நீர்பறவைகளும் பூங்கொடிகளும்

 

ஒரு ஊரில் ஒரு குளம் இருந்தது, அந்தக் குளம் நிறையத் தண்ணீர் இருந்தது. தண்ணீர் நிறைந்திருந்தால் அந்தக் குளம் மிக அழகாக விளங்கியது. அந்தக் குளத்தில் கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற நீர்ப் பூங்கொடிகள் இருந்தன. கொக்கு நாரை போன்ற நீர்ப்பறவைகளும் இருந்தன. எல்லாம் ஒரு குடும்பம் போல் ஒன்றாக வாழ்ந்து வந்தன. அந்தக் குளம் தன உறவினர்களான பூங்கொடிகளுக்கு வேண்டிய அளவு தண்ணீர் குடிக்கக் கொடுத்து உயிர்வாழ்ச் செய்தது. அது போலவே, அன்புடன் தன்னிடமுள்ள மீன்களையும் நண்டுகளையும் நீர்ப்பறவைகளுக்கு உணவாகக் கொடுத்து உறவாடிக் களித்தது.

ஓர் ஆண்டு உரிய காலத்தில் மழை பெய்யவில்லை. ஊரே வறண்டு பொய் விட்டது. பயிர் பச்சைகளும் விளையவில்லை. அந்த குளத்தில் இருந்த நீரும் சிறுது சிறிதாக வற்றி, கடைசியில் அடித்தரையும் காய்ந்து பொய் விட்டது.

இனி அந்த குளத்தில் தங்களுக்கு உணவு கிடைக்காது என்றறிந்த பறவைகள் வேறு நீருள்ள குளத்தை நாடிப் பறந்து சென்று விட்டன.

நீர்ப் பூங்கொடிகளில் சின்னஞ்சிறிய கோடி ஒன்று, மற்ற பூங்கொடிகளைப் பார்த்து, “இந்தக் குளத்திலேயே நாம் இனியும் இருந்தால் காய்ந்து கருக வேண்டியதுதான். நீர்ப் பறவைகளை போல் நாமும் வேறு எங்காவது போய் விட்டால் என்ன?” என்று கேட்டது.

அதற்குப் பெரிய பூங்கொடி ஒன்று பதிலளித்தது:

“இந்தக் குளம் நீர் நிறைந்திருந்தபோது தாயைப்போல நம்மை ஆதரித்துக் காப்பாற்றியது. நீர்ப்பறவைகள் சிறிதுகூட நண்றியில்லாமல் துன்பம் வந்த காலத்தில் பறந்து போய்விட்டன. நாம் நன்றியற்றவர்களாக நடந்து கொள்ளக்கூடாது. காய்ந்து கருகினாலும் இந்தக் குளத்திலேயே கிடந்து சாக வேண்டியதுதான். அதற்க்கு வந்த துன்பம் நமக்கும் வரட்டும் என்று பங்கு கொள்வதுதான் உறவு” என்று கூறியது. எல்லாப் பூங்கொடிகளும் அதன் கருத்தை ஒப்புக்கொண்டன. குளத்தின் வறண்ட கரையிலேயே அவை ஓட்டிக் கிடந்து தங்கள் உறவை நிலை நிறுத்தின.

கருத்துரை: வறுமை ஏற்பட்ட காலத்தில் நீர்ப் பறவைகள் போல் பறந்து செல்பவர்கள் உறவினரல்லர். பூங்கொடிகள் போல் ஒட்டிக் கிடந்து பங்கு பெரும் இயல்பினரே உண்மையான உறவினராவர்.

- நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம் – முதற் பாதிப்பு ஜனவரி 1965. 

தொடர்புடைய சிறுகதைகள்
காட்டில் இருந்த ஒரு புலிக்கு வயிற்றில் நோய் கண்டிருந்தது. அது பொல்லாத நச்சு நோய். அந்த நோய் ஏற்பட்டிருந்ததால், அதனால் எவ்விதமான உணவும் உட்கொள்ள முடியவில்லை. நாளுக்கு நாள் மெலிந்து வந்தது. அப்படியே நோய் வளர்ந்து வந்தால், தான் இறந்துபோக நேரிடுமென்ற ...
மேலும் கதையை படிக்க...
ஒரு காட்டில் சிட்டுக் குருவி ஒன்று இருந்தது. சின்னம் சின்னமாய் அதற்கு நான்கு குஞ்சுகள் இருந்தன. ஒரு நாள் சிட்டுக் குருவி, தன் குஞ்சுகளுக்குச் சோறு ஊட்டிக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் குஞ்சுகளில் ஒன்று, "அம்மா, அம்மா என்னால் வெயிலைத் தாங்க ...
மேலும் கதையை படிக்க...
முன்னொரு காலத்தில் தேவநாதன் என்று ஒரு வணிகன் இருந்தான். அவன் ஒரு நாயை வளர்த்து வந்தான். அந்த நாய்க்கு அவன் வேளை தவறாமல் உணவு வைப்பான் ; நாள்தோறும் குளிப்பாட்டுவான், ஓய்வு நேரத்தில் அதனுடன் விளையாடுவான்; இவ்வாறு அன்புடன் அதை வளர்த்து ...
மேலும் கதையை படிக்க...
ஓர் ஊரில் ஒரு புலவர் இருந்தார். அவர் பெயர் வெள்ளுடையார் . அவர் வெள்ளையான உள்ளத்தை யுடையவராக இருந்ததாலும், எப்பொழுதும் தூய உடைகளையே வெள்ளையாகத் துவைத்து உடுத்தி வந்ததாலும் அவருடைய இயற்பெயர் மறைந்து காரணப் பெயராகிய வெள்ளுடையார் என்ற பெயரே நிலைத்து ...
மேலும் கதையை படிக்க...
ஒரு மடைவாயில் கொக்கு ஒன்று நின்று கொண்டிருந்தது, அந்த மடையில் வந்து கொண்டிருந்த ஒரு கொழுத்த மீன் அந்தக் கொக்கைப் பார்த்தது. பார்த்தவுடன் அது பயந்து அப்படியே நின்று விட்டது. அந்த மீனின் தாய், அதனிடம் கூறிய சொற்கள் அதற்க்கு நினைவுக்கு வந்தன. ...
மேலும் கதையை படிக்க...
பொன்னப்பர் ஒரு பெரிய பணக்காரர். அவர் மனைவி பெயர் தங்கம்மாள் . அவர்கள் வீட்டில் பணம் நிறைய இருந்தது. சொன்ன வேலையைச் செய்ய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் வீட்டில் பேசிச் சிரித்து விளையாட ஒரு பிள்ளை இல்லை . ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு சிறு கிராமம். சுற்றிலும் வயல்கள் சூழ்ந்து ஆங்காங்கே சிறுமரத் தோட்டங்கள் நிறைந்து அந்தக் கிராமம் அழகான தோற்றத்துடன் விளங்கியது. அழகான கிராமம் என்பதைத் தவிர அதற்கு வேறு ஒரு சிறப்பும் இருந்தது. பாடலி புத்திரத்திலிருந்து புத்தகயா போவதற்கும், காசியிலிருந்து ராஜகிரி ...
மேலும் கதையை படிக்க...
பொன்னி நாடு என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டைப் பூவேந்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். பூவேந்தனுடைய பட்டத்து அரசியின் பெயர் மலர்க்கொடி. பூவேந்தன் நாட்டை நன்றாக அரசாண்டு வந்தான். நாடு முழுவதும் நல்ல வளம் நிரம்பியதாக இருந்தது. இயற்கை ...
மேலும் கதையை படிக்க...
மாஸ்டர் கோபாலன்
"கோபாலா?" “ஏன் சார்!" "நேற்று நான் சொல்லித் தந்த பாடத்தின் பெயர் என்ன?" "அல்லாவுதீனும் அதிசய விளக்கும்" "எங்கே, அந்தக் கதையைச் சொல். பார்க்கலாம்" "சரியாக நினைவில்லை சார்" அவ்வளவுதான். ஆசிரியருக்கு வந்தது கோபம். எடுத்தார் பிரம்பை. அடித்தார் கோபாலனை. நன்றாக அடித்தார். கோபாலனுக்கு அடிப்பட்ட இடமெல்லாம் புடைத்துத் தழும் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு சிங்கம் காட்டில் அலைந்து கொண்டிருந்தது. அதற்குப் பசி! பசி யென்றால் பசி அப்படிப்பட்ட பசி! எதிரில் ஒரு விலங்கு கூட அகப்படவில்லை. வரவர இந்தக் காட்டில் எல்லா விலங்குகளும் எச் சரிக்கையாகி விட்டன. சிங்கம் வருகிற நேரம் தெரிந்து எங்கோ பதுங்கி விடுகின்றன. ...
மேலும் கதையை படிக்க...
புலியும் மருத்துவனும்
நான்கு குருவிகள்
நன்றியின் உருவம்
புகழ் பெற்ற வள்ளல்
கொக்கும் மீனும்
தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை
ஐயம் தீர்க்கும் ஆசான்
குதிக்கும் இருப்புச் சட்டி
மாஸ்டர் கோபாலன்
சிங்கத்தின் அச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)