பொன்குடமும் மண்குடமும்

 

ஓர் ஊரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள். இருவரும் தோழிகள். அவர்கள் ஒன்றாகவே இருப்பார்கள்.

பள்ளிக்கூடம் போகும்போதும், சந்தைக்குப் போகும்போதும், ஊருணிக்கு நீர் மொண்டுவரச் செல்லும்போதும் இருவரும் ஒன்றாகவேச் செல்வார்கள்.

நீர் மொள்ளச் செல்லும்போது ஒருத்தி போன் குடம் எடுத்து வருவாள். மற்றொருத்தி மண்குடம் எடுத்து வருவாள். நீர் மொண்ட பின் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் வீட்டுக்குத் திரும்பி வருவார்கள்.

ஒருநாள் இருவரும் நீர் தூக்கிக்கொண்டு தத்தம் வீட்டுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் சாலையோரத்தில் ஒரு கால்வாய் வெட்டிக் கிடந்தது.

அந்தக் கால்வையைக் கண்டவுடன் ஒருத்தி கேட்டாள்: “தலையில் உள்ள குடத்தோடு இந்தக் கால்வாயைத் தாண்டவேண்டும். உன்னால் முடியுமா?”.

அதற்கு மற்றொருத்தி பதில் சொன்னாள்: “என்னால் முடியும். உன்னால்தான் முடியாது.”

“ஏன் முடியாது?. வேண்டுமானால் இருவருமே தாண்டிப் பார்த்துவிடுவோம்” என்றாள் முதலில் கேட்டவள்.

இருவரும் அந்தக் கால்வாயைத் தாண்ட அதன் அருகில் சென்றார்கள்.

முதலில் ஒருத்தி தாவினாள். அவள் கால்வாயைத் தாண்டிவிட்டாள். ஆனால் அவள் தலையில் இருந்த பொன் குடம் கீழே தரையில் விழுந்து தண்ணீர் கொட்டிவிட்டது. குடமும் ஒரு பக்கம் நெளிந்துவிட்டது.

தொடர்ந்து தாவிய மற்றொருத்தியும் கால்வாயைத் தாண்டிவிட்டாள். அவள் தலையில் இருந்த மண்குடம் கிழே விழுந்து உடைந்து விட்டது, சுற்றிலும் தண்ணீர் சிந்தியது.

முதல் பெண் நெளிந்துபோன பொன்குடத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் தண்ணீர் மொண்டுவர ஊருணிக்குச் சென்றாள். இரண்டாவது பெண், தாயார் கோபிப்பாளே என்று பயந்து அழுது கொண்டே வெறுங்கையோடு வீட்டுக்குத் திரும்பினாள்.

கருத்துரை: பொன்குடம் உடைந்தால் பெண்ணாகவே யிருக்கும். மண் முடம் உடைந்தால் மண்ணாகிவிடும். உயந்த குணம் படைத்தவர்கள் வறுமையடைந்தாலும் பயனுள்ளவர்களாகவே இருப்பார்கள். இழிந்த குணம் படைத்தவர்கள் வறுமையுற்றால் எவ்விதப் பயனும் அல்லாதவர்களாகி விடுவார்கள்.

- நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம் – முதற் பாதிப்பு ஜனவரி 1965. 

தொடர்புடைய சிறுகதைகள்
அது ஒரு சிறு கிராமம். சுற்றிலும் வயல்கள் சூழ்ந்து ஆங்காங்கே சிறுமரத் தோட்டங்கள் நிறைந்து அந்தக் கிராமம் அழகான தோற்றத்துடன் விளங்கியது. அழகான கிராமம் என்பதைத் தவிர அதற்கு வேறு ஒரு சிறப்பும் இருந்தது. பாடலி புத்திரத்திலிருந்து புத்தகயா போவதற்கும், காசியிலிருந்து ராஜகிரி ...
மேலும் கதையை படிக்க...
ஒரு மடைவாயில் கொக்கு ஒன்று நின்று கொண்டிருந்தது, அந்த மடையில் வந்து கொண்டிருந்த ஒரு கொழுத்த மீன் அந்தக் கொக்கைப் பார்த்தது. பார்த்தவுடன் அது பயந்து அப்படியே நின்று விட்டது. அந்த மீனின் தாய், அதனிடம் கூறிய சொற்கள் அதற்க்கு நினைவுக்கு வந்தன. ...
மேலும் கதையை படிக்க...
காட்டில் இருந்த ஒரு புலிக்கு வயிற்றில் நோய் கண்டிருந்தது. அது பொல்லாத நச்சு நோய். அந்த நோய் ஏற்பட்டிருந்ததால், அதனால் எவ்விதமான உணவும் உட்கொள்ள முடியவில்லை. நாளுக்கு நாள் மெலிந்து வந்தது. அப்படியே நோய் வளர்ந்து வந்தால், தான் இறந்துபோக நேரிடுமென்ற ...
மேலும் கதையை படிக்க...
ஒலி வடிவம்:https://www.youtube.com/watch?v=HPos13bshCk ஒரு பூஞ்சோலையில் அன்னப் பறவை ஒன்று இருந்தது. அதே சோலையில் ஒரு காகமும் இருந்தது. ஒரேய சோலையில் இருந்தபடியால் இரண்டும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும். சந்திக்கும்போது தான், தான் கண்டது கேட்டது பற்றி ஒன்றிடம் ஒன்று சொல்லிப் பேசிக் கொள்ளும். ஒரு நாள் ...
மேலும் கதையை படிக்க...
மாமன்னர் அசோகர் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் அது. அசோகர் இனிமேல் போரே நடத்துவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண் டிருந்தார். போரினால் மக்கள் அடையும் துன்பங்களை நேரில் கண்டறிந்து மனம் மாறியபின் அவர் இவ்வாறு உறுதி செய்து கொண்டார். இந்தச் செய்தி ...
மேலும் கதையை படிக்க...
ஐயம் தீர்க்கும் ஆசான்
கொக்கும் மீனும்
புலியும் மருத்துவனும்
அன்னமும் காகமும்
துன்பம் போக்கும் அன்பர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)