மந்திரக்குச்சியின் மகிமை!

 

ஒரு நாள் வியாபாரி ஒருவர் வினோதமான வழக்குடன் அரசவைக்கு வந்தார்.

“அரசே, ஒரு தோல் பையில் தங்க நாணயங்களை வைத்து, அதனைப் பத்திரமாக அலமாரியில் பூட்டி வைத்திருந்தேன். ஆனால் மறுநாள், அலமாரியைத் திறந்து பார்க்கையில் அந்தத் தோல் பையைக் காணவில்லை. என்னிடம் நான்கு வேலைக்காரர்கள் உள்ளனர். அவர்களுள் ஒருவன்தான் இத் திருட்டைச் செய்திருக்க முடியும்!’ என்றார்.

மந்திரக்குச்சியின் மகிமை“ஆனால், அவர்கள் நால்வரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறுகின்றார்கள். அவர்களுள் ஒருவனை நான் அடித்தாலும் மற்ற மூவரும் வேலையை விட்டுப் போய்விடுவர். அதனால் அவர்கள் நால்வரையும் தண்டிக்காத வகையில், நான் குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும்! அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்…’ என்று அரசனிடம் வேண்டினார் அந்த வியாபாரி.

அரசர், மந்திரியைப் பார்த்து, “நீங்கள்தான் இந்த வழக்கைத் தீர்த்து வைக்க வேண்டும். உண்மையான திருடனை, அப்பாவி வேலைக்காரர்களைத் துன்புறுத்தாமல் கண்டுபிடிக்க வேண்டும்’ என்றார்.

“தாங்கள் கூறியபடியே, அது நடக்கும்’ என்றார் மந்திரி.

மாலையில் அந்த நால்வரையும் மந்திரி அழைத்து, விசாரித்தார். நால்வருமே தாங்கள் நிரபராதி என்றனர்.

‘உங்களில் ஒருவர் உண்மையைக் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். எனக்கு வேறு வழியில்லை. எனது மந்திரக் குச்சிகளைப் பயன்படுத்த வேண்டியதுதான்’ என்று கூறிவிட்டு நால்வருக்கும் ஆளுக்கொரு குச்சியைக் கொடுத்தார்.

பின்னர், “இவை சாதாரணக் குச்சிகள் என்று நினைத்துவிடாதீர்கள். மந்திர சக்தி வாய்ந்தவை! இவற்றை இன்று இரவு முழுவதும் வைத்திருங்கள். யாருடைய குச்சி நான்கு அங்குலம் வளர்கிறதோ, அவர்தான் குற்றவாளி’ என்று கூறி அவர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

அன்று இரவு, உண்மையான குற்றவாளிக்கு ஒரு யோசனை தோன்றியது. தனக்குத் தரப்பட்ட குச்சியை நான்கு அங்குலம் வெட்டிவிட்டால், மந்திரி கூறியபடி அந்தக் குச்சி நான்கு அங்குலம் வளர்ந்தாலும் அது பழைய நிலையிலேயே இருக்கும் என்று எண்ணி அந்தக் குச்சியில் நான்கு அங்குல நீளத்தை வெட்டிவிட்டான்.

மறுநாள் அரசவைக்கு எல்லோரும் வந்தார்கள்.

மந்திரி எல்லோருடைய குச்சிகளையும் வாங்கிப் பார்த்தார். உண்மையான குற்றவாளியைக் கை காண்பித்தார். மற்ற மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அரசரிடம், மந்திரி, “நான் கொடுத்த குச்சிகள் மந்திரசக்தி வாய்ந்தவை அல்ல. யார் திருடன் என்பதைக் கண்டுபிடிக்கவே அவ்வாறு கூறினேன். குற்றவாளி தப்பித்துக் கொள்வதற்காக அந்தக் குச்சியில் நான்கு அங்குலம் வெட்டியிருக்கிறான். அதனால் அவனது குச்சி சிறிதாகிப் போய்விட்டது. இதைக் கொண்டுதான் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்தேன்..’ என்று கூறினார்.

குற்றவாளி தனது தவறை ஒப்புக்கொண்டு தங்க நாணயங்களைத் திருப்பிக் கொடுத்தான்.

மந்திரியின் தந்திரத்தை அரசர் மெச்சி, அவருக்குப் பரிசு வழங்கினார்.

மு.ஆறுமுக விக்னேஷ்,
8-ம் வகுப்பு, பி.ஏ.சி.எம்.மேல்நிலைப் பள்ளி,
இராஜபாளையம்.
மார்ச் 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு ஊரில் ஒரு பண்ணையார் இருந்தார். அவளுக்குச் சொத்துக்கள் ஏராளமாக இருந்தன. பண்ணையாருக்கு ஒரே ஒரு பெண்தான்! ஆனால், அந்தப் பெண் ஆணைப் போலவே வளர்ந்தாள். கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றாள். மேலும், கலை, இலக்கியம், இசை ஆகிய வற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தாள். பெண்ணுக்கத் ...
மேலும் கதையை படிக்க...
மூக்குத்தி!
சுகந்தபுரி என்ற ஊரில் வட்டிக்கடை வைத்து நடத்தினான் வேணு. அவரது மனைவி வச்சலா சிறந்த குணவதி. வேணு பேராசை பிடித்தவன். அநியாய வட்டி வாங்கினான். தர்மவானான தந்தை முன்பு செய்து வந்த அன்னதானத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தான். "பூ, கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, ...
மேலும் கதையை படிக்க...
இம்மியளவு குறைந்தால் கூட…
ஒரு அழகிய சின்னஞ்சிறு கிராமம். அந்தக் கிராமத்தைச் சுற்றி பச்சைப் பசேலென்ற வயல்கள், வெற்றிலைக் கொடிக்கால்கள், வாழை மற்றும் தென்னந் தோப்புகள்... அந்த ஊரின் செழிப்புக்குக் காரணம், ஊரை உரசிக் கொண்டு, கரைபுரண்டு ஓடும் நீல நதி. அந்த நதிக்கரையோரம் ஒரு சிறிய ஓட்டு வீட்டில், ...
மேலும் கதையை படிக்க...
பல தொழில்களை நடத்திக் கொண்டிருந்தார் ஒரு செல்வந்தர். ஒரு நாள் நள்ளிரவு. அனைவரும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். சகல உயிரினங்களும் கூட தூக்கத்தில் மூழ்கிக் கிடந்தன. ஊரே அமைதியாகக் காணப்படுகிறது. ஆனால், செல்வந்தருக்கோ தூக்கம் வரவில்லை. மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். சிறிது ...
மேலும் கதையை படிக்க...
விழுந்தபின் மனமே, விசனம் கொள்ளாதே..
யார் வேண்டுமானாலும் விழலாம். நான்கூட சமீபத்தில் விழுந்தேன். பூமிக்கு ஆகர்ஷண சக்தி அதாவது ஈர்ப்பு சக்தி உள்ளவரை விழுவதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் - நமக்கு அந்தப் பாக்கியம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று அவசரம் வேண்டாம். முந்துதல் வேண்டாம். அவரவர் ...
மேலும் கதையை படிக்க...
பொது அறிவு இல்லாதவன்
மூக்குத்தி!
இம்மியளவு குறைந்தால் கூட…
பணக்காரனுக்குத் தூக்கம் வருமா?
விழுந்தபின் மனமே, விசனம் கொள்ளாதே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)