முல்லாவிற்கு அன்றுதான் திருமணம் முடிந்திருந்தது.
புதுமனைவி மற்றும் உறவினர்களுடன் தனது ஊருக்கு புறப்பட்டார்.வழியில் பெரிய ஆற்றை கடந்து செல்லவேண்டும்!
ஒரு பெரிய படகில் மனைவி மற்றும் உறவினர்களுடன் ஆற்றை கடந்துசெல்ல புறப்பட்டார்கள்.
படகு நடுஆற்றை கடக்கும் போது பெரிய சுழல் காற்று வீசி படகு அங்கும் இங்குமாக தள்ளாடியது.
முல்லாவை தவிர அனைவரும் பயத்தால் அலறி கொண்டிருந்தனர். முல்லா மட்டும் அமைதியாக இருந்தார்.
இதை பார்த்த முல்லா மனைவிக்கு மிகவும் ஆச்சரியம்!
முல்லாவிடமே கேட்டுவிட்டாள்.
முல்லா பதில் ஏதும் பேசாமல் மனைவி அருகில் சென்று தன் இடுப்பில் இருந்த கூரிய கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்தில் வைத்தார்.
மனைவி எவ்வித சலனுமுமின்றி இருந்ததை கண்ட முல்லா மனைவியை பார்த்து இந்த அபாயகரமான கத்தியை பார்த்து உனக்கு பயமில்லையா? என கேட்டார்.
அவரது மனைவி, “கத்தி வேண்டுமானால் அபாயகரமானதாக இருக்கலாம். ஆனால் அதை கையில் ஏந்தி இருப்பவர் எனது அன்பான கணவர்” என்றாள்.
உடனே முல்லா பதிலளித்தார், “அதுபோலத்தான் ஆற்றில் உருவான சூறாவளி அபாயகரமானதாக இருக்கலாம். ஆனால் அதை உருவாக்கிய அல்லா என் மீது அன்பு கொண்டவர். நமக்கு எந்த தீங்கும் நேரிடாது என்றாராம்!!.
நம்பிக்கையே வாழ்க்கை!
தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு நாள் துருக்கி மன்னனும் முல்லாவும் அரண்மனைப் பழத்தோட்டதில் உலாவிக்கொண்டிருந்தனர்.
துருக்கி மன்னன் முல்லாவை நோக்கி, ”முல்லா அவர்களே உங்களைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுகிறார்கள்! ஒரு மனிதனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனை மனத்திற்குள் எடை போட்டுப் பார்த்து அவடைய மதிப்பு என்ன ...
மேலும் கதையை படிக்க...
நம்ம முல்லா நஸ்ருதீன் இருந்த நாட்டில் நிறைய கல்வி கற்ற அறிஞர்கள் இருந்தார்கள், அவர்களோடு மற்ற நாட்டு அறிஞர்கள் போட்டி போடுவார்கள், அதனால் மக்களுக்கு நல்ல நல்ல விசயங்கள் தெரிய வரும். சில நேரங்களில் போட்டி கடுமையாக இருக்கும், வெற்றி பெற்றவருக்கு ...
மேலும் கதையை படிக்க...
முல்லா ஒரு மாலை நேரத்தில் தன் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்று அவருடன் நேரம் போனது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார்.
இருட்டாகி விட்டது.
நண்பருக்கு மெழுகுவர்த்தியை எங்கு வைத்தேன் என்று தெரியவில்லை.
இருட்டில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தார்.
”என்ன சமாச்சாரம்”, என்று கேட்டார் முல்லா.
”மெழுகுவர்த்தியை ...
மேலும் கதையை படிக்க...
முல்லாவின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு பெண்மணி வசித்து வந்தாள். முல்லா வீட்டில் என்ன சமையல் செய்தாலும் அவள் அதை மோப்பம் பிடித்து தனது சிறிய மகளை அனுப்பி சமைத்த பொருளை கொஞ்சம் கேட்டு வாங்கி வரச் சொல்வாள்.
அவளுடைய அந்த விரும்பத்தகாத ...
மேலும் கதையை படிக்க...
ஒருநாள் முல்லாவிடம் ஒரு மனிதன் வந்தான்
""முல்லா அவர்களே! எனக்குக் கொஞ்சம் பணக்கஷ்டமாக இருக்கிறது. தயவுசெய்து ஒரு பொற்காசு கடனாகக் கொடுங்கள். கூடிய விரைவில் நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்!'' என்று அந்த மனிதன் கூறினான்.
அந்த மனிதனைப் பற்றி முல்லாவிற்கு நன்றாகத் தெரியும். கண்டவர்களிடம் ...
மேலும் கதையை படிக்க...
முல்லாவும் மூன்று அறிஞர்களும்
பக்கத்து வீட்டுக்காரியின் மோப்பம்