விட்டாச்சு லீவு!

 

விட்டாச்சு லீவு!

ஒரு ராஜாவிடம் விலை உயர்ந்த வைரங்கள் இருந்தன. இதை அறிந்த ஏழு திருடர்கள் ஒருவருக்கொருவர் தெரியாமல் வைரம் திருடப் புறப்பட்டார்கள். கருவூலத்துக்கு ஏழு பேரும் ஒரே நேரத்தில் போய்ச்சேர்ந்தார்கள். அங்கே ஏழு அறைகள் இருந்தன. ஏழு பேரும் ஆளுக்கு ஓர் அறைக்குச் சென்றனர். யாருக்கு வைரம் கிடைத்தாலும் ஏழு பேரும் சமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று பேசி இருந்தார்கள். ஒரு திருடன், வைரப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஓடினான். வெகுதூரம் போனபிறகு, பெட்டியைத் திறந்து வைரங்களை எண்ண ஆரம்பித்தான். முடிப்பதற்குள் அங்கு இன்னொரு திருடன் வந்தான். ‘வைரங்களில் எனக்கும் பங்கு உண்டு’’ என்றான். வைரங்களை இரு பாதியாக பிரித்தனர். பிரித்தபின் ஒரு வைரம் மீதி இருந்தது.

அப்போது மூன்றாவது திருடன் அங்கே வந்தான். ‘‘எனக்கும் வைரங்களில் சரிபங்கு கொடு’’ என்றான். மூன்றாகப் பிரித்தார்கள். அப்போதும் ஒரு வைரம் மீதி இருந்தது. நான்காம் திருடன், ஐந்தாம் திருடன், ஆறாம் திருடன் வந்தார்கள். வைரங்களை நான்காகப் பிரித்தபோதும், ஐந்தாகப் பிரித்தபோதும், ஆறாகப் பிரித்தபோதும் ஒரு வைரம் மீதி இருந்தது. கடைசியில் ஏழாவது திருடன் வந்தான், வைரங்களை ஏழு பங்காகப் பிரித்தார்கள். இப்போது மீதி இல்லை.

பெட்டியில் மொத்தம் எத்தனை வைரங்கள் இருந்தன? ஒவ்வொருவருக்கும் கிடைத்த வைரங்கள் எத்தனை?

‘விட்டாச்சு லீவு’ புதிரோடு குட்டியாக ஒரு கொசுறு புதிர் இதோ…

‘ராமுவோட அப்பா பேங்க்ல கேஷியர். அவருக்கு நாலு பசங்க. முதல் பையன் பேரு 25 ரூபாய். ரெண்டாவது பையன் பேரு 50 ரூபாய். மூணாவது பையன் பேரு 75 ரூபாய். நாலாவது பையன் பேரு என்ன?’

‘ஏப்ரல்… ஃபூல்!’’

‘‘யே! ஏப்ரல் ஃபூல்’’ என்று ஒவ்வொரு வருடமும் யாரையாவது ஏப்ரல் ஒன்றாம் தேதி ஏமாற்றும் வழக்கம் எப்படி வந்தது என்று தெரியுமா..?

உலகம் முழுவதும் 16-ம் நூற்றாண்டுக்கு முன்புவரை ஜூலியன் காலண்டரைப் பின்பற்றிக்கொண்டு வந்தனர். அதன்படி புத்தாண்டு மார்ச் 25&ம் தேதி முதல் ஏப்ரல் 1 வரை இருக்கும். 1582-ல் போப் கிரிகோரி XIII (Gregory) ஜுலியன் காலண்டருக்கு பதில் கிரிகோரி நாட்காட்டியை பின்பற்றுமாறு ஆணை இட்டார். அதன்படி ஜனவரி 1-ல் புத்தாண்டு தொடங்கும். ஆனால் இந்த விஷயம் தெரியாமல் எப்போதும்போல் புத்தாண்டு கொண்டாடிய மக்களை ‘ஏப்ரல் முட்டாள்கள்’ என்று கிண்டல் செய்தார்கள். 16-ம் நூற்றாண்டில் பிரான்சில் ஆரம்பித்த இந்தப் பழக்கம் இங்கிலாந்துக்கும், ஸ்காட்லாந்துக்கும் பரவத் தொடங்கியது 18-ம் நூற்றாண்டில்தான்.

ஃப்ரெஞ்சு மக்கள் ஏப்ரல் தினத்தை ‘ஏப்ரல் 1 பாய்ஸன்&டி& ஏவ்ரில்’ அல்லது ‘ஏப்ரல் மீன்’ என்பார்கள். சுட்டிகள் மீன் படத்தை தங்களது சக நண்பர்கள்மீது ஒட்டி ‘பாய்ஸன்&டி ஏவ்ரில்’ என்று கத்துவார்கள்.

ஸ்காட்லாந்தில் இந்தக் கொண்டாட்டம் இரண்டு நாள் நடக்கும். அப்போது செய்யும் வேடிக்கைகளை ஏப்ரல் காக் (Gawk) என்பார்கள். இரண்டாவது நாளை ‘டெய்லி டே’ என்பார்கள். ரோம் நாட்டில் ஆட்டிஸ் கடவுள் உயிர்த்தெழுந்த நாளை வேடிக்கை செய்து விளையாடுவது ஹிலாரியா திருவிழா. இதை ரோமன் லாஃபிங் டே என்பார்கள். இங்கிலாந்தில், ஏமாறுபவர்களை ‘காப்’ அல்லது ‘காபி (Gobby) என்பார்கள். போர்ச்சுகலில் நண்பர்கள் மீது மாவைக்கொட்டி கொண்டாடுவார்கள். மெக்ஸிகோவில் ஹெரோட் மன்னரால் கொல்லப்பட்ட பல அப்பாவிக் குழந்தைகளின் நினைவாக அறிவுக்கூர்மையான ஏமாற்று விளையாட்டுகள் செய்து மகிழ்வார்கள்.

ஏப்ரல் தின நம்பிக்கைகள் சில, வேடிக்கையானவை. முற்பகலில் ஏமாற்றுவார்கள். பிறகு ஏமாற்றினால் துரதிர்ஷ்டமாம்! ஏப்ரல் 1&ம் தேதி பிறந்தவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள் என்று நம்பினார்கள்.

பிரபலமான சில நிறுவனங்கள் செய்த ஏமாற்றுகள் இவை… ஏப்ரல் 98&ல் மெக்சிகோ, தன் செய்திக் குறிப்பில் ‘அலபாமா மாகாண சட்டத் திருத்தம் கணிதத்தில் ‘பை’ என்பதன் மதிப்பை, கிறித்துவ தேவநூல் மதிப்பான 3.0&ஆக மாற்றியது’ என்று தெரிவித்தது.

டச்சு தொலைக்காட்சி செய்தியில் ‘பைசா கோபுரம் சாய்ந்துவிட்டது என்று செய்தி வெளியிட்டது. அந்த நாட்டில் தொலைக்காட்சி வைத்துக்கொள்ள லைசென்ஸ் வேண்டும். ‘லைசென்ஸ் பெறாத தொலைக்காட்சியை கண்டுபிடிக்க அரசு புது உத்தியை கண்டு பிடித்துள்ளது. ஆனால் மெல்லிய அலுமினியத் தகடை தொலைக்காட்சி மீது கவர் செய்தால் தப்பித்துவிடலாம்’ என ஒளிபரப்பியது. உடனே நாடு முழுதும் அலுமினிய ஷீட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

அது சரி… இதுல எப்போ நாம ஏமாறப்போறோம்னு ஆசையா படிச்சிட்டு இருந்தீங்களா. இதுல ஏதாவது ஒண்ணு சுட்டி விகடனோட டுபாக்கூரா இருக்கும்னு புத்திசாலித்தனமா நினைச்சீங்கள்ல. நாங்க ஏமாத்துவோம்னு நினைச்சு ஏமாந்துட்டீங்கள்ல… அது கூட ஏப்ரல் ஃபூல்தான்!.

- வெளியான தேதி: 01 ஏப்ரல் 2006 

தொடர்புடைய சிறுகதைகள்
பீர்பால், தெனாலிராமன் மாதிரி தன்னைக் கோமாளி ஆக்கிக்கிட்டு மத்தவங்களைச் சிரிக்க வைக்கிற ஜீனியஸ் முல்லா நஸிருத்தீன். முல்லாங்கிறது அவரோட பெயர் இல்லை. அரபுச் சட்டங்களில் தேறியவருக்கு முல்லா என்பது சிறப்பு பதவிப் பெயர். நாளடைவில் அதுவே அவருக்குப் பெயராகி விட்டது. முல்லாவுக்கு ஒவ்வொரு நாட்டிலும் ...
மேலும் கதையை படிக்க...
ஒருநாள் ரோஜாத் தீவு இளவரசி ஃப்ரண்ட்ஸோட ஜாலியா தோட்டத்துக்குப் போனாங்க. அங்கே இருந்த ரோஜாப் பூக்களை பறிச்சு ஒருத்தர் மேல ஒருத்தர் எறிஞ்சு விளையாடிட்டு இருந்தாங்க. அப்போ இளவரசி எறிஞ்ச ரோஜாப்பூ அங்கே வந்த முனிவர் மேல தவறி விழுந்துடுச்சி. கோபப்பட்டட அவர், ...
மேலும் கதையை படிக்க...
நான் கணவன்!
தட்டுத்தடுமாறி ஒருவழியா பி.ஏ., ஹிஸ்டரி முடிச்சு 'எங்கூரு நாட்டரசன்பேட்டையில் முதன்முதலா டிகிரி முடிச்சது நாங்கதாம்லே!'னு மமதையில் திரிஞ்சிட்டு இருந்த காலம். 17 அரியர்ஸை முட்டி மோதி க்ளியர் பண்ணி, டிகிரியை முடிச்ச ஒரு வீரனுக்கு எவ்வளவு அசதியும் பெருமையும் இருக்கும். அதைஎல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
உங்களை மாதிரி பூபாலனும் சமத்துப் பையன்தான். அவனுக்கு கிரிக்கெட்னா ரொம்ப இஷ்டம். போகப் போக என்ன ஆச்சுன்னா கிரிக்கெட்ல டாஸ் போட்டு முடிவெடுக்கிற மாதிரி எல்லாத்துக்கும் டாஸ் போட ஆரம்பிச்சுட்டான். ஸ்கூல் விட்டு வந்ததும் வீட்டில் அறிவியல் படிக்கலாமா, ஆங்கிலத்தைப் படிக்கலாமா? என்று ...
மேலும் கதையை படிக்க...
கதிருக்குக் குழப்பமாக இருந்தது. ‘ரகு, தன் பிறந்த நாள் பார்ட்டிக்கு என்னை ஏன் அழைக்கவில்லை..?’ ரகுவும் கதிரும் திக் ஃபிரண்ட்ஸ். ஒரே பெஞ்சில் உட்கார்ந்து ஒன்றாகப் படித்து ஒரே ரேங்க், அதுவும் முதல் ரேங்க் வாங்குபவர்கள். ஒரு பென்சில் வாங்கினால்கூட தன்னிடம் சொல்லிவிடும் ...
மேலும் கதையை படிக்க...
நல்லாத்தான் வாழ்ந்தார் முல்லா நஸிருத்தீன்!
கதை படிங்க.. விடை சொல்லுங்க!
நான் கணவன்!
பூவா, தலையா?
நண்பன்டா..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)