இடையன் ஆடுகளை ஓட்டுகிறான். குகையொன்று குறுக்கிடுகிறது. குகையைக் கண்டதும் ஆடுகளை வேறு பக்கம் திருப்புகிறான். அவன் நெஞ்சம் படபடக்கிறது. ஆடுகளை வேகமாக விரட்டுகிறானே, ஏன்? புலியின் குகை அது. புலிக்கு அஞ்சி பயந்தோடுகிறான். பாவம் புலி கண்டால் அவன் ஆடுகளின் கதி என்ன?
குட்டுவன். கோதை பகைவர்க்குப் புலி போன்றவன் அவன் அரண்மனையைக் கண்டாலே பகைவர் நடுங்குவர். அவர்கள் எல்லாம் செம்மறியாட்டுக் கூட்டம் தானே. அவன் இருக்கும் திசையை திரும்பிப் பாராமல் ஓடி ஒளிவர்.
அவனுக்கு அஞ்சாதவரும் உண்டு. அஞ்சாமல் அவன் அவைக்குள் புகுந்து நிமிர்ந்து சிங்க நடைபோடும் அச் செம்மல்கள் யார்? அவர்கள் தமிழ்ப் புலவர்களே ஆவர்!
- மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்
தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு சிற்றூரில் செட்டி ஒருவன் இருந்தான். அவன் ஒரு கஞ்சன்.
அவன் மளிகைக் கடை வைத்திருந்தான். எவருக்குமே கடன் கொடுக்க மாட்டான்.
தர்மம் என்பதே அவனுக்குத் தெரியாது. ஒரு காசுகூட அவன் பிச்சை போட்டதில்லை.
செட்டிக்கு மனைவி மட்டுமே இருந்தாள். குழந்தைகள் இல்லை .
"இந்தச் செட்டி ...
மேலும் கதையை படிக்க...
ஒளவை கண்ட காட்சி அத்துடன் அழியாத சொல் ஓவியம். பிறந்த சேயைத் தாதியர் ஏந்தி நிற்கின்றனர். மகவினைப் பார்க்க ஓடோடி வருகிறான் மன்னன்.
போர்க்களத்திலிருந்து அப்படியே வருகிறான். கையிலே வேல், காலிலோ வீரக்கழல், மெய்யிலே வியர்வை, கழுத்திலே புதுப்போர்ப்புண் தலையிலே பனம் பூ ...
மேலும் கதையை படிக்க...
முடமோசி . "விறலி! ஆய் என்று வாய் மணக்க மக்கள் கூறுகின்றனர். அவன் பெயரை நீ கேட்டிருக்கின்றாய் ஆனால் அவனை நீ பார்த்ததில்லை!
விறலி: "நான் பார்க்க வேண்டும்!"
முடமோசி: அப்படியானால் நேரே நடந்து போ. அதோ ஒரு மலை தெரிகிறது பார். அதன் ...
மேலும் கதையை படிக்க...
சேரமான் இரும்பொறையைக் கண்டு பாட இளங்கீரனார் சென்றார். அவன் புலவர் முகத்தைப் பார்த்தான். ஏனோ அவனுக்குக் கபிலர் நினைவு வந்து விட்டது:
தமிழ்ப்புலம் உழுத கபிலன் இன்று இருப்பின் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று தன் ஆற்றாமையை வெளியிட்டான்.
இளங்கீரனார் கூறினார்: அரசே! சிறப்புற்ற பெரியோர் ...
மேலும் கதையை படிக்க...
பாடி வந்த பரிசிலர்க்கு யானைகள் தரப்பட்டன. இப்போது கட்டுத் தறிகளில் யானைகள் இல்லை. அங்கு காட்டு மயில்கள் குடி புகுந்தன.....
ஆய் அரண்மனையைப் பாருங்கள். அது, பொருளிழந்து பொலிவற்றுக் காட்சி தருகின்றது.
அவன் மனைவிமாரைப் பாருங்கள். அவர்களும் மங்கல நாண் மட்டுமே அணிந்து, மற்றைய ...
மேலும் கதையை படிக்க...
பால்கோவாவுக்காக உயிரை விட்டவன்
ஆடு! பாடு! அதோ…அவன் நாடு!