Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பொது அறிவு இல்லாதவன்

 

ஒரு ஊரில் ஒரு பண்ணையார் இருந்தார். அவளுக்குச் சொத்துக்கள் ஏராளமாக இருந்தன.

பண்ணையாருக்கு ஒரே ஒரு பெண்தான்! ஆனால், அந்தப் பெண் ஆணைப் போலவே வளர்ந்தாள். கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றாள். மேலும், கலை, இலக்கியம், இசை ஆகிய வற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தாள்.

பெண்ணுக்கத் தகுந்த மாப்பிள்ளை தேட முயற்சி எடுத்தார் பண்ணையார்.

வரக் கூடிய மாப்பிள்ளை தன வீட்டோடு இருக்கக் கூடியவனாகப் பார்த்தார்.

பல மாதங்களாக, பல ஊர்களில் பார்த்தும், எதுவும் பொருத்தமாக அமையவில்லை. எவனுமே மாமனார் வீட்டில் தங்கும் மாப்பிள்ளையாக வர விரும்பவில்லை.

பக்கத்தூரில் பையன் ஒருவன் இருந்தான், அவனுக்கு தாய், தகப்பன் இல்லை. கல்லூரியில் படிக்க வசதி இல்லை. சிற்றப்பன் வீட்டில் தங்கி இருந்தான். அவன் வேலை தேடியும், விண்ணப்பம் போட்டுக் கொண்டு இருந்தான்.

பண்ணையார் அவனைப் பற்றி விசாரித்தார். ‘அவன் ஏழையாக இருந்தாலும், பரவாயில்லை, அவனையே ஏற்பாடு செய்து, பெண்ணை திருமணம் செய்து கொடுத்து அவனை வீட்டோடு வைத்துக் கொள்ளலாம்” என்று சிலர் கூறினார்கள்.

அந்த ஏழை இளைஞனுக்கு தன பெண்ணை திருமணம் செய்து வைத்தார் பண்ணையார்.

- மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் தொகுப்பிலிருந்து (ஜூன் 1998). 

தொடர்புடைய சிறுகதைகள்
வழி தவறிய ஆட்டுக்குட்டி, தன் தாயைத் தேடி அலைந்தது. தாயைக் காணவில்லை. களைப்பு மிகுந்தது ஆட்டுக்குட்டிக்கு. அருகில் இருந்த ஓடையில் தண்ணீர் பருகத் தொடங்கியது. அப்போது, சிறிது தொலைவில் நின்று கொண்டிருந்த ஓநாய், "ஆட்டுக் கூட்டியே!' என்று உறுமியது, ஆட்டுக்குட்டி பயந்து நடுநடுங்கிது. தண்ணீர் ...
மேலும் கதையை படிக்க...
கிராமத்திலிருந்து ஒரு விவசாயி நகரத்துக்கு வந்தான். பசி எடுத்தது. அவனுக்கு ஒரு சிற்றுண்டி விடுதிக்குச் சென்று, ஒரு தோசை கொண்டு வரச் சொல்லி, சாப்பிட்டான், பசி அடங்க வில்லை. மேலும், ஒரு தோசை கொண்டு வரச் சொல்லி, அதையும் சாப்பிட்டான். அப்பொழுதும், ...
மேலும் கதையை படிக்க...
காட்டில் படுத்திருந்த சிங்கத்திடம் போய் ஒரு கொசு பேசத் தொடங்கியது. "என்னைவிட நீ பலசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் அல்லவா? அது மிகவும் தவறு. "உன் வலிமை எப்படிப்பட்டது?. பற்களை நறநற என்று கடித்து, நகங்களால் பிராண்டுகிறாய், இது எப்படி இருக்கிறது என்றால், ஏழைப் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு சிறிய நகரத்தில் அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பலருக்குக் கல்வி கற்றுக் கொடுத்து, அதனால் கிடைக்கும் பொருளில் வாழ்கை நடத்தினார். அவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் சோமன், இளையவன் காமன். மூத்தவன் சோமன், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரையும் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு ஊரில் கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவன் ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தான். அவன் மனைவி குணக் கேடானவள். கணவன் ஏதாவது சொன்னால், அதற்கு மறுப்பு கூறுவது அவள் வழக்கம். அவனும் அவளுக்குப் பதில் சொல்லாமல், மௌனமாகவே இருந்து விடுவான். அவனுடைய தாய் இறந்து ...
மேலும் கதையை படிக்க...
எளியோரை அழிப்பது எளிது
விவசாயி அடைந்த வருத்தம்
சிங்கத்தை வெற்றி கொண்ட கொசு
ஆபத்து வேளையில் உதவியவர் யார்?
ஏட்டிக்குப் போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)