ஒருவன் தன் வீட்டுத் திண்ணையில் இருந்து கொண்டு, பகல் உணவைச் சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது ஒரு காக்கை, சற்று தள்ளி நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.
அவனோ வயிறு புடைக்கச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய எச்சில் இலைக்கு காத்துக் கிடக்கிறது காக்கை அவன் கையைக் கூட அசைக்கவில்லை. காக்கை பொறுமை இழந்து, “ஏ, மனிதனே! நீ உண்ணும் நீ உணவில் ஒரு பிடி அள்ளி வீசக் கூடாதா?” என்று ஏக்கத்துடன் கேட்டது.
“ஏ , மடக் காகமே ! உனக்குமா பசி? விடியற்காலையில் எழுந்திருக்கும் சுறுசுறுப்பை உன்னிடமிருந்து தானே நான் கற்றுக் கொண்டேன். உன் பசியை தீர்த்துக் கொள்ள உனக்கு வழி தெரியவில்லையா?” என்று கேட்டான் அவன்.
“நீ தான் அதற்கான ஒரு வழியைக் கூறக் கூடாதா?” என்று கேட்டது காகம்.
“இதற்குத் தான் பகுத்தறிவு வேண்டும் என்பது .” என்றான். அவன் அருகில் இருந்த ஒரு சொம்பு தண்ணீரை எடுத்து மடமட என்று குடிக்கத் தொடங்கினான் அவன்.
சமயம் பார்த்திருந்த காகம், அவனுடைய இலையிலிருந்து உணவைத் தூக்கிக் கொண்டு வேகமாகப் பறந்து போயிற்று
- மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்
தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு செல்வந்தர் வீட்டில் தெண்டன் என்பவன் காவலாளியாக வேலை பார்த்து வந்தான்.
தினமும் அவன் வீட்டுக்குத் திரும்பும் போது, மது அருந்தி வயிறு நிறையச் சாப்பிட்டு வருவான்.
அவன் மனைவி, ''தினமும் இப்படிக் குடித்துவிட்டு, தின்னுவிட்டு வருகிறாயே? உன்னுடைய சம்பளம் இதற்கே போய் விட்டால், ...
மேலும் கதையை படிக்க...
கன்றுகளும் பெண்மானும் சூழ்ந்து நிற்கக் கலைமான் நிற்கிறது. வேடன் வருகிறான். கலைமான் நடுக்கம் கொள்கிறது. தான் மட்டுமே நின்றால் விரைவாக ஓடிவிடலாம். தன் கன்றுகள் தப்ப வேண்டுமே, தன் காதலி பிழைக்க வேண்டுமே என்று அஞ்சி ஓடுகின்றது. இந்தக் காட்சி புலவர் ...
மேலும் கதையை படிக்க...
பெரியவர் ஒருவர் தம் பேரனுடன் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தார். அவனுக்கு வயது ஆறு!
''தாத்தா ! என்னிடம் உங்களுக்குப் பிரியம் உண்டு அல்லவா?" என்று கேட்டான் பேரன்.
"ஆம். உன்னிடம் எனக்கு உள்ள பிரியத்துக்கு அளவே இல்லை” என்றார் தாத்தா.
"தாத்தா ! அப்படியானால் கடவுளிடமும் ...
மேலும் கதையை படிக்க...
வடக்கிருந்தான் சோழன். பிசிராந்தையாரும் வந்து அருகே அமர்ந்து விட்டார். இதனைக் கண்டு விட்டுத்தான் வீட்டிற்குத் திரும்பினார் புலவர் கண்ண கனார்.
வீடு அடைந்த புலவர் தன் எதிரே வந்து நின்ற மனைவியையே பார்த்தார். அவள் கழுத்தில் கிடந்த பொன்னணி மீது கண்கள் பதிந்து ...
மேலும் கதையை படிக்க...
வானளாவியது அம்மலை. அருவிகள் குதிக்கின்றன. சுனைகள் பொங்குகின்றன. மரங்கள் நிற்கின்றன. குறிஞ்சி நிலத்தின் அழகே அழகு. இந்த மலை நாட்டிற்கு உரியவன் யார்? அவனை நாடன் என்று அழைப்போமா?
வெள்ளம் பொங்கி வரும் ஆறு. இரண்டு பக்கமும் வயல்கள். கரும்பும், நெல்லும், வாழையும் ...
மேலும் கதையை படிக்க...
தனி வாழ்வும் குடும்ப வாழ்வும்!