நகை அணிந்தனர்

 

இளஞ்சேட் சென்னி ஆற்றல் மிகுந்த அரசன். தென்பாதவரைத் தோற்கடித்தான். வட வடுகரைவாட்டி ஓட்டினான்.

பொருநன் போய் கிணயை இயக்கி அவன் புகழ் பாடினான். விலையுயர்ந்த அணிகளைக் குவித்தான் அம்மன்னன். அவ்வணிகளை சுமந்து வந்து சுற்றத்தார்க்கு அளித்தான் பொருநன் அவர்களோ அத்தகைய அணிகலன்களைப் பார்த்ததே இல்லை. எப்படி அணிவதென்று அறியாது திகைத்தனர். விரலில் அணியவேண்டியதை செவியில் அணிந்தார்கள். காதில் அணியவேண்டியதை கைவிரலில் அணிந்தார்கள். அரைக்குரியதை கழுத்திலும் கழுத்திற்குரியதை அரையிலுமாக அணிந்தனர். கண்டவரெல்லாம் கைகொட்டிச் சிரித்தனர். சீதை விட்டெறிந்த அணிகலன்களைக் கண்டெடுத்த குரங்குகள் அணிந்து அழகு பார்த்த காட்சி போல் இருந்தது.

பொருநன் முகத்தில் புன்னகை அரும்பியது. சுற்றத்தினர் வறுமைகுயர் அடியோடு தொலைந்தது.

- மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம் 

தொடர்புடைய சிறுகதைகள்
யானை ஒன்று ஊர்க்குளத்திற்கு குளிக்கச் சென்றது. சிறுவர்களும் அதன் பின்னால் திரண்டு சென்றனர். யானை, குளத்தில் இறங்கிக் குளித்தது. சிறுவர்களும் குளத்தில் இறங்கிக் குளித்தனர். யானை, அவர்கள் மேல் நீரை வாரி இறைத்தது... சிறுவர்களும் அதன் மேல் நீரை வாரி இறைத்தனர்.... யானை அவர்களைத் ...
மேலும் கதையை படிக்க...
மலையமான் திருமுடிக்காரி வரையாது கொடுக்கும் வள்ளல். அவனைக் காணச் சென்றார் கபிலர். நெஞ்சம் நெகிழ்ந்து வாழ்த்தினார்: "திருமுடிக்காரியே! நாட்டில் உனக்கு உடைமையானது எது? பண்டு தொட்டு நின் நாட்டைக் கடல் கவர்ந்து கொள்ளவுமில்லை .... பகைவர் கைப்பற்றவுமில்லை .... ஆனால், பாடி வரும் பரிசிலர் ...
மேலும் கதையை படிக்க...
"வள்ளி, நான் மன்னனைப் பார்க்கப் போகிறேன்'' "கொஞ்சம் பொறுங்கள் அத்தான். இதோ வந்து விட்டேன்.'' புலவரின் மனைவி கையில் பஞ்சாங்கத்துடன் வந்தாள். "பஞ்சாங்கம் எதற்கு?" "நல்லநாளா என்று பாருங்கள் அத்தான்" "ஏன் வள்ளி '' "எமகண்டம் இராகுகாலம் இல்லாமல் பார்த்துப் போங்கள்.'' சூலை பார்க்கவும் சொல்வாயோ?" சூலைக்கு ...
மேலும் கதையை படிக்க...
போர்ப் படை புறப்பட்டு விட்டது.... நற்கிளி தலைமை தாங்குகிறான்..... ஊழிக் காலம் போல், வானம் இருள்கின்றது. கொடிகள், திசைகளை மூடுகின்றன... ஏழுகடல்களும் அடி பெயர்ந்து செல்வது போற் படை முழங்குகின்றது... வேல்கள், விண்முகட்டைக் கிழிப்பது போன்று நீண்டு மின்னி வெட்டுகின்றன. யானைகள் முழங்குகின்றன. இடிமுழக்கம் ...
மேலும் கதையை படிக்க...
"விறலியே புறப்படு" என்றான் பாணன். "எங்கே”? என்றாள் விறலி. "போர்க்களத்திற்கு" "ஐயோ நான் மாட்டேன், பயமாயிருக்கிறது" "போர் செய்யவல்ல, பொருள் வாங்க" "செத்த வீட்டில் தருமமா? போர்க்களத்தில் பரிசா?” சாதாரண போர்க்களம் அல்ல விறலி , பெருவழுதியின் போர்க்களம். கிழப் பருந்திற்கும் விருந்தளிக்கும் பெரு வழுதி நம்மையா சும்மா விடுவான். ...
மேலும் கதையை படிக்க...
தண்புனலும் தறுகண் யானையும்…
எது உடைமை?
பஞ்சாங்கம் எதற்கு?
எதிர்த்து நிற்போர் யார்?
புறப்படு போர்க் களத்திற்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)