நம்பிக்கை!

 

உலகை வெல்லும் ஆசையில் அலெக்ஸôண்டர் தமது வெற்றிப் பயணத்தில் பாரசீக நாட்டின் சிட்னஸ் நதிக்கரைக்கு வந்தபோது கடும் விஷக் காய்ச்சலால் அவதிப்பட்டார்.

அப்போது போரிட வேண்டிய எதிரி நாடான பாரசீகத்தின் அரண்மனை வைத்தியரை அழைத்து வந்தனர்.

அலெக்ஸôண்டரைப் பரிசோதித்த வைத்தியர், “”நான் அரண்மனைக்குச் சென்று மூலிகை ரசம் செய்து எடுத்து வருகிறேன்…” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அலெக்ஸôண்டரின் படைத் தளபதிகள் எவ்வளவோ சொல்லி இந்த முயற்சியைத் தடுக்கப் பார்த்தனர்.

ஒற்றர்கள், “”எதிரி நாட்டு வைத்தியர் தரும் மூலிகை ரசத்தில் விஷம் கலந்திருக்க வாய்ப்புள்ளது!” என்று எச்சரித்தனர். ஆனால் அலெக்ஸôண்டர் இதைப் பொருட்படுத்தவில்லை.

அந்த வைத்தியர் மூலிகை ரசம் கொண்டு வந்தார். அலெக்ஸôண்டர் அதைப் பருகினார்.

பின்னர், தனது படைத் தளபதியைப் பார்த்து, “”நன்று, படைத் தளபதியே, இவருக்கு சன்மானம் கொடுத்து அனுப்பு!” என்றார்.

படைத் தளபதியோ, “”மன்னா, ஏன் அந்த மூலிகை ரசத்தைக் குடித்தீர்கள்? விஷம் கலந்திருந்தால் என்ன செய்வது? நான் வேறொரு வைத்தியரை அழைத்து வருகிறேன். அவரை வைத்து பரிசோதித்து விடுவோம்” என்றார்.

“”வேண்டாம், வேண்டாம்… பாரசீக மன்னன் சுத்த வீரன்! நம்பிக்கை இல்லாமல் இந்த வைத்தியரைத் தனது அரண்மனையில் வைத்திருக்கவும் மாட்டார். மன்னரையும் நம்புகிறேன்; வைத்தியரையும் நம்புகிறேன்…” என்றார் அலெக்ஸôண்டர்.

அதற்கடுத்த நாளிலேயே அலெக்ஸôண்டரின் காய்ச்சல் நீங்கி, படையெடுப்பு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டார்.

இது அலெக்ஸôண்டரின் துணிச்சலை மட்டுமல்ல, சுத்த வீரர்களின் மேல் அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும் எடுத்துக் காட்டுகிறது!

- கலைப்பித்தன், கடலூர். (செப்டம்பர் 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
தேடி வந்த உதவி!
ஓர் அழகிய வனம். அங்கு கரடி ஒன்று தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தது. அதன் இரண்டு குட்டிகளும் "அம்மா எனக்கு பசிக்குதும்மா, சாப்பிட ஏதேனும் குடு' என்று அழுதன. பெண் கரடியானது உணவைத் தேடிச் சென்றது. இரண்டு ஆப்பிள்கள் மட்டுமே கிடைத்தன. "கண்ணுங்களா, ...
மேலும் கதையை படிக்க...
அன்று குட்டி யானை கணேசனுக்கு பிறந்த நாள்,அவனோட நண்பர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று அப்பா, அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்தான். அப்பா யானை இரண்டு வாழைத்தார்களை பறித்து கொடுத்தது. குட்டி யானை கணேசனுக்கு ஒரே சந்தோசம், அவனுடைய நண்பர்களுக்கு வாழைப்பழம் என்றால் உயிர். அதனால் ...
மேலும் கதையை படிக்க...
சந்திரமதிக்கு அடிமேல அடி வாங்குனது மாதிரி இருந்துச்சு. பத்து வருஷத்துக்கும் மேல அன்பு இல்லம் ஆஸ்டலுல வார்டனா இருக்குற அவளுக்கு இது புது அனுபவமாத்தான் இருந்துச்சு. “இத்தன வருஷத்துல ஒரு நா ஒரு பொழுது கூட பிள்ள கூட நம்மட்ட இப்பிடி ...
மேலும் கதையை படிக்க...
இயலாமை முயலாமை இல்லாத ஆமை!
அது அண்டார்டிகா பிரதேசம். அங்கு பென்குவின், பனிக்கரடி, ஆமை, ஸீல் ஆகியவை இருந்தன. அங்குள்ள பள்ளியில் அவை எல்லாமே படித்தன. டிசம்பர் மாதம் நெருங்கிக் கொண்டிருந்தது. அரை ஆண்டு முடிந்தபின்னர் அப்பள்ளியில் வருடாவருடம் ஓட்டப்பந்தயமும், மாறுவேடப் போட்டியும் வேறு சில விளையாட்டுகளும் ...
மேலும் கதையை படிக்க...
பூவுலகம் போ !
முன்னொரு காலத்தில் இந்திரத்யும்னன் என்ற அரசன் இருந்தான். அவன் நல்லாட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். முதுமை அடைந்த அவன் இறந்து போனான். சொர்க்கத்திற்கு வந்த அவனை இந்திரன் வரவேற்றான். ""பூவுலகில் உன் புகழ் பேசப்படும்வரை இங்கே தங்கி இருக்கலாம்!'' என்றான் இந்திரன். எண்ணற்ற ஆண்டுகள் ...
மேலும் கதையை படிக்க...
தேடி வந்த உதவி!
குட்டி யானை கணேசனுக்கு பிறந்த நாள்
தகர்ப்பு
இயலாமை முயலாமை இல்லாத ஆமை!
பூவுலகம் போ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)