நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு

 

கனவிலும் நனவிலும் இளவரசியின் எழிலுருவத்தைத் தரிசிப்பதிலேயே ஆனந்தம் கண்டான்.

இளவரசியுடன் உரையாடுவது போல் – உறவாடுவது போல எண்ணி தனக்குத்தானே புலம்பிக் கொண்டான்.

விடிய விடியத் தூக்கமில்லாமல் படுக்கையில் கிடந்த நெசவாளி, விடிந்து நெடுநேரமாகியும் படுக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை.

காலையில் வேலைக்குப் புறப்பட்ட தச்சன் நண்பனுடைய அறைக்கு வந்தான்.

வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்து காலைக் கடன்களை முடித்து நீராடித் தயாராக இருக்கும் நெசவாளி அன்று அவ்வளவு நேரமாகியும் படுக்கையிலேயே கிடந்தது தச்சனுக்கு பெருவியப்பை அளித்தது.

அருகில் நெருங்கி நண்பனைக் கவனித்தான். அவன் தோற்றம் அதிர்ச்சி தரக்கூடியதாகவே இருந்தது.

கண்கள் குழிவிழுந்துக் கிடந்தன. உடல் வெளிறி இரத்தசோகை பிடித்தது போலக் காட்சியளித்தான். கை கால்கள் மெலிந்து – சோர்ந்து கிடந்தன.

முதல் நாள் இரவு அரண்மனை விழாவின் போது பார்த்த தன் நண்பனா இவன் என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது தச்சனுக்கு.

என்ன நண்பா ? இரவு என்ன ஆயிற்று. திடீரென ஏதாவது கடுமையான பிணிக்கு இலக்கானாயா ? என்று கவலையோடு கேட்டான் தச்சன்.

ஆமாம் படுமோசமான காம நோய் என்று சொல்ல வாயெடுத்த நெசவாளி பேச்சை மாற்றி, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, இரவு சரியாக உறக்கமில்லை என்று மழுப்பினான்.

அவன் சொன்ன பதிலில் தச்சனுக்கு நம்பிக்கை எழவில்லை. திரும்பத் திரும்ப விசாரித்தும் நெசவாளியிடமிருந்து மழுப்பல் பதில்தான் கிடைத்தது.

இந்தப் பதிலைக் கேட்டுத் தச்சன் சலிப்பும் மனவருத்தமும் அடைந்தான்.

நண்பா நீ பேசுகிற விதம் ஒர் உண்மை நண்பன் தன் உற்ற நண்பனிடம் பேசுவது போல இல்லை. நண்பன் மன வருத்தப்படக்கூடும் என்று அஞ்சியோ, கேலி செய்வான் என்று வெட்கப்பட்டோ தன் மனத்தில் உள்ள உண்மையினைச் வெளிச் சொல்லாமல் மறைப்பவன் – மழுப்புபவனை உண்மை நண்பன் என்று கருதமுடியாது, நீ இரவு ஏதோ சகிக்க முடியாத அளவுக்கு மன உளைச்சல்பட்டு அவதியுற்றிருக்கிறாய் என்று தெளிவாகத் தெரிகின்றது. அப்படியிருந்தும் நீ என்னிடம் உண்மையை மறைக்கின்றாய் என்றால் இனி நான் உன் நண்பன் என்றோ – நீ என் நண்பன் என்றோ வீணாக வேஷம் போட்டுக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. நான் வருகிறேன் என்ற கூறியவாறு தச்சன் மனவருத்தத்துடன் எழுந்தான்.

நெசவாளி படுக்கையிலிருந்து அவசர அவசரமாக எழுந்து தன் நண்பனின் கையைப் பிடித்து அமரச் செய்தான்.

பிறகு நண்பா என்னைத் தவறாகக் கருதிக் கொள்ளாதே உண்மை தெரிந்தால் என்னை நீ கேலி செய்வாயோ என்று வெட்கப்பட்டுத்தான் உண்மையைச் சொல்லத் தயங்கினேன். இப்போது எல்லாவற்றையும் சொல்லி விடுகிறேன் என்ற கூறி இளவரசிமீது தனக்குக் கவர்ச்சி ஏற்பட்ட செய்தியினையும் அதன் விளைவாக இரவெல்லாம் தன் மனம் பட்ட பாட்டையும் விளக்கமாக எடுத்துரைத்தான்.

நண்பன் சொன்ன தகவலை தச்சன் அனுதாபத்துடன் செவிமடுத்தான்.

பிறகு, நண்பா, உன்னைப் போன்ற ஓர் இளைஞன் தன் பருவத்தையொத்த ஒரு இளம் பெண்மீது ஆசை கொள்வது முறைகேடோ – செய்யத் தகாத தவறோ அல்ல. ஆனால் நீயோ ஒரு நெசவுத் தொழிலாளி – அவளோ ஓர் அரசிளங்குமாரி, மடுவுக்கும் மலைக்குமுள்ள இந்தப் பெரிய வேறுபாட்டை எவ்வாறு சரி செய்யமுடியும் ? தவிரவும் விஷயம் வெளிப்பட்டால் மன்னருடைய கோபத்துக்கும் தண்டனைக்கும் இலக்காக நேரிடும். நண்பா, நீ என்ன நினைக்கிறாய்? என்று கேட்டான்.

நான் என்ன நினைக்க முடியும். இளவரசி மீது எனக்கு ஏற்பட்ட பற்றை எவ்விதமும்மாக மாற்றிக் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. நீதான் இதற்கு ஏதாவது ஒரு உபாயம் செய்து தன் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என நெசவாளி மொழிந்தான்.

தச்சன் சிறிது நேரம் யோசித்தான்.

பிறகு நெசவாளியை நோக்கி, நண்பா, கவலையை விடு. எழுந்து குளித்துவிட்டு நிம்மதியாக உணவு கொள். நான் எப்பாடு பட்டாவது அந்த இளவரசியை நீ மணந்து இன்பமாக வாழ ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதி கொடுத்தான்.

நண்பனின் உறுதிமொழி நெசவாளிக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தது. ஆகவே கவலையை விடுத்து தன் அன்றாட பணிகளில் ஊக்கமுடன் ஈடு பட்டான்.

நாலைந்து நாட்களுக்குப்பிறகு தச்சன் வினோதமான கருடவாகனம் ஒன்றை தயார் செய்து எடுத்துக் கொண்டு நெசவாளியிடம் வந்தான்.

தக்கவாறு வண்ணங்கள் பூசப்பட்டு உண்மையிலேயே உயிருடன் ஒரு கருடன் நிற்பதுபோல அது காட்சியளித்தது.

மற்றொரு அற்புதத்தையும் தச்சன் அந்தக் கருட வாகனத்தில் அமைத்திருந்தான்.

தரையிலிருந்து கருடன் ஆகாயத்தில் எழும்பிச் சென்று பறப்பதற்கும் விரும்பும் போது பறக்கும் கருடனை கீழே இறங்கச் செய்வதற்கும் உரிய விசைகள் அந்தக் கருட வாகனத்தில் அமைக்கப்பட்டிருந்தன.

தச்சன் எந்த விசையை எவ்வாறு இயக்கி ஆகாயத்தில் கருடனைப் பறக்கச் செய்யலாம் என்று என்பது குறித்தும் பறக்கும் கருடனை எவ்வாறு கீழே இறக்கலாம் என்பது குறித்தும் நெசவாளிக்கு விளக்கி அந்த விசைகளை இயக்குவதற்கான பயிற்சியினையும் அளித்தான்.

நண்பா, இளவரசியை எப்படியாவது அடையவழி சொல்லுமாறு கேட்டேன் நீ இந்த விளையாட்டுப் பொம்மையைக் கொண்டு வந்திருக்கிறாயே என்று நெசவாளி கேட்டான்.

தச்சன் சிரித்துக் கொண்டு, நண்பா இந்த கருட வாகனத்தை ஒரு நோக்கத்துடன் நான் செய்திருக்கின்றேன். நம்முடைய அரசரும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் மகாவிஷ்ணுவின் தீவிரமான பக்தர்களாகும். நீ மகாவிஷ்ணு போல வேடம் தரித்துக் கொண்டு இரவு நேரத்தில் இந்த கருடவாகனத்தில் ஏறி அமர்ந்து, அரண்மனை உப்பரிக்கையில் சென்று இறங்கு.

இளவரசி இரவு நேரத்தில் உப்பரிக்கையில்தான் உறங்குகிறாள். தோழிகள் எல்லாம் அவளை விட்டு விலகி சற்று மறைவான இடத்தில் உறங்குகின்றனர்.

நீ மகா விஷ்ணுவே மேல் உலகிலிருந்து இறங்கி வந்திருப்பதாக இளவரசி நம்புமாறு நடித்து அவள் அன்பையும் காதலையும் பெறு. பிறகு அவளைக் கந்தர்வ முறைப் படி திருமணம் செய்து கொள். அதற்கு பிறகு உன் சாமர்த்தியம் * என்று கூறினான்.

நெசவாளி மகிழ்ச்சிப் பெருக்குடன் தன் நண்பனைக் கட்டிப் பிடித்துக் கொண்டான அவனுக்குப் பலவாறாக நன்றி சொன்னான்.

தச்சன் பின்னர் நண்பனிடம் விடை பெற்றுக் கொண்டு போய்விட்டான்.

நெசவாளி பரபரப்புடனும், பெருந்தவிப்புடனும் பகல் பொழுது போய் இரவு பொழுது எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து ஏக்கத்தோடு காத்திருந்தான்.

ஒருவழியாக இரவு வந்தது.

நெசவாளி எழுந்து நீராடினான். பட்டினால் ஆன அழகிய ஆடைகளை அணிந்து கொண்டான். நறுமணம் கமழும் வாசனா திரவியங்களை உடல் முழுவதிலும் பீசிக் கொண்டான். மணம் நிறைந்த மலர்களைத் தொடுத்து மாலையாக்கிக் கழுத்தில் அணிந்து கொண்டான். தாம்பூலம் தரித்து உதடுகளைச் சிவப்பாக்கிக் கொண்டான். தக்க அணிகலன்களை அணிந்து தலையில் ஒரு கிரீடத்தையும் சூட்டிக் கொண்டான்.

பிறகு கருட வாகனத்தில் ஆரோகணித்து அதனைப் பறக்க வைப்பதற்கான விசை முடுக்கினான்.

நெசவாளியைச் சுமந்து கொண்டு கருட வாகனம் ஆகாயத்தில் பறக்கத் தொடங்கியது.

கருடவாகனம் அரண்மணை உப்பரிகை மீது பறந்து கொண்டிருக்கும்போது நெசவாளி, அதனை கீழிறக்குவதற்காக விசை முடுக்கினான்.

கருட வாகனம் நெசவாளியைச் சுமந்தவாறு உப்பரிகையின் மீது இறங்கியது.

அந்தச் சமளத்தில் இளவரசி மட்டும். உறங்காமல் உட்கார்ந்திருந்தாள். அவளுக்குப் பாதுகாவலாக இருந்த தோழியர் சற்றுத் தள்ளித் தனியிடத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

வானத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த நிலா குளிர்ந்த ஒளியை எங்கும் பரப்பிக் கொண்டிருந்தது. சிலுசிலுவென வீசிய இளந்தென்றல் இதயத்தைத் தடவிக் கொடுத்தது.

இன்பகரமான காதல் நினைவுகள் உள்ளத்திலே அலை மோத இனிய கனவுகளைக் கண்டாவாறு இளவரசி அமர்ந்திருந்தாள்.

கொஞ்ச காலமாக அவள் மனத்திலே திருமண ஆசை துளிர்விட்டுக் கொண்டிருந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
நாட்டரசன்புரம் என்ற நாட்டை மார்த்தாண்டன் என்ற மன்னன் ஆண்டார். அவர் தனது நாட்டில் பல சிரமங்களுக்கிடையில் மிகப் பெரிய பூந்தோட்டம் ஒன்றை அமைத்தார். அதில் எல்லாவகையான பூச்செடிகளையும் வளர்த்தார். பல நிறத்தில் பூமரங்களையும் அமைத்தார். பூமரங்களை ஒட்டி நல்ல காய், கனிகளைத் தரும் ...
மேலும் கதையை படிக்க...
யான வேணும் !
கிருஷ்ணதேவராயருடைய மந்திரிகளில் ஒருவர் அப்பாஜி. மிகவும் புத்திக்கூர்மையுடையவர். ஒருநாள் அரண்மனைக்கு நேரம் தாழ்த்தி வந்தார். அரசர் கோபமாக, ""அப்பாஜி! ஏன் காலதாமதமாக வந்தீர்கள்?'' என்று கேட்டார். ""அரசே! புறப்படும் சமயத்தில் என் புதல்வன் ரொம்பப்படுத்தி விட்டான். அவனைச் சமாதானப்படுத்திவிட்டு வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது!'' ...
மேலும் கதையை படிக்க...
காசிக்குப் போறேன்
ஒருவர் காசியாத்திரை செல்ல நினைத்தார். அந்தக் காலத்தில் போக்குவரத்து வசதி இல்லாத காலம். காசிக்குப் போய் திரும்பி வரவே ஆறு மாதங்களுக்கு மேலாகலாம். வனப்பகுதி வழியாக செல்லும்போது, சிங்கம், புலி அடித்துச் செத்துப் போய் திரும்பாமலும் போகலாம். அதனால், காசி யாத்திரை ...
மேலும் கதையை படிக்க...
இந்திரன்தான் காரணம் !
ஒரு பிராமணன் புதிதாகத் தோட்டம் ஒன்று அமைத்தான். இரவு, பகலாக அதைக் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றி வந்தான். ஒருநாள் அந்தத் தோட்டத்தில் பசு ஒன்று புகுந்தது. அந்த பிராமணன் மிகுந்த கவனத்தோடு அருமையாக வளர்த்த மாஞ்செடி ஒன்றை மேய்ந்து விட்டது. பிராமணன் ...
மேலும் கதையை படிக்க...
பேட்டா பிறந்த கதை
தொழிலில் எந்தத் தொழிலும் கேவலமானதில்லை. செய்யும் தொழிலை தெய்வமாகக் கருதிச் செய்ய வேண்டும். "நாங்க செய்ற இந்த கேவலமான தொழிலை எம்பிள்ளையும் செய்யக் கூடாது. அவனைப் படிக்க வைத்து வேறு உத்தியோகம் வாங்கித் தருவேன்,' என்று சொல்லும் பெற்றோர் தான் இவ்வுலகில் ஏராளம். அப்படித்தான் ...
மேலும் கதையை படிக்க...
முன்னொரு காலத்தில் வீரபாண்டியபுரம் என்ற நாட்டில் மதியழகன் என்ற இளைஞன் இருந்தான். உடல் அளவில் பலசாலி இல்லை என்றாலும் புத்திசாலியான அவன் வேடிக்கையானவன், வினோதமான செயல்களை செய்வான். அவன் என்ன செய்கிறான் என்பது நிறைய பேருக்கு புரியாது. அந்த ஊரின் எல்லையில் இருந்த ...
மேலும் கதையை படிக்க...
தேரிக்குடியிருப்பு என்ற ஊரின் எல்லையில் இருந்த காட்டில் பெரிய குளம் இருந்தது, அதனை ஒட்டி சிறிய நீரோடை ஓடிக் கொண்டிருக்கும். http://media.bigoo.ws/content/gif/fishes/fishes_107.gifhttp://media.bigoo.ws/content/gif/fishes/fishes_107.gifhttp://media.bigoo.ws/content/gif/fishes/fishes_107.gif அந்த குளத்தில் நிறைய மீன்கள், நண்டுகள், மற்றும் அனைத்து நீர்வாழ் இனங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில் ராமு, சோமு, தாமு என்ற ...
மேலும் கதையை படிக்க...
பறக்கும் குதிரை !
பெர்ஷியாவின் சுல்தான் எப்போதும் விந்தையான பொருள்களைக் கண்டால், அவற்றைத் தாம் அடைய விரும்புவார். ஒருநாள் ஓர் இளவரசன் மாயக் குதிரை ஒன்றில் ஏறி அரண்மனை உப்பரிகை மேல் பறந்து கொண்டிருந்தான். ""இந்த அற்புதமான குதிரையின் விலை என்ன?'' என்று கேட்டார் சுல்தான். அந்த இளவரசன், ...
மேலும் கதையை படிக்க...
இரட்டை கன்னம் !
ரோட்டோ ஒரு விறகு வெட்டும் தொழிலாளி. மிகவும் நல்லவன். விறகுகளை அதீத லாபத்திற்கு விற்று பணம் சேர்க்க மாட்டான். கிடைத்த லாபம் போதும் என்ற நல்லெண்ணத்தால் வாடிக்கையாளர்களிடம், "நீங்கள் கொடுப்பதை கொடுங்கள்... நான் மகிழ்வோடு வாங்கிக் கொள்கிறேன்...' என்பான். ஏழைகளை துன்புறுத்த ...
மேலும் கதையை படிக்க...
மச்சு ரொம்ப ரொம்ப குறும்புக்காரப் பையன். அதேசமயம் பயங்கர புத்திசாலி. பாரதி வித்யாலயாவுல லெவன்த் படிச்சுட்டிருந்தான். அவனோட ஃப்ரெண்ட் பிந்து. இன்னும் ஒரு மாசத்தில் அவங்க ஸ்கூல்ல ஒரு பெரிய சயின்ஸ் எக்ஸிபிஷன் நடக்கப்போகுது. இந்தியா முழுவதிலும் இருந்து புதுப்புது கண்டு பிடிப்புகளோடு ...
மேலும் கதையை படிக்க...
ராஜா நல்ல ராஜா!
யான வேணும் !
காசிக்குப் போறேன்
இந்திரன்தான் காரணம் !
பேட்டா பிறந்த கதை
மதியழகனும் பூதமும்
வரும்முன் காப்போம்
பறக்கும் குதிரை !
இரட்டை கன்னம் !
இளம் விஞ்ஞானிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)