மனத்தின் வேகம்

 

ஒரு தையற்காரர், கட்டிலில் உட்கார்ந்து தைத்துக்கொண்டிருக்கிறார்… அவர் மனம் விரைகிறது….

ஊரிலே திருவிழா வந்து விட்டது… அதனைச் சென்று காண வேண்டும். அவர் மனக்கண் முன் திருவிழாக் கூட்டம் நின்றது.

மனைவியோ , தன் தாய் வீட்டில் குழந்தை பெற்றிருக்கிறாள். அவளையும் பார்த்தாக வேண்டும்!

குழந்தை வீறிட்டு அழும் குரல் அவர் காதுகளில் கேட்டது.

தையற்காரர் உள்ளம் விம்மி யெழுந்தது. அப்புறம் என்ன ?

இரு கைகளும் நூலைக் கோத்து வாங்குகின்றன. வலது கையிலுள்ள ஊசி ஏறி இறங்குவதைப் பார்க்க முடிய வில்லை …. அவ்வளவு வேகம்!

சோழன் நற்கிள்ளியை வென்று வாகை கொள்ள வந்தான் ஒரு மல்லன்.

மற்போர் மன்றத்தில் போர் தொடங்கி விட்டது! மற்போர் ! மற்போர்!

நற்கிள்ளியின் கைகள், தையற்காரனின் ஊசிபோல் விரைகின்றன…

அப்புறம்?- மல்லன் மண்ணைக் கவ்வினான்!

- மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம் 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு வேடன், காட்டிலே ஓர் யானையைக் கண்டான். அது, அவனைக் கொல்ல ஓடி வந்தது. அவன் அதன் எதிர் நின்று தன் வில்லை வளைத்து, ஓர் அம்பை யெறிந்தான். அது, யானையின் வயிற்றிற் புகுந்து சென்றது. அம்பு அத்துடன் வேகம் அடங்காது ...
மேலும் கதையை படிக்க...
நல்ல வெய்யில். நான் நெடுந்தூரம் நடந்து களைத்துவிட்டேன். மழையில் நனைந்த பருந்தின் சிறகு போன்ற அழுக்குத் துணி. வேர்வையில் என் உடலில் ஒட்டிக்கிடந்தது. ஒரு பலா மரத்தின் அடியில் இளைப்பாறு வதற்காக அமர்ந்தேன். அப்பொழுது வில்லேந்திய வேட்டுவர் தலைவன் ஒருவன் என் முன் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு காவடித் தண்டு. அதன் ஒரு முனையில் பதலை தொங்குகிறது. மற்றொரு முனையில் குடமுழா தொங்குகிறது. அந்தக் காவடித் தண்டைத் தூக்கிக் கொண்டு, தன் சுற்றத்தாரோடு, புரவலரை நாடிப் பரிசு பெறச் சென்ற விறலி , வெயில் காரணமாய் ஒரு காட்டிடையே தங்கியிருந்தாள். அதியமானிடம் ...
மேலும் கதையை படிக்க...
பல்யாகசாலை முகுகுடுமிப் பெருவழுதியைப் பாடினார் காரிகிழார். அது, புகழ்ப்பாட்டு. அதன் பொருள் இதோ .... "வடக்கே, பனி குளிக்கும் இமயம்; தெற்கே, திரைகொண்டு கரை மோதும் குமரி; கிழக்கே, பண்டு சகரரால் தோண்டப் பட்ட கீழ்க் கடல் ; மேற்கே, முத்து முதிர்ந்த மேற்கடல்! இந் ...
மேலும் கதையை படிக்க...
முதல் நாள் போரிலே, பகைவர் தம் யானையைக் கொன்று, தந்தை மடிந்தான்; இரண்டாம் நாள் போரிலே, நிரைகவர்ந்த பகைவரை மறித்துக் கொன்று மடிந்தான் கொழுநன் ! மூன்றாம் நாளும் போர்ப் பறை ஒலித்தது... கணவனும் தந்தையும் மடிந்த பின்னரும், தன் ஒரே மகனையும் போர்க்கு ...
மேலும் கதையை படிக்க...
வில்லாளன் ஓரி
ஊரும் பேரும் உரைக்கமாட்டான்!
சுமையும் வறுமையும்
புகழ் என்றால் இதுவன்றோ புகழ்!
ஒரே மகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)