கட்டிக்கோ!

 

நாடோடிக் கதை வரிசை-24 : பஞ்சாப்

ஒரு நரி ஆற்றுப் பக்கம் தண்ணீர் குடிக்கப் போனது. எதிர்க்கரையில் இருந்த ப்ளம் மரங்களில் நிறைய பழங்கள் பழுத்துக் குலுங்கிக்கொண்டு இருந்தன. என்ன செய்வது, அந்த நரிக்கு நீச்சல் தெரியாதே…. ஏக்கத்தோடு பழங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தது நரி.

அந்தப் பக்கமாக ஒரு முதலை வந்தது. ‘‘முதலைக் கண்ணு, இங்கே வாயேன்’’ என்றது நரி.

‘‘அந்த ப்ளம் பழம் எவ்வளவு அழகா இருக்கு பாத்தியா? என்னை உன் முதுகிலே தூக்கிட்டுப் போனா நாம ரெண்டு பேரும் அந்தப் பழங்களைச் சாப்பிடலாம்’’ என்றது நரி.

‘‘அச்சச்சோ! எங்க அம்மா திட்டுவாங்க. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறவர் கூடத்தான் நான் சேர்ந்து போகணும்னு சொல்லி இருக்காங்க’’ என்றது முதலை.

நரிக்கோ ப்ளம் பழத்தின் மீது உள்ள ஆசை அடங்கவில்லை. ‘‘நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்’’ என்று முதலையிடம் சொன்னது. முதலைக்கு வெட்கமாக, சந்தோஷமாக இருந்தது.

‘‘கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு’’ என்றது.

‘‘செய்யறேன். ஆனா, இப்போ எனக்கு பசி மயக்கம். உடனடியா ப்ளம் பழம் சாப்பிடணுமே…’’

‘‘சரி, என் முதுகிலே ஏறிக்கோ. உன்னை அக்கரையிலே விடறேன்’’ என்றது முதலை.

அக்கரைக்குப் போய் ஆசை தீருமட்டும் ப்ளம் பழங்களைச் சாப்பிட்டது நரி.

மீண்டும் முதலையின் முதுகில் சவாரி செய்து இக்கரைக்கு வந்தது நரி. கரையில் இறங்கி, ‘‘நான் போய் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு வர்றேன்’’ என்று சொல்லிவிட்டு ஓடியது.

நரி வரும் வரும் என்று ஆவலோடு காத்திருந்தது முதலை. நரி வரவில்லை. அது தன்னை ஏமாற்றிவிட்டது என்று முதலைக்குப் புரிந்தது. நரியை மீண்டும் பார்த்தால் தக்க பாடம் கற்றுத்தர முடிவு செய்தது.

சில நாட்கள் கழித்து, நரி அந்தப் பக்கமாக வருவதை முதலை பார்த்தது. நரி ஆற்றில் வாய் வைத்ததும் முதலை, நரியின் காலைக் கவ்வியது. உடனே நரி, ‘‘முதலைக் கண்ணம்மா, உன்னைத் தேடித்தான் வந்தேன். ஆனா வர்ற அவசரத்துல என் ஒரு காலை வீட்டுல வெச்சுட்டு வந்துட்டேன். அதை எடுத்துட்டு வந்துடறேன்’’ என்றது. முதலை நரியின் காலை விட்டது. நரி போய்விட்டது.

முதலை எவ்வளவு காத்திருந்தும் நரி வரவில்லை. மீண்டும் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதலை, ஆற்றிலிருந்து புறப்பட்டு நரியின் குகைக்குள் போய் ஒளிந்துகொண்டது. வெளியே போயிருந்த நரி, குகைக்குத் திரும்பியது. வாசலில் முதலையின் காலடித் தடம்! முதலை உள்ளே இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை. நரி, ‘‘அன்பு மனைவியே, நான் வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். என்னை வரவேற்றுப் பாடமாட்டியா?’’ என்றது.

குகைக்குள் இருந்து சத்தம் வரவில்லை. ‘நரி திரும்பவும், ‘‘செல்ல மனைவியே நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். ‘அன்புக் கணவர் ஐயாவே வீட்டுக்கு உள்ளே வந்துடுங்க. குட்டிக்கு வாங்கிட்டு வந்ததெல்லாம் குட்டி கையிலே தந்துடுங்க’&னு எப்பவும் பாடுவியே, அதைப் பாடினாதான் உள்ளே வருவேன்’’ என்றது நரி.

குரலை மாற்றிக்கொண்டு முதலை அந்தப் பாட்டைப் பாடியது.

அவ்வளவுதான்… முதலை உள்ளே இருப்பதைத் தெரிந்து கொண்ட நரி ஓட்டம் பிடித்தது!

- வெளியான தேதி: 16 அக்டோபர் 2006 

தொடர்புடைய சிறுகதைகள்
குரங்குக் கூட்டம் ஒன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தன. ‘‘உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன்னால், ஒரு காரியம் செய்யவேண்டும். விரதத்தை முடிக்கும்போது சாப்பிடுவதற்கான உணவை முதலிலேயே தயாராக வைத்துக் கொள்வோம்’’ என்றது கிழட்டு தலைமைக் குரங்கு. மற்ற குரங்குகளும் தலையசைத்து அதை ஆமோதித்தன. உணவு ...
மேலும் கதையை படிக்க...
மீன் விற்கும் பெண் அரண்மனைப் பக்கமாகப் போனாள். ஜன்னலில் இருந்து எட்டிப் பார்த்த ராணி அவளை அழைத்தாள். அப்போது கூடையில் இருந்து ஒரு பெரிய மீன் வெளியே விழுந்து துள்ளியது. ‘‘இது ஆண் மீனா, பெண் மீனா? எனக்கு பெண் மீன்தான் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு விவசாயி தன் குடும்பத்தோடு நகரத்தை நோக்கிப் போய்க்கொண்டு இருந்தார். பயணத்தின் இரண்டாவது நாள் மதியம் அவர்கள் ஒரு பெரிய ஆலமரத்தைப் பார்த்தார்கள். அதன் கீழ் சற்று நேரம் ஓய்வெடுக்க நினைத்தார்கள். சும்மா உட்கார்ந்திருக்கும் நேரத்தில் கயிறு திரிக்கலாமே என்று நினைத்தார் விவசாயி. ...
மேலும் கதையை படிக்க...
ஒரு பண்டிதர் ஒரு வயல் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். வாய்க்குள் ஏதோ இருப்பதுபோல் தோன்றவே, காறித் துப்பினார். ஒரு சிட்டுக்குருவியின் இறகு வந்து விழுந்தது. அது எப்படி தன் வாய்க்குள் வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை. வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் ...
மேலும் கதையை படிக்க...
நாடோடிக்கதை வரிசை-23 ஹரியானா மாநிலம் அந்த விவசாயி தன் தொழிலின் மேல் மிகவும் ஆர்வம் கொண்டவர். எந்த நேரமும் வயல்காடே கதி என்று கிடப்பார். தன் வயல், தோட்டம் ஆகியவற்றின் ஒவ்வொரு அங்குலமும் அவருக்கு அத்துப்படி. விவசாயத்தில் புதிது புதிதாக ஏதாவது செய்துகொண்டே இருப்பார். ...
மேலும் கதையை படிக்க...
நாடோடிக்கதை வரிசை-19: மணிப்பூர் அந்தப் பெண்ணுக்கு ஒரே மகன்தான். பிறர் வீடுகளில் பாத்திரம் தேய்த்து வாழ்க்கை நடத்தி வந்தாள். ஒருமுறை ஒரு வீட்டில் தானியம் அரைத்துக் கொடுத்தாள். பதிலுக்கு அவளுக்குக் கொஞ்சம் தானியம் கிடைத்தது. அதை விற்பதற்காக சந்தைக்குப் புறப்பட்டாள். ‘‘மகனே, உனக்கு ...
மேலும் கதையை படிக்க...
ஊரில் அனைவருக்கும் அந்தத் துறவியைப் பிடிக்கும். ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு சிறிய குடிசையைப் போட்டுக்கொண்டு தன் சிஷ்யனோடு எளிமையாக வாழ்ந்துவந்தார். தன்னைத் தேடி வருபவர்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்லி ஆசீர்வதிப்பார். ஒரு நாள் அவர் தியானம் செய்துகொண்டு இருந்தார். அப்போது அவரது மனக்கண்ணுக்கு ...
மேலும் கதையை படிக்க...
நாடோடிக் கதை வரிசை-21 (தமிழ்நாடு) மரத்தின் மீது அமர்ந்து இனிய குரலெடுத்துப் பாடிக்கொண்டு இருந்தது குயில். அதன் தொண்டையில் இருந்து வெளிப்பட்ட குக்கூ, குக்கூ என்ற இசை, கானகம் எங்கும் பரவியது. அந்த மரத்தின் அருகில் ஒரு குட்டை இருந்தது. அதில் ...
மேலும் கதையை படிக்க...
குரங்குகளின் உண்ணாவிரதம்!
ஏன் சிரித்தது மீன்?
யாரை கட்டிப்போடுவது?
எடு, என் பங்கை!
பறவைகள் படைப்பவன்!
நாடோடிக்கதை வரிசை-23
இது போச்சு… அது வந்தது… டிரம்..டிரம்..டிரம்!
பன்றியைக் கொன்று விடு!
பாட்டுப் பாடவா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)