Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

திருடி!

 

அந்தியூர் நீதிபதி வழக்குகளைச் சாமர்த்தியமாக விசாரித்து நியாயம் வழங்குவதில் சமர்த்தர். அன்று அவரிடம் வந்த வழக்கு விசித்திரமாக இருந்தது.

திருடி!“”ஐயா! என் கோழி இவள் வீட்டுக்கு அடிக்கடி போய்விடும். நான் வயல்வேலைக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து பார்க்கும்போது என் கோழியைக் காணவில்லை. கேட்டால் தெரியாதென்கிறாள். அந்தக் கோழி வாங்கின கடனே இன்னும் அடையவில்லை! அதற்குள் நஷ்டப்படும்படி ஆகிவிட்டது. நீங்கதான் நல்லபடி தீர்ப்பு சொல்ல வேண்டும்!” என்று முறையிட்டாள் ஒருத்தி.

“”இதற்கு உன் பதிலென்ன?” என்று மற்றவளைக் கேட்டார் நீதிபதி.

“”ஐயா! இவள் கோழி என் வீட்டுக்குள் வந்து அடிக்கடி என் கோழிக்கு வைத்திருக்கும் தீவனத்தைத் தின்னும். நானும் விரட்டி இருக்கிறேன். இன்றைக்கு அது வரவில்லை. அதைக் காணவில்லை என்றால் அதற்கு நானா பொறுப்பு!” என்று கோபமாக பதில் சொன்னாள் அவள்.

“”சரி. நீங்கள் போகலாம். அம்மணி! சாட்சி இல்லாமல் குற்றம் நிரூபணமாகாது!” என்று சொல்லி இருவரையும் அனுப்பிவிட்டார் நீதிபதி.

கோழித்திருடி திமிராக நடந்துபோனாள். குற்றவாளி அவள்தான் என்று நீதிபதிக்குத் தெரிந்தது. ஆனால், அதை வைத்துத் தீர்ப்பு சொல்ல முடியாதே!
வழியில் ஒரு திண்ணையில் நான்கு பேர் சொக்கட்டான் ஆடிக்கொண்டிந்தனர்.

“”இன்றைக்கு மன்றத்தில் கோழியைத் திருடவில்லை என்று சாத்தித்துவிட்டு திமிராக நடக்கிறாள் பார்! அவள் தலையில் ஒட்டியிருக்கும் கோழி இறகை நீதிபதி பார்த்திருந்தால் என்ன ஆயிருக்கும்?” என்றான் ஒருவன் மெல்லிய குரலில்.

கோழி திருடிக்குப் பக்கென்றாகிவிட்டது. மெதுவாகப் பின் தலையைத் தடவுவது போல் தட்டிவிட்டாள். சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த காவலர்களில் இருவர் ஓடிவந்து அவளைப் பிடித்தனர்.

நீதிபதி தலைப்பாகையை எடுத்துவிட்டு அவள் முன் வந்தார். அவள் வெலவெலத்துப் போய் குற்றத்தை ஒப்புக்கொண்டாள்.

கோழிக்கான தொகையை அபராதத்தோடு கோழியைப் பறிகொடுத்தவளிடம் கொடுத்து மன்னிக்கும்படி வேண்டினாள்.

பொய்யும் திருட்டும் முடிவில் அவமானத்தையே தரும். 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரே பொருள் !
முன்னொரு காலத்தில், அரபு நாட்டில் மிகப் பெரிய செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். மூவருமே அவருக்கு வணிகத்தில் உதவி செய்தனர். ஆனால், அவரோ தன் நம்பிக்கைக்கு உரிய அடிமை சொல்வதைக் கேட்டு நடந்தார். அந்த அடிமையின் அறிவுரைப்படி ...
மேலும் கதையை படிக்க...
பட்டினப்பாக்கத்தில் ஜம்பு என்ற செல்வந்தர் இருந்தார். அவரிடம் ஏராளமான செல்வம் இருந்தது. இருப்பினும் சரியான கஞ்சன். எங்குச் சென்றாலம் அவர் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட அழகான வண்டியில் அமர்ந்து செல்வார். ஒரு முறை, வெளியூர் சென்றிருந்த அவர் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வண்டிச் ...
மேலும் கதையை படிக்க...
முன்னொரு காலத்தில் திருடன் ஒருவன் இருந்தான். தன் மகன் ராசப்பாவையும் திருட்டுத் தொழிலில் வல்லவனாக வளர்த்தான். திருடன் இறக்கும் நேரம் வந்தது. ""மகனே! நீ திருட்டுத் தொழிலில் மேலும் மேலும் வல்லவனாக வேண்டும். நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொள். எங்கேனும் பக்திச் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு எலியும் தவளையும் மிகவும் நட்புடன் வாழ்ந்து வந்தன. எலியின் வளைக்கு அடிக்கடி தவளை வரும். தன்னிடம் உள்ள பண்டங்களைத் தவளைக்கு எலி கொடுக்கும். இதற்கு நன்றிக் கடனாகத் தன் வீட்டுக்கு வரும்படி எலியைத் தவளை அடிக்கடி அழைக்கும். ஆனால் தவளையின் ...
மேலும் கதையை படிக்க...
சரியான பாதை!
""பானு... அந்த குழந்தையை ஊருக்கு அனுப்பிடலாமா?'' மனசாட்சியின் வேர் ஆழமாய் ஓடி, இதயத்தின் அணுவை அறுக்கத் தொடங்கிய நொடி, இவ்வாறு கேட்டான் சிவா. ரிமோட்டை அமுக்கி, "டிவி'யை ஊமையாக்கி, இவன் புறமாய் திரும்பினாள் பானு... ""அனுப்பிடுங்க... ஆனா, இன்னொரு ஆள் கிடைக்கற வரை, நிச்சயமா ...
மேலும் கதையை படிக்க...
ஒரே பொருள் !
கஞ்ச மகா பிரபு
திருந்திய திருடன்
எலியும் தவளையும்…
சரியான பாதை!

திருடி! மீது ஒரு கருத்து

  1. varrsha a/p sureia kumar says:

    சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)