பருந்தும், புறாவும்

 

அந்தக் காட்டில் புறாக்கூட்டம் ஒன்று வசித்து வந்தது. ஒருநாள் எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த பருந்தின் கண்களில் புறாக்கூட்டம் தென்பட்டது. புறாக்களைப் பார்த்த பருந்துவுக்கு எச்சில் ஊறியது. ஏதாவது ஒரு புறா தனியாக வரும்; அதை எப்படியாவது தின்று விடலாம் என்று நீண்ட நேரமாக மறைந்து நின்றது. ஆனால், ஒரு புறா கூட கூட்டத்தை விட்டு தனியாகப் பிரிய வில்லை. இரை தேடும்போது கூட ஒன்றாகவே இருந்தன. எனவே, தந்திரத்தால் மட்டுமே இவை களை வெல்ல முடியும் என நினைத்து, அதைச் செயல்படுத்த ஆரம்பித்தது.

இரை தேடிக்கொண்டிருந்த புறாக்களிடம் சென்று, `அழகிய புறாக்களே! நீங்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், என்னைப்போல வலிமை வாய்ந்த ஒருவர் உங்க ளுக்குத் தலைவனாக இருந்தால், யாராலும் உங்களை எதுவும் செய்ய முடியாது’ என கனிவோடு கூறியது. பருந்தின் பேச்சில் மயங்கிய புறாக்கள், அதைத் தங்களுடைய தலைவனாக ஏற்றுக் கொண்டன.

அன்று முதல் தினமும் ஒவ்வொரு புறாவாக காணாமல் போய்க் கொண்டிருந்தன. இதனால் மற்ற புறாக்கள் கவலைப்பட ஆரம்பித்தன. பருந்தும் அவர்களோடு சேர்ந்து கவலைப்படுவதாக நடித்தது. ஆனால், கொஞ்ச நாளிலேயே புறாக்கள் காணாமல் போவதற்குக் காரணம் பருந்து தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டன. எல்லாப் புறாக்களும் ஒன்று சேர்ந்து அந்தப் பருந்தை அடித்துத் துரத்தின.

கதையின் நீதி: எதிரியைக் கூடவே வைத்துக் கொண்டால், இழப்புகள் மட்டுமே மிஞ்சும். 

தொடர்புடைய சிறுகதைகள்
முன்னொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும் முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம் கொடுக்கணும் என்றும், தன்னிடமே படித்து எங்கே தனக்கு போட்டியாக ...
மேலும் கதையை படிக்க...
முன்னொரு காலத்தில் விவசாயி ஒருவர் பூனை ஒன்றை வளர்த்து வந்தார். கிழடாகிப் போன அந்தப் பூனையால் எலிகளைப் பிடிக்க முடியவில்லை. இந்தப் பூனையால் எந்தப் பயனும் இல்லை. இதைக் காட்டில் விட்டு விடுவோம், என்று நினைத்தார் அவர். அப்படியே அதைக் காட்டில் ...
மேலும் கதையை படிக்க...
அரசன் புறா!
வேடன் ஒருவன், ஒரு ஆலமரத்தினடிக்கு வந்தான். வலையை விரித்து, அரிசியைத் தூவி வைத்தான். உடனே, அண்மையிலிருந்த ஒரு புதரில் மறைந்து கொண்டான். பறவைகள் வந்து வலையில் விழுவதை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தான். அச்சமயம், புறாக்களுக்கு அரசனான சந்திரன், தன் பரிவாரங்களுடன், இரை தேடிக்கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
சீரும், சிறப்பும், வளமும் நிறைந்த ஒர் ஊர் உண்டு. ஊரின் வட எல்லையிலே பெரிய சிவன் கோயில் ஒன்று. இருக்கின்றது. அந்தக் கோயிலை ஒட்டி கோயிலின் ஒர் அங்கம் போல மடம் ஒன்று அமைந்திருக்கின்றது. அந்த மடத்தைத் தனது இருப்பிடமாகக் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி,காட்டுல வயசான தாத்தாவும் பாட்டியும் இருந்தாங்க. தினமும் காட்டுல இருக்கிற மரங்களை வெட்டி, விறகாக்கி அதை பக்கத்து கிராமத்தில வித்து வந்தார் தாத்தா. ஒரு நாள் மதியம் ரொம்ப களச்சு போய் சாப்பிட உக்காந்தார். பாட்டி அவருக்கு கேழ்வரகு ...
மேலும் கதையை படிக்க...
கஞ்ச வியாபாரியும் முட்டாள் உதவியாளர்களும்
புத்திசாலி பூனை பிரபு
அரசன் புறா!
இரண்யகன் வரலாறு
காணாமல் போனவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)