ரகசியத்தை சொல்லுங்க !

 

முன்னொரு காலத்தில் கொட்டாரப்பட்டி என்ற ஊரில் அமுதவள்ளியின் குடும்பம் வசித்து வந்தது. அழகான மாப்பிள்ளை வேணும் என தேடிப்பிடித்து ஒரு ஆண் அழகனை வெளியூரில் கண்டுபிடித்து தன் மகளை கட்டிவைத்தாள். வெகு தூரம் என்பதால் அவன், பெண் வீட்டுக்கு போனதில்லை. திடீரென்று ஒருநாள் தன் அத்தையின் வீட்டிற்கு விருந்தினராக வந்தான்.

“வராத அழகு மருமகன் வந்து விட்டானே’ என்ற எண்ணத்தில் பலவிதமான பலகாரங்கள் செய்யத் தொடங்கினாள் அவள். அப்போதுதான் வீட்டில் முந்திரிப் பருப்பு இல்லை என்பது அவளுக்குத் தெரிந்தது. மருமகனிடம் பணத்தைக் கொடுத்தாள் அவள்.

Ragasiyathai“”மளிகைக் கடைக்குச் சென்று முந்திரி பருப்பு வாங்கி வாருங்கள்!” என்றாள். அவனும் மளிகைக் கடைக்குச் சென்றான்.

அவன் கொண்டு வந்திருக்கும் பணத்திற்கு தன்னிடம் சில்லறை இல்லை என்றான் கடைக்காரன் . “”நாளை வந்து மீதிச் சில்லறையை வாங்கிக் கொள்கிறேன்!” என்று முந்திரிப் பருப்பை வாங்கினான் அவன். கடையை மறந்து விடாமல் எப்படி நினைவு வைத்துக் கொள்வது என்று சிந்தித்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். எதிரே எருமை மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. கடைக்கு எருமை மாடுதான் அடையாளம் என்ற எண்ணத்தில் வீடு திரும்பினான்.
மறுநாள் பொழுது விடிந்தது. சில்லறை வாங்குவதற்கு அடையாளமாக வைத்திருந்த எருமை மாட்டைத் தேடிப் புறப்பட்டான் அவன். அந்த எருமைமாடு இப்போது ஒரு தையல் கடையின் முன்னால் மேய்ந்து கொண்டு இருந்தது. நேராக தையல் கடைக்குள் நுழைந்தான் அவன். அங்கு தைத்துக் கொண்டிருந்த முதியவரிடம், “”மீதிச் சில்லறை தாங்க!” என்றான்.

“”எதற்குச் சில்லறை தர வேண்டும்?” என்று கேட்டார் அவர்.

“”நேற்று உங்களிடம் முந்திரி பருப்பு வாங்கினேன். சில்லறை இல்லை; நாளை தருகிறேன் என்று நீங்கள் சொல்லவில்லை?” என்று கேட்டான் அவன்.
அதற்கு அவர், “”நான் தையல் கடைதான் வைத்து இருக்கிறேன். மளிகைக் கடை இல்லை. உன்னை இதற்கு முன் பார்த்ததே இல்லை. சில்லறை தர முடியாது போ!” என்று கோபமாகச் சொன்னார்.

“”நீங்கள் மீதிச் சில்லறை தரவில்லை என்றாலும் பரவாயில்லை, உங்களால் எப்படி ஒரே நாளில் ஒரு அடி நீளதாடி வளர்த்துக் கொண்டு கிழவனாக முடிந்தது. அதை மட்டும் சொல்லி விடுங்கள்!” என்று கேட்டான் அழகு மருமகன். தையல்காரன் ஏற்கனவே சட்டை சரியாகத்தைக்காமல் போராடிக் கொண்டிருந்தான். ஆத்திரத்தில் அவனை நன்றாக திட்டி அனுப்பினான். வீட்டிற்கு வந்த மருமகன் அத்தையிடம் நடந்த விஷயத்தை கூறினான்.

அதிர்ச்சியில் உறைந்து போனாள் அமுதவள்ளி. “இப்படிப்பட்ட முட்டாளா நம் மாப்பிள்ளை. இவரோட அழகை பார்த்து மயங்கினோமோ… இவருடன் எப்படி நம் மகள் குப்பை கொட்டுகிறாள்’ என்று நினைத்து மிகவும் வேதனை அடைந்தாள்.

- டிசம்பர் 03,2010 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு அடர்த்தியான காட்டில் முன்று மரங்கள் சிறந்த நண்பர்களாக இருந்தன. இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு கனவு இருந்தன. http://www.gratisgifs.net/images/nat...imatedtree.gif http://www.webweaver.nu/clipart/img/.../bare-tree.gifhttp://www.gifs.net/Animation11/Natu...usting_top.gif முதல் மரம் தன் கனவை தன் நண்பர்களிடம் சொன்னது, " நான் ஒரு மாணிக்க பேழையாக மாறவெண்டும் என்பதே என் கனவு, என்னுள் ...
மேலும் கதையை படிக்க...
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது பழமொழி. சின்ன வயதிலேயே அந்தச் சிறுவன் மிகவும் துரு துருவென்று இருப்பான்.ஒருநாள் அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு மரத்திலே ஏறி, மரக்கிளையில் இருந்து தலை கீழாகத் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள். விபரீதமான இந்த விளையாட்டைப் ...
மேலும் கதையை படிக்க...
அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. . அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர* நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து ...
மேலும் கதையை படிக்க...
பேட்டா பிறந்த கதை
தொழிலில் எந்தத் தொழிலும் கேவலமானதில்லை. செய்யும் தொழிலை தெய்வமாகக் கருதிச் செய்ய வேண்டும். "நாங்க செய்ற இந்த கேவலமான தொழிலை எம்பிள்ளையும் செய்யக் கூடாது. அவனைப் படிக்க வைத்து வேறு உத்தியோகம் வாங்கித் தருவேன்,' என்று சொல்லும் பெற்றோர் தான் இவ்வுலகில் ஏராளம். அப்படித்தான் ...
மேலும் கதையை படிக்க...
நான்தான் பெஸ்ட் !
ஓர் ஊரில் மூன்று ரசிகர்கள் இருந்தனர். ஒருவன் உணவு உண்பதில் ரசிகத்தன்மை உள்ளவன். சாப்பாட்டில் சிறிதளவு குறை இருந்தால் கூடக் கண்டுபிடித்து விடுவான். இன்னொருவன் வாசனையின் மூலமே மனிதர்களின் குணங்களை அறிந்து சொல்லக் கூடிய ஆற்றல் படைத்தவன். மூன்றாமவன் நித்திரையின் சுகத்தை ...
மேலும் கதையை படிக்க...
மூன்று மரங்களின் கதை
துணிச்சலான சிறுவன்
சன்னல் நோயாளி
பேட்டா பிறந்த கதை
நான்தான் பெஸ்ட் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)