ஆற்றங்கரை அருகே ஒரு பெரிய மரத்துக்குக் கீழே சேவலும் கோழியும் வசித்து வந்தன. இரண்டும் அதிகாலை உணவு தேடிப் புறப்படும். மாலையில்தான் வீடு திரும்பும்.
அந்த மரக் கிளையில் ஒரு குருவியும் கூடி கட்டி இருந்தது. ஒருமுறை குருவி கூட்டில் சேர்த்து வைத்த தானியங்கள் கீழே விழுந்துவிட்டன. அவற்றைக் கோழியும் சேவலும் சாப்பிட்டுவிட்டன. தன்னுடைய தானியங்களைத் தன் அனுமதியின்றி எப்படிச் சாப்பிடலாம் என்று சண்டையிட்டது குருவி. கீழே விழுந்த தானியங்களை எடுக்க யார் அனுமதியும் தேவை இல்லை என்றது கோழி. அதிலிருந்து குருவிக்குக் கோழியைக் கண்டாலே பிடிக்காது.
நாட்கள் சென்றன. கோழி மீது தேவையின்றி வெறுப்பை வளர்த்துக்கொண்ட குருவி, பழி வாங்குவதற்குத் தகுந்த நேரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது.
“முட்டைகள் சேர்ந்துவிட்டன. நாளை முதல் அடை காக்கப் போகிறேன்” என்றது கோழி.
“சரி, உனக்கு நானே உணவு கொண்டு வந்துவிடுகிறேன்?” என்றது சேவல்.
இரண்டும் பேசிக்கொண்டு செல்வதைப் பார்த்த குருவியின் மனதில் ஒரு திட்டம் உருவானது.
சட்டென்று கோழியின் கூட்டுக்குள் நுழைந்தது. முட்டைகளைத் தன் அலகால் கொத்தியது. மீண்டும் தன் கூட்டுக்குள் வந்து அமர்ந்துகொண்டது.
மாலை வீடு திரும்பிய கோழி, உடைந்திருந்த முட்டைகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தது. அழுதுகொண்டே சேவலிடம் முறையிட்டது.
“நாம் இல்லாத நேரத்தில் யாரோ வந்து முட்டைகளை உடைத்துச் சென்றிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் இப்படி ஒரு குணம் படைத்தவர்கள் யாரும் இல்லையே…”
“இது பாம்புகளின் வேலையாக இருக்குமோ?”
“இல்லை. பாம்புகள் முட்டைகளை முழுவதுமாக விழுங்கக்கூடியவை. இது வேற யாரோ. சரி, நாளை பார்க்கலாம்” என்று சமாதானம் சொன்னது சேவல்.
மறுநாள் காலை முட்டையிட்டு, வைக்கோலைப் போட்டு மூடி வைத்தது கோழி. பிறகு உணவு தேடி இரண்டும் புறப்பட்டன.
கோழியும் சேவலும் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்ட குருவி, கீழே வந்தது. கூட்டுக்குள் நுழைந்து, முட்டையை உடைத்துவிட்டுக் கிளம்பியது.
அன்று மாலை பதற்றத்துடன் கூட்டுக்குத் திரும்பியது கோழி. முட்டை உடைந்திருந்ததைக் கண்டு அதிரிச்சியடைந்தது. இதுக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்றது கோழி. சேவல் நீண்ட நேரம் யோசித்து, ஒரு திட்டம் தீட்டியது.
“கவலைப்படாதே. இரண்டே நாட்களில் இந்தப் பொல்லாத வேலையைச் செய்பவரைப் பிடித்துவிடலாம்” என்றது.
“எப்படி?”
கோழியின் காதில் தன் திட்டத்தைச் சொன்னது சேவல். மகிழ்ச்சி அடைந்தது கோழி.
மறுநாள் உடைந்த முட்டை ஓடுகளைச் சேகரித்தது கோழி. களிமண்ணையும் கற்களையும் கொண்டு வந்தது சேவல்.
முட்டை ஓட்டுக்குள் கற்களையும் களிமண்ணையும் வைத்து இரண்டும் நிரப்பின. இரண்டு நாட்களில் களிமண் கெட்டியானது.
“முட்டைகள் தயார். இன்று இரை தேடிச் செல்வோம்” என்றது சேவல்.
இரண்டும் நிம்மதியாகக் கிளம்பின.
“கிளம்பிட்டாங்க… ரெண்டு நாளா முட்டை உடைக்காமல் தூக்கமே வரலை” என்று சொல்லிக்கொண்டே கோழி கூட்டுக்குள் சென்றது குருவி.
முட்டையைக் கண்டது. ஒரு கொத்துக் கொத்தியது. ஆனால், முட்டை விரிசல்கூட விடவில்லை. கொஞ்சம் வேகமாகக் கொத்தியது. அப்போதும் உடையவில்லை. தன் பலம் அனைத்தையும் சேர்த்துக் கொத்தியது.
இப்போது உடைந்தது முட்டையல்ல… குருவியின் மூக்கு.
வலியால் துடித்துக்கொண்டே வெளியேறிய குருவியை, சேவல் மடக்கியது.
“முட்டையிடுவதும் அவற்றை அடைகாப்பதும் எவ்வளவு கஷ்டம் என்று உனக்கே தெரியும். ஒரு பறவையாக இருந்துகொண்டு இப்படி ஒரு காரியத்தை எப்படிச் செய்யத் துணிந்தாய்?” என்று கோபமாகக் கேட்டது கோழி.
“ஐயையோ என்னை மன்னித்துவிடுங்கள். என் மூக்கு உடைந்துவிட்டது இனி நான் தவறு செய்ய மாட்டேன்” என்று அலறிக்கொண்டே வேறு இடம் நோக்கிப் பறந்தது குருவி.
- 26 Jul 2017
தொடர்புடைய சிறுகதைகள்
“நரியாரே!
அந்த தர்பூசணி என்ன விலை?
“அதுவா! இருபது ரூபாய். கரடியாரே நீங்கதான் ரொம்ப சிக்கனம் பார்ப்பவராச்சே. தர்பூசணி வாங்க வந்திருக்கீங்க” எனக் கேட்டது நரி.
“புதுசா ஒரு சட்டம் வந்திருக்கே, அது உங்களுக்குத் தெரியாதா?” என பதிலுக்கு கேள்விக் கேட்டது கரடி.
“ என்ன சட்டம்? ...
மேலும் கதையை படிக்க...
அது மலையடிவாரத்தில் அமைந்துள்ள பள்ளிக்கூடம்.
அந்த ஊர் மட்டுமன்றி அருகில் உள்ள ஊர்களிலிருந்தும் பலரும் அங்கு கல்வி பயின்று வந்தனர்.
மலைமீது பல குரங்குகள் கூட்டங்கூட்டமாக வசித்து வந்தன.
அந்தக் கூட்டத்தில் புஜ்ஜி என்ற சிறிய குரங்கும் இருந்தது. அது மிகவும் புத்திசாலி. சரியாக பள்ளிக்கூட ...
மேலும் கதையை படிக்க...
அம்மா கொண்டுவந்த பழங்களைப் பார்த்ததும், குட்டி அணிலின் முகம் சுருங்கியது. “எப்பப் பார்த்தாலும் இதே பழங்களும் பருப்புகளும்தானா? வேற எதுவும் சாப்பிடக் கொடுக்க மாட்டீங்களா?” என்று கோபமாகக் கேட்டது.
“பழங்களும் பருப்புகளும்தானே நம் உணவுகள். இவற்றைச் சாப்பிடாமல் வேறு என்ன வேணும் உனக்கு?” ...
மேலும் கதையை படிக்க...
அழுதபடியே வந்தது மியா பூனைக்குட்டி. மிக அழகாக இருக்கும். அது அழுவதைப் பார்த்தால் உங்களுக்கும் அழுகை வந்துவிடும்.
பாட்டி பூனை, “ஏன் அழறே? கீழ விழுந்துட்டியா?” என்று கேட்டது.
“இல்லை” என்று அழுதபடியே தலை ஆட்டியது மியா.
“யாராவது அடிச்சாங்களா?”
“இல்லை” என்று தலை ஆட்டியது.
“அப்புறம் என்ன ...
மேலும் கதையை படிக்க...
அரச மரத்தடியில் எறும்புக் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. தங்களுக்குத் தேவையான உணவை மழைக்காலத்துக்கு முன்பாகவே சேர்த்து விடுவதற்காக சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருந்தன எறும்புகள்.
அந்தப் பக்கம் வந்த வண்ணத்துப்பூச்சிக்கு எறும்புகளைக் கண்டதும் ஏனோ வம்பு இழுக்க வேண்டும் என்று தோன்றியது. தன்னுடைய ...
மேலும் கதையை படிக்க...
பூனைகள் இல்லா உலகில் யாருக்குக் கொண்டாட்டம்? சொல்லவும் வேண்டுமா? நிச்சயம் எலிகளுக்குத்தான். பூனைகள் இல்லாத ஊர் இந்த உலகில் இருக்குமா? இருக்கிறதே. நளினப்பட்டி என்ற ஊரில் பூனைகளே இல்லை.
இந்தத் தகவலைப் பல நாடுகளில் உள்ள எலிகளுக்கும் கடிதம் மூலம் தெரிவித்தன நளினப்பட்டியில் ...
மேலும் கதையை படிக்க...
மரக்காட்டில் முயல் குடும்பம் ஒன்று வசித்துவந்தது. நேகா அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி. மிக அழகான நேகாவைப் பார்க்க தினமும் யாராவது விருந்தினர்கள் வந்துகொண்டே இருப்பார்கள்.
ஒருநாள் நரியும் பார்க்க வந்தது. முயல் குடும்பத்தினருக்குப் பயமாக இருந்தது.
“அடடே! இப்படி ஒரு அழகான முயல் குட்டியை ...
மேலும் கதையை படிக்க...
கடகடவென்று உருண்டு ஓடிக்கொண்டிருந்தது ஒரு முட்டை.
“ஐயோ... என் முட்டை உருண்டு ஓடுதே... யாராவது பிடிங்களேன்” என்று கத்திக்கொண்டே முட்டையின் பின்னால் ஓடியது மயில்.
“ஓ... இது உன்னோட முட்டையா? இதோ தடுத்து நிறுத்தறேன்” என்று சொல்லிக்கொண்டே குறுக்கே நின்றது நத்தை.
நத்தையை உருட்டிவிட்டுவிட்டு வேகமாக ...
மேலும் கதையை படிக்க...
நத்தை ஊர்ந்து கொண்டிருந்தது.
“நத்தையே, என்ன இவ்வளவு மெதுவா போறே? கொஞ்சம் வேகமாகப் போ” என்றது வரிசையில் வந்துகொண்டிருந்த எறும்புகளில் ஒன்று.
“கிண்டலா? என்னால் எப்படி வேகமாகப் போகமுடியும்?” என்றது நத்தை.
“நத்தையே, உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றேன். இன்னும் கொஞ்ச நேரத்துல மழை அதிகமா பெய்யப் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு நாள் சிங்க ராஜா குடும்பத்துடன் காட்டைச் சுற்றி வலம் வந்தது. அப்போது இளவரசர் சிங்கக்குட்டி காணாமல் போய்விட்டது. இளவரசர் சிங்கக்குட்டி வழிதவறி நாட்டுக்குள் நுழைந்தது. இது தெரியாமல் காட்டில் விலங்குகள் இளவரசரைத் தேடிக் கொண்டிருந்தன.
அன்றைக்குத் தீபாவளி. எங்கு பார்த்தாலும் மனிதர்கள் ...
மேலும் கதையை படிக்க...
பூனையிடம் கதை கேட்ட எலிகள்!
வண்ணத்துப் பூச்சியின் கடைசி ஆசை
பூனைகளைச் சிறைப்படுத்திய எலிகள்!
ஓடும் முட்டை… துரத்தும் மயில்…
சிங்கக்குட்டியின் புது தீபாவளி!