பேட்டா பிறந்த கதை

 

தொழிலில் எந்தத் தொழிலும் கேவலமானதில்லை. செய்யும் தொழிலை தெய்வமாகக் கருதிச் செய்ய வேண்டும்.

“நாங்க செய்ற இந்த கேவலமான தொழிலை எம்பிள்ளையும் செய்யக் கூடாது. அவனைப் படிக்க வைத்து வேறு உத்தியோகம் வாங்கித் தருவேன்,’ என்று சொல்லும் பெற்றோர் தான் இவ்வுலகில் ஏராளம்.

அப்படித்தான் செருப்புத் தொழில் செய்து வந்த தாமஸ் பேட்டாவின் பெற்றோரும், “”செருப்புத் தைக்கும் தொழிலை நீ செய்ய வேண்டாம்… வேறு தொழிலைச் செய்யப்பா,” என்று கூறினர்.

Betta

“”இந்தத் தொழிலை உலகம் போற்றும் உன்னதத் தொழிலாக மாற்றுவேன். நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்,” என்று பெற்றோருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு செருப்புத் தைக்கும் மேன்மையினை அறிந்து கொள்ள வெளிநாடுகள் சிலவற்றிற்குச் சென்றான் தாமஸ் பேட்டாவோ.

செருப்புத் தைக்கும் இயந்திரங்களைப் பார்த்தார். இயந்திரங்களை விட வேகமாகச் செருப்புத் தைக்கும் முயற்சியினை மேற்கொண்டார். ஊக்கமும் முயற்சியும் இருந்தால் வெற்றி கிட்டாமலா போகும்.

தாமஸ் எண்ணியபடி சில ஆண்டுகளிலே வேகமாக செருப்புத் தைக்கும் நிலையை அடைந்தார். 1905ம் ஆண்டு நண்பர் ஒருவர் கொடுத்த 50 பவுன் மூலதனத்துடன் தனது பங்கினையும் போட்டு தமது பெயரில் தொழிற்சாலை ஒன்றினைத் தொடங்கினார்.

நாளடைவில் தாமஸ் பேட்டாவின் தொழிற்சாலை விரிவாக்கம் அடைந்து வரத் தொடங்கியது. முதலில் சில்லறை வியாபாரியாக இருந்தவர் நாளடைவில் பெரிய வியாபாரியானார்.

அத்துடன் மக்களின் மனப்போக்கினை அறிந்து அவர்களுக்குப் பிடிக்கும்படியாக புது மாதிரியான செருப்புகளைத் தயார் செய்தார். அதனால் வியாபாரம் மென்மேலும் பெருகிக் கொண்டே சென்றது. தாமஸ் பேட்டா… தமது பெயரில் பாதியான பேட்டா கம்பெனி செருப்புகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டதும் தாமஸ் ஒரு புதுமுறையைக் கையாண்டார்.

ஒவ்வொரு நாட்டிற்கும் செருப்புகளைத் தயார் செய்து அனுப்புவதை விட அந்தந்த நாட்டில் ஒரு தொழிற்சாலையைத் தொடங்கி நடத்தினால் நன்றாக இருக்கும். மேலும், அந்நாட்டு மக்களுக்கு விருப்பமான முறையில் மேன்மையாகத் தயார் செய்து கொடுக்க முடியும். அதன்மூலம் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்றும் எண்ணினார். எண்ணத்தின் வெளிப்பாட்டினை பல நாடுகளிலும் “பேட்டா’ தொழிற்சாலைகளைத் தோற்றுவித்தார். அதனால் அந்தந்த நாட்டைச் சேர்ந்த பலருக்கும் வேலை வாய்ப்புகளை அளித்தார். “பேட்டா’ தொழிற்சாலை தோற்றுவித்ததோடு நிற்கவில்லை. நாட்டின் பல பாகங்களிலும் தங்களது விற்பனை நிலையங்களையும் தோற்றுவித்தார்.

இப்படிச் செய்ததன் மூலம் அவசிய சரக்கினை விற்க வேறு வியாபாரிகளைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லாமல் போயிற்று. அது மட்டுமா? பேட்டா செருப்பு வியாபாரத்தின் மூலம் ஒரு நகரையே உருவாக்கினார். லட்சக்கணக்கானோர் அந்நகரில் வசித்து வருகின்றனர். அவர்களின் அத்தியாவசியமான தேவைகளான கடைகள், ஸ்டோர்கள், ஹோட்டல்கள், சினிமா தியேட்டர்கள், நாடக அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள், கல்விக் கூடங்கள், நூலகங்கள், பேருந்து வசதிகள், திருமணக் கூடங்கள் அனைத்தும் கம்பெனி மூலமே இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. எண்ணம் – செயல் ஒன்றானால் எல்லாம் நன்றே… தாமஸ் பேட்டாவின் வெற்றி மிக மகத்துவமானது.

-ஜூலை 09,2010 

தொடர்புடைய சிறுகதைகள்
வில்லாளப்பட்டி என்ற ஊரில் பந்தா பரந்தாமன் என்ற புகழ் மிக்கப் பண்டிதர் ஒருவர் இருந்தார். அவர் கல்வி கேள்விகளில் வல்லவர். அவரை யாரும் விவாதத்தில் தோற்கடிக்க முடியாது. எந்தவிதமான விஷயங்களானாலும் அவருக்கு அத்துப்படி, எனவே, இயல்பாகவே அவருக்குச் சற்று மண்டைக் கர்வம் ...
மேலும் கதையை படிக்க...
நான் சாகமாட்டேன் !
பண்டைக் காலத்தில் சீன நாட்டில் ஒரு மூதாட்டி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். ஐவரும் ஒரே மாதிரியாக இருப்பர். உடல் தோற்றத்தை கொண்டு அவர்களை அடையாளம் கண்டு கொள்வது கடினமே. ஆனால், அவர்களின் ஆற்றலில் வேறுபாடு இருந்தது. முதல் ...
மேலும் கதையை படிக்க...
முன்னொரு காலத்தில் கள்ளுபட்டி என்ற ஊரில் சுந்தரம், பாலன் என்ற இருவர் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்தனர். ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொண்டனர். சுந்தரம் ஒரு பொருள் வாங்கினால் எப்பாடுபட்டாவது அதை விட சிறப்பான பொருளை பாலன் வாங்குவான். ...
மேலும் கதையை படிக்க...
புவியூர் என்ற நாட்டை சக்கரபாணி என்ற மன்னன் ஆண்டான். அவன் ருசி பார்த்து சாப்பிடுவதில் வல்லவன். வித விதமான உணவுகளையும், தினுசு தினுசான பழ வகைகளையும் அதிக செலவிட்டு வாங்கிச் சாப்பிடுவான். மந்திரிகளும் மன்னனுக்கு பிடித்தமான உணவு வகைகளை வெளிநாடுகளில் இருந்து ...
மேலும் கதையை படிக்க...
கெல்லீசில் பிரபு என்ற தொழிலாளி வசித்தான். அவன் மனைவி பெயர் ஜீவனா. ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தான். தினமும் அவன் தவறாமல் வேலைக்குச் செல்வான். வேலை செய்து கிடைக்கும் கூலியுடன் மாலையில் வீடு திரும்புவான். அதை அவன் மனைவியிடம் கொடுப்பான். பிரபுவுக்கு ...
மேலும் கதையை படிக்க...
பந்தா பரந்தாமன்!!
நான் சாகமாட்டேன் !
வரம்!
ஒரே புளிப்பு!?
உழைத்து வாழ்வீர்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)