நல்லதென்றால் வைத்துக்கொள்…

 

ஒரு சமயம் புத்தர் தனது சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருடைய சீடர்களில் ஒருவருக்கு ஒரு கேள்வி தோன்றியது.

நல்லதென்றால் வைத்துக்கொள்புத்தரைப் பார்த்து, “பெருமானே, அடியேன் தாங்கள் சொல்லியபடி பிச்சையெடுக்கும்போது சிலர் என்னைப் பார்த்து ஏசுகிறார்கள். தகாத வார்த்தைகளைப் பேசுகிறார்கள்… இதற்கு என்ன செய்வது?’ என்று கேட்டார்.

புத்தர் பெருமான் சிரித்துக் கொண்டே, ‘நல்லதென்றால் வைத்துக் கொள்… இல்லையென்றால் அதை உடனே மறந்துவிடு’ என்றார்.

சீடரோ, “எனக்குப் புரியவில்லையே…’ என்று இழுத்தார்.

புத்தர் இதை விளக்குவதற்கு ஒரு கதையைக் கூற ஆரம்பித்தார்.

ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு செல்ல மகன். அவர்கள் வீட்டில் மாடு, கழுதை, கோழி போன்ற விலங்குகளும் பறவைகளும் இருந்தன.

ஒருநாள் அச்சிறுவன் விளையாட்டாக ஒரு கழுதையின் வாலைப் பிடித்து இழுத்துவிட்டான்.

கோபம் கொண்ட கழுதை அவனை ஓங்கி ஓர் உதை விட்டது.

விவசாயி முன்கோபக்காரர். அதனால் மகனை உதைத்த கழுதையைத் தண்டிக்க எண்ணினார்.

ஒரு பெரிய பள்ளத்தில், கழுதையைத் தள்ளினார். பிறகு அருகிலிருந்த மண்குவியலில் இருந்து மண்ணை உள்ளே தள்ள ஆரம்பித்தார்.

கழுதை யோசித்தது.

விவசாயி மண்ணைப் போடப் போட அதிலிருந்து தனது கால்களை விடுவித்துக் கொண்டு விழுந்த மண் மீது ஏறி நிற்க ஆரம்பித்தது.

இவ்வாறே, விவசாயி மண்ணைத் தள்ளத் தள்ள அதனால் உண்டான மேட்டின் மேல் கழுதை ஏறி நின்று கொள்ள ஆரம்பித்தது.

இப்படியே செய்து பள்ளம் முழுவதும் மண் நிரம்பினாலும் கழுதை மண் மீது ஏறி, ஏறி, இறுதியில் வெளியேயும் வந்துவிட்டது.

விவசாயியின் கைகளில் சிக்காமல் ஓடி மறைந்து போனது.

இந்தக் கதையைச் சொல்லி முடித்தவுடன் புத்தர் சிரித்துக் கொண்டே, “இப்போது புரிந்திருக்குமே! உனது கேள்விக்கும் விடை கிடைத்திருக்குமே’ என்று கேட்டார்.

சீடருக்கு எல்லாம் புரிந்து போயிற்று. தலையைத் தலையை ஆட்டினார்.

புத்தரும் சிரித்துக் கொண்டே தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

இளம் படைப்பாளி
ம.மனோஜ்கிரண், 6-ம் வகுப்பு, பிஷப் ஹீபர்
மேல்நிலைப் பள்ளி, தெப்பக்குளம், திருச்சி.
மார்ச் 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
ஓர் ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. இருந்தாலும் அவர் பெருங்கருமியாக இருந்தார். யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார். ஒருநாள், அந்தக் கருமி, துறவி ஒருவரிடம் சென்றார். ""சுவாமி, நான் இறந்த பிறகு என் சொத்துக்கள் அனைத்தையும் தரும காரியங்களுக்குத்தான் ...
மேலும் கதையை படிக்க...
ந்யூரான் கொலைகள்
சம்பிரதாயமான நாலு வாக்கியம் கடிதத்தின் கடைசியில். "எதற்கும் உங்கள் அப்பாவை ஒரு முறை சென்று பார்த்துவிட்டு வரவும்' என்று என் அப்பா உங்களுக்கு செய்தி அனுப்பச் சொன்னார் என்ற ரவியின் மின்னஞ்சலைப் பார்த்த போது இது உபசரிப்பு வார்த்தை என்றே அவன் ...
மேலும் கதையை படிக்க...
பூவுலகம் போ !
முன்னொரு காலத்தில் இந்திரத்யும்னன் என்ற அரசன் இருந்தான். அவன் நல்லாட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். முதுமை அடைந்த அவன் இறந்து போனான். சொர்க்கத்திற்கு வந்த அவனை இந்திரன் வரவேற்றான். ""பூவுலகில் உன் புகழ் பேசப்படும்வரை இங்கே தங்கி இருக்கலாம்!'' என்றான் இந்திரன். எண்ணற்ற ஆண்டுகள் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு அரசன் தன்னுடைய நாட்டு மக்கள் கடைப்பிடித்து வரும் பழக்கங்களும், நடைமுறைகளும் நாகரீகம் இல்லாமல், இருப்பதாக வெறுப்படைந்தான். அவற்றை எல்லாம் மாற்றி அமைத்து, புதுமையான பழக்கங்களை புகுத்த விரும்பினான். அரசன் ஒரு நாள் அமைச்சர்களைக் கூட்டிவைத்து, "ஒரு குழுவினர் முன்னேறிய நாடுகளுக்குச் ...
மேலும் கதையை படிக்க...
திருடி!
அந்தியூர் நீதிபதி வழக்குகளைச் சாமர்த்தியமாக விசாரித்து நியாயம் வழங்குவதில் சமர்த்தர். அன்று அவரிடம் வந்த வழக்கு விசித்திரமாக இருந்தது. ""ஐயா! என் கோழி இவள் வீட்டுக்கு அடிக்கடி போய்விடும். நான் வயல்வேலைக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து பார்க்கும்போது என் கோழியைக் காணவில்லை. கேட்டால் ...
மேலும் கதையை படிக்க...
வாழும்போதே புகழ்!
ந்யூரான் கொலைகள்
பூவுலகம் போ !
எதையும் எளிதில் மாற்ற முடியுமா?
திருடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)