தலைவனின் வலிமை

 

பகைவர் அதியமானை எதிர்க்கத் துணிந்து விட்டனர். அவ்வையாருக்கு அவர்கள் மீது இரக்கம் பிறந்தது. ஆதலால் இந்த எச்சரிக்கை விடுத்தார்.

பகைவர்களே! போருக்கு வராதொழிவீர். வந்தால், ஒழிவீர் என்பது உறுதி!

எங்கள் படையில் உள்ள ஒரு மறவனுக்கு நீங்கள் ஈடாக மாட்டீர்.

அம்மறவனைப் பற்றி ஒரு வார்த்தை : ஒரே நாளில் எட்டுத் தேர்களைச் செய்யும் தச்சன், ஒரு மாதம் முயன்று ஒரு தேர்க்காலைச் செய்தான் என்றால், அத் தேர்க்கால் எப்படிப் பட்டதாயிருக்கும்?

இருநூற்று நாற்பது தேர்க்காலின் பலத்தைக் கொண்டதாயிருக்கும். அப்படிப்பட்ட தேர்க்கால் உங்கள் மீது பாய்ந்து வந்தால் நீங்கள் என்ன செய்வீர்?

அந்தத் தேர்க்கால், போன்றவன் எங்கள் படைத்தலைவன். போரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். போர்க்கு விருப்பமாயின், வருக!”

- மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம் 

தொடர்புடைய சிறுகதைகள்
அன்னச் சேவலே! அன்னச் சேவலே! ஒன்று கேள்! நீ , நின் மனைவியோடு, அதிகாலைப் பொழுதில் இருபுறமும் சுடர் தோன்றும் குமரியில் விருந்தருந்தி, வடதிசைக் கண்ணுள்ள இமய மலைக்குச் சென்றால், வழியிலே சோழ நாடு தெரியும். அதனைக் கண்டதும், அங்கே இறங்கிக் ...
மேலும் கதையை படிக்க...
பண்டைத் தமிழகம். அப்பப்பா! பொறி பறக்கும் பாலை நிலம்; போக முடியாத நீண்ட வழி கடக்க முடியாத பெருங் காடுகள். அக்காடுகளின் இடையே, வில்லேர் உழவர் வாழ்கின்றனர். அவர்கள் யாருக்கும் அஞ்சாத மறவர்கள். ஆறலைகள்வர். வழிப்பறி செய்வதே அவர்கள் தொழில். மக்கள் பொருள் ...
மேலும் கதையை படிக்க...
வெகு தொலைவிலிருந்து வருகிறான் பாணன். யாழைத் தன் மார்போடு அணைத்தபடியே நடந்து வருகிறான். விறலியோ பின்னால் மெல்ல நடந்து வருகிறாள். ஆய் வள்ளல் முன் நின்று யாழை மீட்டி இன்னிசை எழுப்பினான். விறலியோ கான மயிலெனக் களிநடனம் ஆடினள். மகிழ்ந்தான் வள்ளல் ஆய். ...
மேலும் கதையை படிக்க...
வாரி வழங்கும் வள்ளல் எவ்வி. அவனது வள நாட்டில் ஆற்றின் இரு புறமும் மதகுகள். ஆற்று நீர் சல சலவென்று ஓடிக் கொண்டிருக்கும். கொடு வெயிலில் உழவர் நெல்லறுப்பர். பரதவர் மதுவுண்டு கடல் வேட்டையாடுவர். நிலாவில் மங்கையரோடு கூத்தாடுவர். பரதவ மகளிர் ...
மேலும் கதையை படிக்க...
கிள்ளி வளவனுக்குக் கோபம் வந்தது. தன் பகைவனான மலயமானுடைய மக்களை, கொலையானைக் கால்களில் இடறவைத்துக் கொல்ல முயன்றான்: நிறுத்து!, என்ற ஒரு குரல் கேட்டது! நிமிர்ந்து வாளுடன் திரும்பினான். கோவூர் கிழார் நின்றிருந்தார். ”உன் மரபு எது?” என்று கேட்டார், கிழார். "கிள்ளிக்கு ஒன்றும் விளங்கவில்லை! புறாவுக்காகத் தன்னையே ...
மேலும் கதையை படிக்க...
அன்னச் சேவலே கேள்!
கொடையாளன் பண்பு
உன் திரு உருவம்
கயல் மீன் கொடி
புறாவும் புதல்வரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)