நிலம் சொந்தமா? நிலத்திற்குச் சொந்தமா?

 

ஓர் அரசன் தம்மை ஆசிர்வதிக்க வந்த வயதான துறவியை அழைத்துப்போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டி, “”இவ்வளவும் என்னுடையது சுவாமி” என்றார்.

துறவி கேட்டார்: “”இல்லையே அப்பா! இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் சொன்னானே” என்றார்.

“”அவன் எவன்? எப்போது சொன்னான்?” என்று சீறினான் அரசன்.”"ஐம்பது வருடத்திற்கு முன்” என்றார் துறவி.

அரசர்,”"அது என் தாத்தாதான். ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் விற்கவே இல்லை”என்றான்.

“”இருபது ஆண்டுகளுக்கு முன் வேறொருவர் இது என் நிலம் என்றாரேயப்பா” எனக் கேட்க, “”அவர் என் அப்பாவாக இருக்கும்” என்றான் அரசன்.

“”நிலம் என்னுடையது, என்னுடையது என்று என்னிடம் காட்டிய அந்த இருவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள்?” என்று கேட்ட துறவிக்கு, அதே வயலுக்கிடையில் தெரிந்த இரு மண்படங்களைக் காட்டி,”"அந்த மண்டபங்களுக்குக் கீழேதான் அவர்களைப் புதைத்து வைத்திருக்கிறோம்” என்றான் அரசன்.

துறவி சிரித்துக்கொண்டே,”"நிலம் இவர்களுக்குச் சொந்தமா? அல்லது இவர்கள் நிலத்திற்குச் சொந்தமா? என் நிலம் என்றவர்கள் நிலத்திற்குச் சொந்தமாகிவிட்டனர். அவர்கள் இப்போது இல்லை. ஆனால் நிலம் மட்டும் இருக்கிறது. இது என்னுடையது எனக்கூறும் நீயும் இந்த நிலத்திற்குள் புதைக்கப்படுவாய். உன் மகன் வந்து இது என்னுடையது என்பான்” என்று கூறி முடித்தார் துறவி. அரசன் தலை குனிந்தான்.

- அ.கருப்பையா (ஜூன் 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
அமெரிக்காவில் உள்ள ஜான் என்பவரின் செல்லப் பூனையான கார்ஃபீல்டும், லண்டனில் உள்ள ஒரு பணக்கார ஸ்வீட்டுப் பூனையான ப்ரின்ஸ§ம் இடம் மாறுவதால் ஏற்படும் கலாட்டாக்களே கதை. நம் தமிழ் சினிமாவில் வருவது போலத்தான். இருந்தாலும் இடம் பெயர்வது பூனைகள் என்பதால் சுவாரஸ்யம் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு எலியும் தவளையும் மிகவும் நட்புடன் வாழ்ந்து வந்தன. எலியின் வளைக்கு அடிக்கடி தவளை வரும். தன்னிடம் உள்ள பண்டங்களைத் தவளைக்கு எலி கொடுக்கும். இதற்கு நன்றிக் கடனாகத் தன் வீட்டுக்கு வரும்படி எலியைத் தவளை அடிக்கடி அழைக்கும். ஆனால் தவளையின் ...
மேலும் கதையை படிக்க...
வைகாசி விசாக விழா. பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நான், என் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பழனிமலைப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தோம். ஆளுக்கொரு பொருளாகத் தூக்கி வந்தனர். எனக்குக் கிடைத்தது - காலை வேளை, மதியம் ஆக இரண்டு வேளை ...
மேலும் கதையை படிக்க...
வேண்டும் வேண்டும்…
அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறிவிட்டேன். வேலைக்குச் செல்பவர்களின் கூட்ட நெரிசலால், நிரம்பி வழிந்தது ரயில். எவ்வளவு மாறி விட்டது சென்னை....பூங்கா ரயில் நிலையத்திலேயே இவ்வளவு கூட்டம் என்றால் போகப் போக பெட்டி தாங்காதே.... முண்டியடித்து முன்னேறி பெட்டியின் அந்தப் பக்கத்தில் கதவு ஓரத்தில் ஓர் ...
மேலும் கதையை படிக்க...
பாணனே! நின் கையில் இலக்கணம் நிறைந்த பாழ்கொண்டாய்... ஆனால் கொடுக்கும் இயல்பினர் இலாமையால் பசியைக் கொண்டனை! சுற்றி அலைந்தும் வறுமை தீர்ப்பார் எவருமிலையே என்று சோர்வுற்று நிற்கிறாய். நின் நிலையை நான் அறிவேன்... நீ நேரே கிள்ளி வளவனைச் சென்று பார் ! ...
மேலும் கதையை படிக்க...
கில்லாடி பூனையின் கதை
எலியும் தவளையும்…
சுமை
வேண்டும் வேண்டும்…
தமிழின் ஆட்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)