கதை பிறந்த கதை!

 

முன்னொரு காலத்தில் அரசர் ஒருவர் மிகுந்த பராக்கிரமசாலியாக விளங்கினார். அவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் இருந்தனர்.

மூவரும் கல்வியை மிகவும் வெறுத்தனர். இளவரசர்களுக்குரிய எந்தத் தகுதியையும் வளர்த்துக் கொள்ளாமல் சதாசர்வ காலமும் விருந்து, கேளிக்கை, வேடிக்கை, விளையாட்டு எனக் காலம் கழித்தனர்.

கதை பிறந்த கதைபாடம் கற்றுத் தர வரும் ஆசிரியரையும் கிண்டல் செய்து விரட்டி விட்டனர். இதனால் ஒருவரும் அவர்களுக்குப் பாடம் சொல்லித் தர முன் வரவில்லை. இதைக் கண்ணுற்ற மன்னர் சான்றோர்களையும் அறிஞர் பெருமக்களையும் அழைத்து “இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு என்ன வழி?’ என்று கேட்டார்.

அவர்களுள் ஒருவரே விஷ்ணுசர்மா என்னும் அறிஞராவார். அவர் குருகுலக் கல்வி போன்று இல்லாமல் அரண்மனையை ஒட்டிய தோட்டம் ஒன்றில் இருந்த பெரிய மரத்தின் நிழலுக்கு இளவரசர்கள் மூவரையும் அழைத்துச் சென்று கதைகள் பல சொல்ல ஆரம்பித்தார்.

அதுவரை கதைகளையே கேட்டறியாத அம்மூன்று இளவரசர்களும் மிகுந்த ஆர்வத்துடன் அவர் கூறிய கதைகளைக் கேட்க ஆரம்பித்தனர்.

அவர் கூறிய கதைகளில் பெரும்பாலும் விலங்குகளே கதாபாத்திரங்களாக இருந்தன. ஆனால், உண்மையில் அவை கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றைப் போதிப்பவைகளாக இருந்தன.

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகளாக விளங்கும் பொறுமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, பெருந்தன்மை, திறமை ஆகிய ஐந்து நற்குணங்களையும் விஷ்ணுசர்மா கூறிய கதைகள் விளக்கியதால் அவை “பஞ்சதந்திரக் கதைகள்’ என்று அழைக்கப்பட்டன.

இக் கதைகளைத்தான் இன்று வரை சிறுவர்கள் மட்டுமன்றி பெரியவர்களும் படித்துப் பயன்பெறுகின்றனர்.

- ந.லெட்சுமி, கடுவெளி. (ஜூலை 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
அங்கம்மாவும், மங்கம்மாவும்
முன்னொரு காலத்தில் "சந்திரபுரி' என்று ஓர் அழகிய கிராமம் இருந்தது. அங்கு செல்வந்தர் ஒருவர் மிகப்பெரிய பண்ணை வீடு அமைத்து அதில் பசு, காளை, நாய், குதிரை, ஆடு, கோழி எனப் பல வீட்டு விலங்குகளை வளர்த்து வந்தார். அப்பண்ணையில் இருந்த விலங்குகள் ...
மேலும் கதையை படிக்க...
சந்தான லெட்சுமியும் சைக்கிளும்
சந்தான லெட்சுமிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாத போராட்டத்துக்குப் பின் இன்றுதான் தனியாகச் சைக்கிளை ஓட்டினாள். நாற்பத்து இரண்டு வயதாகும் சந்தான லெட்சுமி அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிகிறாள். மாணவர்கள் சைக்கிளில் பள்ளிக்கு வருவதை ஆசையோடு பார்ப்பாள். ...
மேலும் கதையை படிக்க...
ஆதிகாலத்தில் காகங்கள் சற்று நீண்ட தோகை போன்ற இறக்கைகளுடன் வெண்மை நிறத்தில்தான் இருந்தனவாம்! அப்படிப்பட்ட காக்கை இனத்தில் ஒரு காக்கைக் குஞ்சு தன் பெற்றோருடன் ஒரு மரத்தில் வசித்து வந்தது. அது ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். "அது என்ன?'"இது ...
மேலும் கதையை படிக்க...
பெரிய சந்தோஷம்
அந்த ஆங்கிலோ இந்தியப் பள்ளியே அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று மாலை நடைபெற இருக்கும் விழாவில் விளையாட்டு, ஓவியம், இசை ஆகிய போட்டிகளில் வென்ற மாணவிகளுக்குப் பரிசு வழங்குவதோடு மட்டுமல்லாமல் முதல் பரிசு பெறுபவர்களுக்கு ஓர் ஆண்டுக்கு உபகாரச் சம்பளமும் வழங்கப்பட ...
மேலும் கதையை படிக்க...
சந்தான லெட்சுமியும் சைக்கிளும்
சந்தான லெட்சுமிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாத போராட்டத்துக்குப் பின் இன்றுதான் தனியாகச் சைக்கிளை ஓட்டினாள். நாற்பத்து இரண்டு வயதாகும் சந்தான லெட்சுமி அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிகிறாள். மாணவர்கள் சைக்கிளில் பள்ளிக்கு வருவதை ஆசையோடு ...
மேலும் கதையை படிக்க...
அங்கம்மாவும், மங்கம்மாவும்
சந்தான லெட்சுமியும் சைக்கிளும்
காகம் எப்படிக் கருப்பானது?
பெரிய சந்தோஷம்
சந்தான லெட்சுமியும் சைக்கிளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)