திரைப்படங்கள்

 

அண்மையில் வந்த திரைப்படத்தில் ஒரு காட்சி, வில்லன் ஒருவன் பதக்கத்தைப் பறித்துக்கொண்டு ஒடுகிறான். பறிகொடுத்த நாயகன் எப்படி மீட்பது என்று யோசித்தான அன்று இரவு வில்லன் வீட்டில் சன்னல் வழியே கம்பியைவிட்டுத் தொங்கிய சட்டையை இழுத்தான். அதில் பதக்கம் இருந்தது; மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான்—இதுதான் காட்சி.

அடுத்து ஒரே நாள் இரவில் சென்னை தியாகராய நகரில் பல இடங்களில் திருட்டு—எப்படி? கம்பிகளை சன்னல் வழியே விட்டு பேன்ட், சட்டை, பட்டுப்புடைவை விலை உயர்ந்த துணிமணிகள் எல்லாம் கனவு போயின. இப்படித்தான்—

சுமார் 85 ஆண்டுகட்கு முன்பாக, மேலை நாட்டிலே லண்டன் மாநகருக்கு அருகிலே ஒரு பெரிய ரயில் கொள்ளை நடந்தது. அதில் சுமார் 40 பேர் குதிரைமீது வந்து இரயிலை வழிமறித்து நிறுத்தித் துப்பாக்கியைக் காட்டிப் பயணிகளிடம் உள்ள பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இரயில்வே போலீசார் எவ்வளவோ முயன்றும் ஐந்தாறு மாதங்களாகியும் துப்புத் துலங்கவில்லை. கொள்ளையரையோ, பொருள்களையோ கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் மிகவும் கஷ்டப்பட்டு எப்படியோ போலீசார் அவர்களைப் பிடித்து வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த நாற்பது கொள்ளையரில் அனைவரும் 18 முதல் 21 வயதிற்குட்பட்ட இளைஞர்களே! அவர்களில் வசதியான குடும்பத்துப் பிள்ளைகள், படித்தவர்கள், செல்வச் சீமானின் பிள்ளைகள், ஏன் வழக்கறிஞரின் பிள்ளையும் இருப்பதைக் கண்ட நீதிபதி, பெருவியப்பு அடைந்தார். அவர்களை விசாரிக்கவும் செய்தார்.

“நீங்கள் பரம்பரைத் திருடர்களல்ல, திருடித்தான் வாழவேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களும் அல்ல. அப்படி இருக்கும்போது, எப்படி உங்களுக்கு இந்த எண்ணம் உணடாயிற்று?” என்று கேட்டார் .

அதற்கு அவர்கள், “அண்மையில் புகழ்பெற்ற ரயில் கொள்ளை’ என்ற படக்காட்சியைப் பார்த்தோம், அதிலிருந்து நாமும் அப்படிக் செய்தால் என்ன? வெற்றி பெற முடியுமா? என்று சோதித்துப் பார்த்தோம். வெற்றியும் பெற்றோம்” என்றனர். இதிலிருந்து நாடு திருந்த வேண்டுமானால் முதலில் நமது திரைப்படங்கள் திருந்தவேண்டும் என்பது பல்வேறு சீர்கேடுகளுக்குத் திரைப்படங்களும் காரணமாகின்றன என்பது நன்கு தெரிகிறது. இதற்கு என்ன செய்யலாம்!

- அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை 

தொடர்புடைய சிறுகதைகள்
அவள் கூறினாள். ஆம்! மயிலின் சாயலையுடைய அழகிய பெண்ணொருத்தி ஒரு ஆடவனுடன் செல்வதைக் கண்டேன்” என்று என்ன பண்பு? ஆண், ஆணை மட்டுமே கண்டான். அருகில் சென்ற பெண்ணைக் காணவில்லை. பெண். பெண்ணை மட்டுமே கண்டாள். உடன் சென்ற ஆணைக் காணவில்லை. அவர்களிடம் அத் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு நல்ல குடும்பம். அவர்களுக்கு ஒரே பையன். பெற்றோர் அவனுக்கு நல்ல இடத்தில் மணமுடிக்க எண்ணினர். பையனோ தாசி வீட்டில் ஒரு பெண்ணைக் காதலித்தான். பலத்த எதிர்ப்புக்கிடையே அவளைத் திருமணமும் செய்துகொண்டு, பெற்றோருடனேயே நல்ல முறையில் குடும்பம் நடத்திவந்தான். அந்தச் சமயத்தில் ஒருநாள், ...
மேலும் கதையை படிக்க...
ஐப்பசி கார்த்திகை அடைமழை பெய்து ஒய்ந்தது. அடுந்து மார்கழியில், ஓணான் கொடி ஒன்று முளைத்த வேகத்தில் பக்கத்திலுள்ள பனைமரத்தின்மேல் பற்றிப் படர்ந்து வளைந்து வளைந்து மேலே சென்று ஓங்கிப் படர்ந்தது. தை மாதத்தில், பனைமரத்து மட்டைகளையும் ஒரு சுற்றுச்சுற்றி மேலும் வளைந்து வளர்ந்து ...
மேலும் கதையை படிக்க...
ஒரு பெரிய குடும்பத்திலே பெருஞ் செல்வனாக வாழ்ந்த தலைவன், நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையிலே கிடந்தான். அவனுக்குப் பல பிள்ளைகள், பேரன் பேத்திகள். எல்லோரும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். “அப்பா எனக்கு என்ன சொல்கிறீர்கள்? அப்பா எனக்கு என்ன சொல்கிறீர்கள்? தாத்தா எனக்கு... ...” அவர் ...
மேலும் கதையை படிக்க...
கவிராஜர் ஜெகவீர பாண்டியனார் ஒரு பெரும் புலவர். கட்டபொம்மன் மரபிலே வந்தவர். மிகவும் சிறந்து விளங்கிய தமிழ்ப் பெருங்கவிஞர். ஒருநாள் மதுரையிலே நான் அவருடன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், சிற்றுாரிலிருந்து அவரைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவரைக் கண்டதும் ஜெகவீர பாண்டியர் என்னோடு பேசுவதை ...
மேலும் கதையை படிக்க...
தமிழ் எழுத்துக்களில் ‘ழ’ - என்னும் எழுத்து தமிழுக்குச் சிறப்பு தருவது. தமிழ் மொழியைத் தவிர, பிற எந்த மொழியிலும் ‘ழ’ என்று உச்சரிக்கக்கூடிய எழுத்து கிடையாது. அதனால் புலவர் பெருமக்கள் ல, ள என்ற எழுத்துக்களோடு இதனைச் ‘சிறப்பு ழகரம்’ என்றே ...
மேலும் கதையை படிக்க...
ஒரு கிழவன் தான் தேடிய சிறு பொருளைத் தானும் உண்ணாமல், பிறர்க்கும் வழங்காமல் பொன்கட்டியாக, பொரிவிளங்காயளவு உருட்டி, அடுக்குப் பானை இருக்கும் இடத்தின் அடியில் புதைத்து வைத்திருந்தான். அவன் மக்களிடமும்கூட இதைச் சொல்லி வைக்கவில்லை. சொன்னால் சொத்துப் பறிபோய்விடும் என்பது அவன் கருத்து. திடீரென ...
மேலும் கதையை படிக்க...
மழைக்காகப் பயந்து மரத்தடியில் ஒதுங்கி நின்றது ஒரு குரங்கு. அப்போது அம் மரத்தில் கூடு கட்டிக்கொண்டு வாழ்ந்துவரும் தூக்கணாங் குருவி, குரங்கைப் பார்த்து, “அண்ணே, நீ உருவத்தில் மனிதனைப் போலவே இருக்கிறாயே, உன் கை கால்களை உபயோகித்து ஒறு நல்ல குடிசை உனக்காகக் ...
மேலும் கதையை படிக்க...
முப்பது வயதான தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடப் புறப்பட்ட ஒர் அந்தணனுக்கு கட்டுச் சோறு கட்டிக்கொடுத்து வழியனுப்பினாள் அவன் மனைவி. நடையாய் நடந்து, அலைந்து அலுத்துப்போய், ஒரு வீட்டுத் திண்ணையிலே அந்தணன் தங்கியபோது, தன் கவலையையெல்லாம் அந்த வீட்டுக்காரனிடம் சொன்னான். அது கேட்ட ...
மேலும் கதையை படிக்க...
சிந்தனை ஒரு செல்வம். மக்கள் சிந்திக்கக் கற்றக்கொள்ளவேண்டும். சிந்திக்கத் தெரியாதவன் வறுமை வாய்ப் பட்டவனே! இறைவன் அருளை அடையவும் சிந்தனை தேவை என்பதை நன்கு அறிந்த ஒருவர் இப்படிக் கதறுகிறார் - ‘இறைவா, உன்னை சிந்தித்தறியேன். அரைக்க மும் தரிசித்தறியேன். ஒருநாளும் வந்தித்தறியேன், ...
மேலும் கதையை படிக்க...
சங்ககால நூல்களில் ஒரு காட்சி
எருமைமாடு சொல்வதை நம்ப வேண்டாம்
பனைமரமும் ஒணாங்கொடியும்
எனக்கு என்ன சொல்கிறீர்கள்?
கல்வியும் கல்லாமையும்
வாழைப்பழம்
பொன்னும் பொரி விளங்காயும்
குரங்கும் குருவியும்
மாப்பிள்ளை தேடுதல்!
சிந்தனை செல்லும் வழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)