நான் கத்தவே இல்லை !

 

கண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு வந்திருந்தான். விமானம் மேலே கிளம்புவதையும், வானில் வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்கிருந்த விமானி ஒருவர், “”நீங்கள் இருவரும் வாருங்கள்… இந்த விமானத்தில் ஏறி, வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம். ஆளுக்கு நூறு ரூபாய் தான்!” என்றார்.

NaanKataveyகஞ்சனுக்கு ஆர்வம் தான். இதற்காகவா இருநூறு ரூபாய் வீண் செலவு செய்வது என்று நினைத்து, “”நாங்கள் வரவில்லை,” என்றான்.

எப்படியும் அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி, “”நீங்கள் பணம் தர வேண்டாம். எந்தக் கட்டணமும் இல்லாமல், உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச் செல்கிறேன். வானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும், நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம் போட்டுவிட்டால், கட்டணமாகிய இருநூறு ரூபாயை நீங்கள் கொடுத்துவிட வேண்டும். சம்மதம் தானே?” என்றார்.

“”சம்மதம்!” என்றான் கஞ்சன். தன் மனைவியுடன், விமானத்தில் ஏறி அமர்ந்தான்; விமானம் பறக்கத் தொடங்கியது.

வானத்தில் விமானம் குட்டிக்கரணம் போட்டது. தலை கீழாகப் பறந்தது. சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த கஞ்சன், சிறு ஓசை கூட எழுப்பவில்லை. வேறு வழியின்றி விமானத்தைத் தரை இறக்கினார் விமானி.

கஞ்சனின் கையைக் குலுக்கி, “”ஆமாம், பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை நான் வானத்தில் செய்யும்போது, இதுவரை எனக்குத் தெரிந்து சிறு ஓசைகூட எழுப்பாது இருந்தீர்கள்! என் பாராட்டுக்கள். எப்படி இது உங்களால் முடிந்தது?” என்று கேட்டார் விமானி.

“”நான் கூட, ஒரே ஒரு சமயம், என்னை அறியாமல் கத்த இருந்தேன். எப்படியோ முயன்று அடக்கிக் கொண்டேன்!” என்றான் கஞ்சன்.

“”எப்போது?” என்று கேட்டார் விமானி.

“”என் மனைவி, விமானத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது!” என்றான் கஞ்சன்.

மயங்கி விழுந்தார் விமானி.

- டிசம்பர் 24,2010 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு தேவதையும், மயிலும் !
முற்காலத்தில் பறவைகள், விலங்குகள் யாவும் மனிதர்களைப் போலவே பேசும் திறன் படைத்திருந்தன. ஒருநாள் காட்டில் அவைகளுக்குள் ஒரே சண்டை. காரணம் தங்கள் தங்கள் அழகைப் பற்றிய பெருமை. அழகை ஆராதிக்காதவர்கள் யார்? இவைகளின் சண்டையை மிகவும் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு ...
மேலும் கதையை படிக்க...
இக்கதை நிகழ்ந்த புலம் மாஸ்கோ. மார்டீன் ஒரு செம்மான், ஏழை. குறைந்த வருவாயில் வாழ்ந்து வருபவன். மனைவியின் தேவைக்காக 'பர்' கோட் ஒன்று வாங்க விழைந்து இயலாமையால், அதற்குப் போதிய பண வசதி(ரூபிள்) இன்மையால் கொஞ்சம் ரொட்டி வாங்கிக் கொண்டு விட்டிற்குத் ...
மேலும் கதையை படிக்க...
பல வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடல்பகுதியில் பயங்கரமான வாள் மீன்கள் நிரம்பியிருந்தன. இவற்றின் மூக்குப் பகுதி நீளமாக வாள் போல இருக்கும். மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்களையும் படகுகளையும் வாள் மூக்கால் குத்தி, கடலில் இருந்து விரட்டும். கடற்கரைகளில் ...
மேலும் கதையை படிக்க...
தண்ணீர்… தண்ணீர் !
பெருந்துறவியான கோபோ ஓரிடத்தில் தங்க மாட்டார். ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருப்பார். ஒருமுறை அவர் கடுமையான வெயிலில் நடந்து வந்தார். தாகம் அவரை வாட்டியது. அருகில் இருந்த ஊர் ஒன்று அவருக்குத் தெரிந்தது. அங்கே சென்ற அவர் ஒரு வீட்டின் ...
மேலும் கதையை படிக்க...
உழைப்பே அதிர்ஷ்டம் தரும்
ஒரு தேவதையும், மயிலும் !
கருணை கொண்ட உள்ளம், கடவுள் வாழும் இல்லம்
சிவப்பு மலை!
தண்ணீர்… தண்ணீர் !

நான் கத்தவே இல்லை ! மீது ஒரு கருத்து

  1. Rajee says:

    Ha ha funny….nice story

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)