தேடினால் கிடைக்கும்

 

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒரு

மகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.

அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் -

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது.

அதைப் பார்த்த ஒரு மனிதன், “”மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?” என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பறவை, “”மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்…” என்றது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, “”மனிதனே, நீயும் தேடு… மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்” என்றது.

கதையைச் சொல்லி முடித்த மகான், “”நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்” என்றார்.

- ஆர்.பி.பரத்வாஜ ராவ், 7-ஆம் வகுப்பு,
ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி வித்யா மந்திர், சென்னை.
செப்டம்பர் 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
சாத்தான் குளம் என்ற ஓர் ஊரில் உழவர் ஒருவர் இருந்தார். அவர் கடுமையான உழைப்பாளி என்பதால் நல்ல கடுமையான உடல் கட்டும், பெரிய மீசையுடன் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தார். அவரது பெயர் சாத்தப்பன். அவருக்கு என்று ஊரில் இருந்த கொஞ்ச நிலத்தில் ...
மேலும் கதையை படிக்க...
யோகம்!
ஒரு குருவிடம் சீடர், ""யாருக்கும் கிடைக்காத அமிர்தம் எனக்கு வேண்டும்'' என்று கேட்டார். சீடனின் பேராசையைப் பார்த்த குரு, இவனிடம் அமிர்தம் கொடுத்தாலும் இவனால் அதை அனுபவிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டு, ஒரு குடத்தில் அமிர்தம் கொடுத்து, இதை எங்கும் தரையில் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு நாள் துருக்கி மன்னனும் முல்லாவும் அரண்மனைப் பழத்தோட்டதில் உலாவிக்கொண்டிருந்தனர். துருக்கி மன்னன் முல்லாவை நோக்கி, ”முல்லா அவர்களே உங்களைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுகிறார்கள்! ஒரு மனிதனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனை மனத்திற்குள் எடை போட்டுப் பார்த்து அவடைய மதிப்பு என்ன ...
மேலும் கதையை படிக்க...
கங்கை நதிக்கரையில் துறவி ஒருவர் கடினமான தவத்தில் ஈடுபட்டிருந்தார். அவருடைய தவத்தின் நோக்கம், தேவலோகம் போகவோ, பெரிய பதவி பெற வேண்டும் என்பதோ அல்ல! அதற்கு மாறாக, தமக்குப் பயன்படாத இந்த உடல், பிராணிகளுக்காகவாவது பயன்படட்டுமே என்ற எண்ணம் கொண்டிருந்தார். அவரைச் சுற்றிலும் கழுகுகளும், ...
மேலும் கதையை படிக்க...
யாது உம் ஊரே!
மின்தூக்கி செயல்படாததால், பதினாறாவது மாடி ஏறி முடித்தபோது அன்னா சற்று நின்று மூச்சு வாங்கினாள். அடுக்ககத்திலிருந்து அரிதாகவே அம்மா வெளியே வருவதில் வியப்பே இல்லை. அவள் நின்ற தளத்துக்கு மேலாகவும் அறுபது வயது கடந்தவர்கள் வீட்டுக்குள்ளேயே கிடந்தார்கள். இங்கு கடைசியாக அவள் ...
மேலும் கதையை படிக்க...
சாத்தப்பனும், குண்டோதரன் பேயும்
யோகம்!
மன்னரின் மதிப்பு
துறவியின் பொறுமை
யாது உம் ஊரே!

தேடினால் கிடைக்கும் மீது 5 கருத்துக்கள்

 1. MALAIMALAR says:

  very nice story

 2. priya.G says:

  நைஸ் ஸ்டோரி..ஆல் தி பெஸ்ட் ..

 3. priya.G says:

  நைஸ் ஸ்டோரி..ஆல் தி பெஸ்ட் ..யு கிவ் பெஸ்ட் ஸ்டோரி அகைன் அண்ட் அகைன்…

 4. s.Tamilarasan says:

  nice story all the best…

 5. AN.Sreedevi says:

  கதை சூப்பர். தொடர்ந்து எழுதுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)