ரொட்டித் துண்டு !

 

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.

“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

RotiThunduஇளகிய உள்ளம் படைத்திருந்த அவர், “”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து ரொட்டியை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். “”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து ரொட்டிகளைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் ரொட்டிக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய ரொட்டியை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லாரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய துண்டை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர்.

ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி.

தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த ரொட்டியைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.
அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி.

“”ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள் அவள்.

“”சிறுமியே! உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்…” என்றார் செல்வர்.

துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

- டிசம்பர் 03,2010 

தொடர்புடைய சிறுகதைகள்
சேர நாட்டின் மேற்குக் கரையோரமுள்ள நெய்தல் நாட்டின் மன்னன் மூவன். அந்நெய்தலின் உட்பகுதி நல்ல வளமான வயல்களை உடைய செழிப்புமிக்க நாடு. இந்த அரசன் திறமையானவன், நற்குணங்கள் பல உடையவன். ஆனால், நாவடக்கம் இல்லாதவன். யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடுவான். தான் பேசிய பேச்சிற்கு ...
மேலும் கதையை படிக்க...
அன்னப்பறவை!
வாத்து முட்டைகளுடன் அன்னப்பறவை ஒன்றின் முட்டையும் கலந்துவிட்டது. இதை அறியாத வாத்து எல்லா முட்டைகளையும் அடை காத்தது. முட்டைகள் பொரித்துக் குஞ்சுகள் வெளிவந்தன. ஒரு குஞ்சு மட்டும் வெள்ளை வெளேரென்று இருப்பதையும், அழகாக நடப்பதையும் கண்டு தாய் வாத்தும், மற்ற குஞ்சுகளும் பொறாமை ...
மேலும் கதையை படிக்க...
முன்னொரு காலத்தில் மாமுனிவர் ஒருவர் காட்டில் தவம்செய்து வந்தார். சிறு வயதிலிருந்தே தவக்கோலம் பூண்டு இறைவனை தொழுது வந்ததால், அந்த காட்டில் வசித்த கொடிய மிருகங்கள் கூட அவரிடம் குழந்தைகளை போல நடந்து கொண்டன. ஒரு நாள் அவர் முன் அழகிய பெண் ...
மேலும் கதையை படிக்க...
பண்ணையார் பரந்தாமன் அன்று வேட்டைக்குச் சென்று திரும்பினார். அவர் கையில் கொக்கு ஒன்று இருந்தது. தன் கையிலிருந்த கொக்கைச் சமையல்காரனிடம் தந்தார். http://www.epa.gov/espp/poster/jpegs/crane.jpg "இன்று இரவு உணவிற்கு இதை அருமையாகச் சமைத்து வை. என் நண்பர்கள் சாப்பிட வருகிறார்கள்,'' என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார். சமையல்காரன் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு நாள் அவர் போதனை செய்து கொண்டிருக்கும் போது சிலர் ஒரு பெண்ணை இழுத்து வந்தார்கள். அவர்கள் இயேசுவிடம் “இயேசு அவர்களே! இப்பெண் பெரிய தவறு செய்து விட்டால், இவளை தண்டியுங்கள், நாங்கள் தவறு செய்தவர்கள் மீது கல் எறிந்து கொல்வது ...
மேலும் கதையை படிக்க...
சிற்பங்கள் !
முன்னொரு காலத்தில் சிற்றரசர்களில் ஒருவரான தனுஷ்ரதன் என்பவன் பஞ்சபுரி என்ற நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு தன்நாட்டில் மிகப்பெரிய கோவில் கட்ட வேண்டும் என்று ஆசை. புகழ்பெற்ற சிற்பியான மயூரனை அழைத்து, அவனிடம் கோவிலை உருவாக்கும் முழுப் பொறுப்பினை அளித்தான். மன்னன் சொற்படியே, ...
மேலும் கதையை படிக்க...
ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. குளிர்காலத்தில் ஒருநாள் மிகவும் கடுமையான குளிராக இருந்தது. குரங்குகளால் குளிரைத் தாங்க முடியவில்லை. கொஞ்சம் நெருப்பு கிடைத்தால் சருகுகளைப் போட்டுத் தீமூட்டி குளிர் காயலாம் என்று ஒரு கிழக்குரங்கு கூறிற்று. நெருப்புக்கு எங்கே போவது என்று ...
மேலும் கதையை படிக்க...
அப்புவிளை என்ற ஊரில் சிவா என்ற இளைஞர் இருந்தார். அவர் ரொம்பவும் அமைதியானவர், புத்திசாலி. ஒரு நாள் அவர்கள் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது அவரின் அப்பா, சின்னவயதில் அவர்களின் குடும்பம் பக்கத்து ஊரில் இருந்ததாகவும், அப்போ அந்த ஊரின் ஜமிந்தார் ...
மேலும் கதையை படிக்க...
கல்யாணம் கட்டிக்கலாமா ?
முன்னொரு காலத்தில் காட்டை அடுத்துப் பெரிய ஏரி ஒன்று இருந்தது. அங்கே சில மரங்கள் இருந்தன. அந்த ஏரிக்கரையில் ஆண் நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. அங்கே உணவு தேடி வந்த பெண் நாரையிடம் அது காதல் கொண்டது. பெண் நாரையைப் பார்த்து, ...
மேலும் கதையை படிக்க...
ஏன் சிரிக்கிறாய் ?
ஒரு பண்ணையில் ஆண் கழுதையொன்றும், பெண் கழுதையொன்றும் வளர்ந்து வந்தன. ஆண் கழுதை பகலில் கடுமையாக உழைக்கும். பண்ணைக்குள் கொண்டு செல்ல வேண்டிய சரக்குகளை முதுகில் சுமந்து செல்லும். மாலை தங்குமிடம் வந்ததும் அங்கு கிடக்கும் காய்ந்த புல்லை மேய்ந்து பசியாறும். பெண் ...
மேலும் கதையை படிக்க...
நாவடக்கம் இல்லாத அரசன்
அன்னப்பறவை!
லட்சுமி கடாட்சம்!
கொக்குவுக்கு எத்தனை கால்
இயேசுபிரான் சொன்ன கதைகள்
சிற்பங்கள் !
முட்டாளுக்கு புத்தி சொன்னால்?
எத்தனுக்கு எத்தன்
கல்யாணம் கட்டிக்கலாமா ?
ஏன் சிரிக்கிறாய் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)