பல வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடல்பகுதியில் பயங்கரமான வாள் மீன்கள் நிரம்பியிருந்தன. இவற்றின் மூக்குப் பகுதி நீளமாக வாள் போல இருக்கும். மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்களையும் படகுகளையும் வாள் மூக்கால் குத்தி, கடலில் இருந்து விரட்டும். கடற்கரைகளில் அமரும் மக்களையும் சும்மா விடாது. அந்த நேரத்தில் சிங்கப்பூரின் அரசராக இருந்தவர் ராஜா இஸ்கந்தர். தனது படைவீரர்களிடம் வாள் மீன்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்.
பெரிதாக வந்த ஓர் அலையில் கடலுக்குள் அடித்துச் செல்லப் பட்ட வீரர்கள், ஈட்டியால் வாள் மீன்களைக் கொல்ல முயன்றனர். ஆனால், ஜெயித்தது என்னவோ வாள் மீன்கள்தான்! பல வீரர்களைத் தங்கள் வாள் முக்கால் காயப்படுத்தி துரத்தி அடித்தன. வீரர்களின் ரத்தத்தால் கடல் செந்நிறமாக மாறியது.
போர்வீரர்களில் பலர் இறந்ததால் பயந்துபோனார் அரசர். சோகமாக கடற்கரை மணலில் நடந்துகொண்டு இருந்தார். “இந்தப் பயங்கரமான வாள் மீன்களை எப்படிக் கொல்வேன்?” என்று கத்தினார்.
“வழி இருக்கிறது” என்றது ஒரு குரல். திரும்பிப் பார்த்தார் அரசர். அருகில் இருந்த பாறையில் ஒரு சிறுவன் அமர்ந்து இருந்தான். அவனே தொடர்ந்து, “நீரில் வாழைமரங்களால் ஒரு சுவர் எழுப்புங்கள். அலையில் வாள் மீன்கள் வரும்போது அவற்றின் வாள் மூக்கு கூர்மையாக இருப்பதால் வாழை மரத்தில் குத்தி மீன்கள் சிக்கிவிடும்!” என்றான்.
அதன்படியே நாடு முழுவதும் இருந்து வாழை மரங்களை எடுத்து வந்து கடலில் சுவர் எழுப்பினார் கள். அடுத்து வந்த பெரிய அலையில் வாள் மீன்கள் வாழை மரத்தில் சிக்கிக்கொண்டன. அவற்றை அரசரின் வீரர்கள் கொன்று குவித்தனர்.
ஒரு வீரன்கூட இறக்கவில்லை. அதே நேரம், ஒரு வாள் மீன்கூட தப்பிக்கவில்லை! இறந்து கிடந்த மீன்களை எடுத்து சமைத்துப் பெரிய திருவிழாவாகவே கொண்டாடினர்.
ஆனால், அரசருக்கு ஒரு வருத்தம் இருந்தது. தனது தளபதியிடம் “அந்த சிறுவன் மிகவும் புத்திசாலி. என்னைவிட சக்தி வாய்ந்தவனாக ஒரு நாள் வருவான்” என்றார்.
அன்று இரவு அந்தச் சிறுவனைக் கொல்ல நான்கு வீரர்களை அனுப்பினான் தளபதி. அவர்கள் அந்த மலைக்குச் சென்றனர். அங்கே பயங்கர உருவத் தோடு ஒரு கிழவி நின்றிருந்தாள், “ஏமாற்றுக்காரர் களே” என்று கத்திய அவள், “உங்களுக்கு உதவி செய்த சிறுவனையே கொல்லப் போகிறீர்களா? நான் உங்களுக்குத் தண்டனை தருவேன்.” என்றாள்.
பயந்துபோன வீரர்கள் ஓட்டம் பிடித்தார்கள். திடீரென அவர்கள் முன் இருந்த தரைப் பகுதி பிளந்தது. அதில் விழுந்து இறந்து போனார்கள் வீரர்கள். அவர்களது ரத்தம் ஆறாக ஓடி மலையையே ரத்த நிறமாக்கியது. அதிலிருந்து அதற்கு “சிவப்பு மலை” என்று பெயர் வந்தது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்தக் கிழவியோ, சிறுவனோ காணப்படவில்லை. “எப்போது அந்தச் சிறுவன் திரும்பி வரு கிறானோ அதுவரை மலை சிவப்பாகத்தான் இருக்கும். பல உயிர்களைக் காப்பாற்றிய அப்பாவி சிறுவனைக் கொல் வதற்காகப் போட்ட வஞ்சகத் திட்டத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்” இது சிங்கப்பூர் மக்களின் நம்பிக்கை!
விகடன்!
தொடர்புடைய சிறுகதைகள்
முன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவருடைய ஞானத்தில் இருந்து கணிசமான அனுகூலத்தை அவர்கள் பெற்றிருந்தனர் எனலாம்.
அந்த மாணவர்களில் சிலர், பக்தியும், கடமையுணர்வும் கொண்டவர்கள். மற்றவர்களைவிட ...
மேலும் கதையை படிக்க...
ஒரு சமயம் திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் ரயிலுக்காகக் காத்திருந்த பெரியார் (முழுப் பெயர்: ஈ.வெ.ராமசாமி) அங்கிருந்த கடை ஒன்றிற்குச் சென்றார்.
ஒரு காலணா கொடுத்து மிட்டாய் கேட்டார்.
வந்தவர் தந்தை பெரியார் என்பதை அறிந்த கடைக்காரர், காலணாவை வாங்கிக் கொண்டு கை நிறைய ...
மேலும் கதையை படிக்க...
ஒரு முறை தெனாலி ராமன் வாழ்கின்ற நாட்டு மன்னருக்கு அண்டை நாட்டு அரசன் ஒருவர் ஓலை அனுப்பியிருந்தார்.
அதில் மதிப்புக்குறிய ராஜாவுக்கு.
உங்கள் நாட்டின் மேல் நான் போர் தொடுக்க உத்தேசித்துள்ளேன். மூன்றாவது பெளர்ணமி அன்று உங்கள் நாட்டிற்கு எதிராக போர் முரசு கொட்டப்படும். ...
மேலும் கதையை படிக்க...
முன்னொரு காலத்தில் புகழ்பெற்ற குரு ஒருவர் இருந்தார். இவரிடம் இளைஞன் ஒருவன் சீடாக இருந்தான். தன்னுடைய சுற்றுப்புறத்தைப் பற்றியோ, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றியோ யோசிக்க மாட்டான்.
குருகுலத்திற்கு வந்து போகிறவர்கள் அவனைப் பார்த்துவிட்டு, "இவன் பூமிக்குப் பாரம், சோற்றுக்குத் தெண்டம்' என்று ...
மேலும் கதையை படிக்க...
ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.
http://www.postimage.org/Pq2jlnvr.jpg
அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.
அதே நேரத்தில் ...
மேலும் கதையை படிக்க...
ஓர் ஊரில் துணி வெளுக்கும் தொழிலைச் செய்து வந்தாள் ஒருத்தி. அவளுக்கு மூன்று மகள்கள், வான்மதி, மதுமதி, அறிவுமதி இருந்தனர். அனைவருமே அழகிகளாக விளங்கினார்கள்.
எவ்வளவு உழைத்தும் அவர்களால் வயிறார உண்ண முடியவில்லை. வறுமையில் வாடினார்கள். ஒருநாள், அவர்கள் வீட்டிற்கு அழகான இளைஞன் ...
மேலும் கதையை படிக்க...
முன்னொரு காலத்தில் கோணங்கி பட்டினம் என்ற ஊரில் மந்தை மேய்ப்பன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அவற்றை அவனால் காவல்காக்க முடியவில்லை. தினமும் ஒவ்வொரு ஆட்டை ஓநாய்கள் கவர்ந்து சென்றன.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வேட்டை ...
மேலும் கதையை படிக்க...
தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
""ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் ...
மேலும் கதையை படிக்க...
ஓரிடத்தில் பெரிய கட்டிடம் ஒன்று கட்டும் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
மதிய உணவு உண்ணுவதற்காக வேலைக்காரன் வெளியே சென்றிருந்த சமயம், சில குரங்குகள் அந்த இடத்திற்குக் வட்டமாக வந்தன.
கட்டிடத்திற்கான மர வேலை நடைபெற்று வந்த இடத்திற்குக் குரங்குகள் போய்ச் சேர்ந்தன.
அங்கே ஒரு பெரிய ...
மேலும் கதையை படிக்க...
ஒரு முறை விசுவாமித்திர முனிவர் கடுமையான தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தவம் முற்றுப் பெற்றால் இந்திரனுடைய பதவிக்கே ஆபத்து வந்துவிடும். இதை இந்திரன் விரும்பவில்லை. தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினான்.
இதற்காகத் தனது சபையில் நடன மாதர்களாக உள்ள ரம்பை, ...
மேலும் கதையை படிக்க...
எல்லாருமே கெட்டவர்கள்தான் !
ஆப்பைப் பிடுங்கியது குரங்கு
விக்கிரமாதித்தனும் இந்திரனும்