பிறவிப்பகை நட்பாக முடியாது !

 

ஒரு ஊருக்கு வெளியே அரசமரம் ஒன்று இருந்தது. அதை இருப்பிடமாகக் கொண்டு, கீரிப்பிள்ளை, எலி, பூனை, ஆந்தை ஆகிய நான்கும் வசித்து வந்தன. கீரியும், எலியும், மரத்தின் வேரின் கீழ் உள்ள வளைக்குள் தனித்தனியாக வசித்தன.

பூனை, மரத்தின் அடியில் உள்ள பெரிய பொந்தில் வசித்தது. ஆந்தை, மரத்தின் உச்சியில் இருந்த ஒரு பொந்தில் வசித்தது. எலியின் நிலைமை தான் பரிதாபத்துக்கு உரியதாக இருந்தது. ஆந்தை, பூனை, கீரி இவற்றின் கண்களில் படாமல், எலி தினமும் இரை தேட வேண்டியதாயிருந்தது.

PiraviPagaiஆந்தைக்குப் பகலில் கண் தெரியாது. அதனால், இரவில் தான் இரை தேடுவது வழக்கம். பூனையோ, பகலிலும், இரவிலும், அருகில் இருந்த வயலுக்குச் சென்று பயமின்றி இரைதேடித் தின்று வந்தது.

பூனையைப் பிடிப்பதற்காக, வேடன் ஒருவன், வயலுக்குப் போகும் வழியில், கண்ணி வைத்துவிட்டுப் போனான். வழக்கம் போல், எலிகளைப் பிடிக்கச் சென்ற பூனை, வேடன் போட்டிருந்த கண்ணியில் சிக்கிக் கொண்டது. தப்பிக்க வழி இல்லை.

சிறிது நேரத்தில், பதுங்கிப் பதுங்கி, திருட்டுத் தனமாக இரை தேடி வந்த எலி, கண்ணியில் சிக்கிக் கொண்டிருந்த பூனையைக் கண்டு துள்ளிக் குதித்தது. அப்போது, ஆந்தையும், கீரியும் சேர்ந்து சென்றபோது, பூனை கண்ணியில் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தன. “இனி, பூனையைப் பற்றிய பயம் இல்லை; எலியைப் பிடித்து விடலாம்’ என்று எண்ணின.

தன்னைக் குறி வைத்து ஆந்தையும், கீரியும் வருவதைக் கண்டு எலி நடுங்கியது. கீரிக்கும், ஆந்தைக்கும் பயந்து எலி, வழியை மாற்றிக்கொண்டு, பூனையின் பக்கம் சென்றது. பூனையின் கால்கள் கண்ணியில் சிக்கிக் கொண்டிருந்த போதிலும், ஒரே அறையில் கொன்று விடுமே என்று கலக்கமுற்று, கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தது.

பூனையின் அருகில் சென்று, “”நீ என் எதிரியாக இருந்தாலும் கூட, இப்போது நீ சிக்கிப் பரிதவிப்பதைக் காணும்போது, எனக்கு இரக்கமேலிடுகிறது. என் பற்களால் இந்தக் கண்ணியை கடித்து உன்னை விடுவித்து விடுகிறேன். ஆனால், நீ விடுபட்டதும், உன்னால் எனக்கு ஆபத்து நேரிடுமோ என்று தான் பயமாக இருக்கிறது,” என்றது எலி.

“”எலியே! நாம் எதிரிகளான போதிலும், இப்போது என்னை நீ விடுவித்து விட்டால், உனக்கு நண்பனாக இருப்பேன். ஆபத்தான வேளையில் என் உயிரைக் காப்பாற்றிய உன்னை ஒருபோதும் ஒன்றும் செய்ய மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்,” என்று கெஞ்சியது பூனை.

உடனே எலி, பூனையை நெருங்கியது. அதைக் கண்ட கீரியும், ஆந்தையும், எலியைப் பிடிக்க வழியில்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று விட்டன.
எலியிடம், “”சீக்கிரம் பற்களால் கண்ணியை அறுத்துவிடு, விடியப் போகிறது வேடன் வந்து விடுவானே!” என்று அவசரப்படுத்தியது பூனை.

கண்ணிகளை கத்தரிப்பது போல், பற்களை வைத்து பாசாங்கு செய்து, வேடனின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தது எலி.

கண்ணியிலிருந்து சீக்கிரமே விடுபட்டு விடுவோம் என்ற நம்பிக்கையோடு இருந்தது பூனை.

பொழுது விடிந்தது. வேடனும் வந்து கொண்டிருந்தான்.

அவனைக் கண்ட எலி, கண்ணியின் சுருக்கை இறுகச் செய்துவிட்டு, வேடனுக்கு அஞ்சி ஓடத் தொடங்கியது.

எலியிடம், “”இது நியாயமா? உதவி புரிவதாகக் கூறி, நம்பிக்கை மோசம் செய்து விட்டாயே?” என்று பரிதாபமாகக் கேட்டது பூனை.

“”விரோதிகள் கூட, சந்தர்ப்பம் காரணமாக நண்பர்களாக ஆவார்கள். ஆனால், அத்தகைய நட்பு, உண்மையான நட்பாகவும், வெகு காலத்துக்கு நீடிக்கக் கூடியதாகவும் இருக்காது!” என்று கூறி, ஒரே ஓட்டமாக ஓடியது எலி.
பிறவியிலேயே பகைவர்களாக இருப்பவர்கள் நட்புக்கொள்ள முடியாது.

- நவம்பர் 05,2010 

தொடர்புடைய சிறுகதைகள்
நாடகம்!
இரவு பனிரெண்டு மணி இருக்கும். பரீட்சைக்கு படித்து கொண்டிருந்த சிவா புத்தகத்தை மூடி வைத்துவிட்டு படுக்கச் சென்றான். அப்போது அவன் அப்பாவின் அறைக்கு வெளியே இருந்த வராண்டாவில் நான்கு நபர்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடை பெற இருந்தனர். அவர்களது பேச்சுக்களை ஒட்டுகேட்ட ...
மேலும் கதையை படிக்க...
காசிக்குப் போறேன்
ஒருவர் காசியாத்திரை செல்ல நினைத்தார். அந்தக் காலத்தில் போக்குவரத்து வசதி இல்லாத காலம். காசிக்குப் போய் திரும்பி வரவே ஆறு மாதங்களுக்கு மேலாகலாம். வனப்பகுதி வழியாக செல்லும்போது, சிங்கம், புலி அடித்துச் செத்துப் போய் திரும்பாமலும் போகலாம். அதனால், காசி யாத்திரை ...
மேலும் கதையை படிக்க...
மனிதனுக்கு கிடைத்த ஆயுள் எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாளை எவ்வளவு காலம் வைக்கலாம், என்று சிந்தித்தார் கடவுள். எல்லாவற்றிற்கும் சமமாக முப்பது ஆண்டுகள் என்று முடிவு செய்தார் அவர். தன் இருப்பிடத்திற்கு எல்லா உயிரினங்களும் வரச் செய்தார். அவற்றைப் பார்த்து, உங்கள் ஒவ்வொருவருக்கும் முப்பது ஆண்டு ஆயுள் ...
மேலும் கதையை படிக்க...
குருசேத்திரப் போரில் அர்ச்சுனனின் அம்புகளினால் அடிபட்டுக் கீழே கிடந்தார் பிதாமகர் பீஷ்மர். அவரைச் சுற்றி கவுரவர்கள் நின்றனர். அவர்கள் பேசி விட்டு விடைபெற்றுச் சென்றவுடன் பாண்டவர்கள் வந்து அவரைச் சுற்றி நின்றனர். அப்போது பீஷ்மரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. இதைக் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு முறை புளியங்குடி காட்டில் மழை பெய்யாததால் மரம், செடி, கொடிகள் எல்லாம் வாடி கருகின. நீர் நிலைகள் வற்றி விலங்குகள் தவித்தன. பறவைகள் நான்கு திக்கிலும் பறந்து சென்று செழிப்பான இடத்தைத் தேடின. அப்படிச் சென்ற பறவைகளில் ஒரு ஜோடி கழுகுகளும் இருந்தன. இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
ரகசியத்தை சொல்லுங்க !
முன்னொரு காலத்தில் கொட்டாரப்பட்டி என்ற ஊரில் அமுதவள்ளியின் குடும்பம் வசித்து வந்தது. அழகான மாப்பிள்ளை வேணும் என தேடிப்பிடித்து ஒரு ஆண் அழகனை வெளியூரில் கண்டுபிடித்து தன் மகளை கட்டிவைத்தாள். வெகு தூரம் என்பதால் அவன், பெண் வீட்டுக்கு போனதில்லை. திடீரென்று ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு காலை நேரம். ஆண் நரியும் பெண் நரியும் ஒரு அழகிய குகைக்குள் நுழைந்தன. அந்தக் குகை பெண் நரிக்கு மிகவும் பிடித்துவிட்டது. அது ஒரு புலியின் குகை. அந்த குகையில் வசிக்கும் புலி காலை நேரமானதும் புறப்பட்டு வெளியே ...
மேலும் கதையை படிக்க...
தகுதிக்குத் தகுந்த வேலை !
மந்தாரபுரி என்ற ராஜ்ஜியத்தில் சற்குரு என்ற பண்டிதர் இருந்தார். அறிவில் சிறந்த மேதையாகக் கருதப்பட்ட அவரது குருகுலத்தில், பல மாணவர்கள் பயின்று வந்தனர். அந்த நாட்டு மன்னரும் அவரிடம் மிகவும் மதிப்பு வைத்து, அவரைத் தன் ராஜகுருவாகக் கருதி வந்தான். ...
மேலும் கதையை படிக்க...
நான்தான் பெஸ்ட் !
ஓர் ஊரில் மூன்று ரசிகர்கள் இருந்தனர். ஒருவன் உணவு உண்பதில் ரசிகத்தன்மை உள்ளவன். சாப்பாட்டில் சிறிதளவு குறை இருந்தால் கூடக் கண்டுபிடித்து விடுவான். இன்னொருவன் வாசனையின் மூலமே மனிதர்களின் குணங்களை அறிந்து சொல்லக் கூடிய ஆற்றல் படைத்தவன். மூன்றாமவன் நித்திரையின் சுகத்தை ...
மேலும் கதையை படிக்க...
அந்திமந்தாரை காட்டில் ஜெரி என்ற எலி சர்வ சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தது. அது நன்றாக விளைந்திருந்த தானியங்களையும், கனிகளையும், இளங்குருத்துக்களையும் தின்று தின்று கொழு கொழுவென்று வளர்ந்திருந்தது. எந்நேரமும் விளையாட்டும். ஆட்டம் பாட்டமும் அதன் சொத்தாக இருந்தன. ஒரு சமயம் ஜெரி தன்னை ...
மேலும் கதையை படிக்க...
நாடகம்!
காசிக்குப் போறேன்
மனிதனின் பேராசை
நல்லவர்களை கடவுள் காப்பான்!
ஜெரி சொன்னா கேட்கணும்
ரகசியத்தை சொல்லுங்க !
அழகிய குகை
தகுதிக்குத் தகுந்த வேலை !
நான்தான் பெஸ்ட் !
புத்திசாலி ஜெரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)