ஞானகுரு!

 

ஒரு காட்டில் சிங்கம், கரடி, நரி மூன்றும் நண்பர்களாக, ஒன்றாக வசித்தன. வேட்டையாட ஒன்றாகவே செல்லும். வழக்கம் போல் ஒருநாள், மூன்றும் வேட்டைக்குக் கிளம்பின. கிடைக்கும் இரையில் மூவரும் சமமாக பங்கிட்டுக் கொள்வது என்பது ஏற்பாடு. பாதையில் ஒரு மான் குறுக்கிட்டது. சிங்கம் ஒரே அடியில் அதை அடித்து வீழ்த்தியது.

GjanaGuru“”இந்த மானை பங்குப் போடு!” என்று கரடிக்கு உத்தரவிட்டது சிங்கம்.
கரடி மிகவும் சிரமப்பட்டு அந்த மானை மூன்று பங்காக்கியது. “”இதோ பங்குகள் தயார்!” என்றது. சிங்கத்திற்கு கோபம் வந்துவிட்டது.

“”சமமா? எது சமம்? யாருக்கு யார் சமம்?” என்று கேட்டு, கரடி மீது பாய்நது குதறியது சிங்கம். ராஜ மரியாதை தெரியாத உனக்கு இந்தக் கதிதான்,” என்றது சிங்கம்.

பின்னர் நரியைப் பார்த்து கட்டளையிட்டது சிங்கம். “”இதைப் பங்கு போடு!”
நரி சிரமப்படவில்லை. எல்லாப் பங்கையும் சிங்கத்தின் முன்பே குவித்தது. தனக்கு முன்பு ஒரு மிகச் சிறிய துண்டை மட்டும் வைத்துக் கொண்டது. “”அரசே! இதோ தங்கள் பங்கு!” என்றது நரி.

சிங்கத்திற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. “”சபாஷ் நரியே! உன் புத்திசாலித்தனத்தைப் பாராட்டுகிறேன். என்ன பணிவு. ராஜ மரியாதை என்ன என்பது உனக்குத் தான் தெரிந்திருக்கிறது. நீ மகா மகா புத்திசாலிடா… இந்த பாடத்தை எல்லாம் எங்கேடா கத்துக்கிட்ட!” என்று சிங்கம் பாராட்டு மழை பொழிந்தது.

நரி பணிவுடன் சொன்னது! “”அரசே! நான் பிறவியிலேயே புத்திசாலி இல்லை. இப்போதுதான் நான் புத்திசாலியானேன். தங்கள் பாராட்டுகளையும் பெறுகிறேன்.”

“”அதெப்படி திடீரென்று இப்பொழுதே புத்திசாலியானாய்?”

“”பிரபுவே! சற்று முன்பு தான் புத்திசாலியானேன். இதோ செத்துக் கிடக்கிறதே, இந்தக் கரடிதான் என் ஞான குரு!” என்றது நரி.

“ஹ… ஹ… ஹா…’ என்று சிரித்தது சிங்கம்.

- ஆகஸ்ட் 13,2010 

தொடர்புடைய சிறுகதைகள்
சோலையூர் என்ற செழிப்பான ஊர், அங்கே அருகில் இருந்த மலையில் இருந்து ஓடிய சிற்றாறு உதவியால் மக்கள் விவசாயம் செய்து பிழைத்து வந்தார்கள். அதே ஊரில் விரைவில் பணம் சம்பாதிக்க நினைத்த சிலர், காட்டில் இருந்த மரங்களை தொடர்ந்து வெட்டியதால் சில ...
மேலும் கதையை படிக்க...
ஓரிடத்தில் பெரிய கட்டிடம் ஒன்று கட்டும் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. மதிய உணவு உண்ணுவதற்காக வேலைக்காரன் வெளியே சென்றிருந்த சமயம், சில குரங்குகள் அந்த இடத்திற்குக் வட்டமாக வந்தன. கட்டிடத்திற்கான மர வேலை நடைபெற்று வந்த இடத்திற்குக் குரங்குகள் போய்ச் சேர்ந்தன. அங்கே ஒரு பெரிய ...
மேலும் கதையை படிக்க...
முன்னொரு காலத்தில் கள்ளுபட்டி என்ற ஊரில் சுந்தரம், பாலன் என்ற இருவர் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்தனர். ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொண்டனர். சுந்தரம் ஒரு பொருள் வாங்கினால் எப்பாடுபட்டாவது அதை விட சிறப்பான பொருளை பாலன் வாங்குவான். ...
மேலும் கதையை படிக்க...
ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான்.அவனுக்கு பக்கத்து ஊரில் பெண்ணெடுத்து திருமணம் செய்து வைத்தனர். வியாபார விஷயமாக அவன் வெளியூர் சென்று விட்டதால் திருமணம் முடிந்து பலநாள் ஆகியும் அவனால் தன்னுடைய மாமியார் வீட்டுக்கு விருந்துக்குப் போக இயலவில்லை. பின்னர் ஒருமுறை அவன் வியாபாரம் ...
மேலும் கதையை படிக்க...
வசியமந்திரம் !
செம்பனூரில் தாமு என்ற இளைஞன் ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கு வாலிப வயதாகியும் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் அன்னை அவனை வேறு ஊருக்குச் சென்று சம்பாதித்து வருமாறு அறிவுரைக் கூறினாள். அவன் சிறிது பணமும், படுக்கையும் எடுத்துக் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
அறிவழகியின் அறிவுக்கூர்மை
ஆப்பைப் பிடுங்கியது குரங்கு
வரம்!
அத்திரி பாச்சா கொழுக்கட்டை
வசியமந்திரம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)