பத்தரைக்கே வந்துடுவானே''
உள்ளேயிருந்து ஒன்றும் ...
மேலும் கதையை படிக்க...
ஜோதி... இந்தப் பெயர்தான் குழந்தைக்கு வைப்பதென சஞ்சய் உறுதியான முடிவுக்கு வந்தான். இந்தப் பெயர் ஒரு காலத்தில் ஏற்படுத்தின அதிர்வு இப்போதும் கிடைத்தது அவனுக்கு. மனசு சட்டென பாரம் குறைந்து ஒரு பறவையின் இறகை போல லேசானது. சஞ்சய்க்கு அப்படியே காற்றில் ...
மேலும் கதையை படிக்க...
சக்கரவர்த்தி அக்பர் பொது மக்களைத் தன் சபையில் நேரடியாக சந்தித்துக் குறைகளை விசாரிப்பார் என்ற செய்தி கேட்டு அந்தக் கிழவி பரபரப்படைந்தாள். சமூகத்தில் மிக செல்வாக்குடைய குல்ஷா என்ற பணக்கார பிரபுவின் முகத்திரையைக் கிழிக்க அவள் துடித்தாள். ஆனால், தான் அந்தப் ...
மேலும் கதையை படிக்க...
அம்மா கொண்டுவந்த பழங்களைப் பார்த்ததும், குட்டி அணிலின் முகம் சுருங்கியது. “எப்பப் பார்த்தாலும் இதே பழங்களும் பருப்புகளும்தானா? வேற எதுவும் சாப்பிடக் கொடுக்க மாட்டீங்களா?” என்று கோபமாகக் கேட்டது.
“பழங்களும் பருப்புகளும்தானே நம் உணவுகள். இவற்றைச் சாப்பிடாமல் வேறு என்ன வேணும் உனக்கு?” ...
மேலும் கதையை படிக்க...
வேலப்பன்... ரெண்டு கைகளையும், முழங்காலுக்குள் வைத்தவனாய்...குறுகிப்போய் இருந்தான்.
""என்ன மாப்ளே தறியெல்லாம் எப்படி ஓடுது?''
ஆறுச்சாமி மச்சான், சொந்த அக்காவான பாப்பாத்தியின் வீட்டுக்காரர், வேலப்பனின் பங்காளி சுப்ரமணியத்திடம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
""ஏதோ,வாரம் போகுது.. ஒண்ணும் சரியில்லீங்க மச்சான். ஆளு பாடு தான் பெரும் பாடு''-புலம்பினான் சுப்ரமணி.
எலெக்சன் ...
மேலும் கதையை படிக்க...
செப்புக் காசாக மாறிய தங்கக் காசுகள்