கடல் மேல் எழும் கதிரவன் நீ

 

வெற்றிக்குக் கட்டியங் கூறி, குருதிக் கறை படிந்த வாட்கள் ஆயிரம் ! அவை, செவ்வானத்தின் வனப்புப் போன்றன!

கால்கள் ஓடுவதாலே கழல்கள் அறுந்து விழ்ந்தன. அவை, கொல்லேற்றின் கொம்பு போன்றன…

அம்பு பட்டதால் மார்புக் கவசங்களில் துளைகள் தோன்றின. அவை, இறந்து பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் இலக்கம் போன்றன…

பரிகள், வலமும் இடமும் பாய்ந்து, வாய்களிற் குருதி படிந்து, எருதைக் கவ்விய புலி போன்றன …..

களிறுகள், கோட்டைக் கதவம் பிளந்து, கோடு முறிந்து, உயிர் உண்ணும் கூற்றுவன் போன்றன ….

ஆனால் அவனோ தாவும் குதிரையொடு தகதகக்கும் தேர் ஏறிக் கருங்கடலில் ஞாயிறுபோற் காட்சி தருகிறான்.

அவன் தேரோடு போராடும் பகைவர் வேரோடு பெயர்ந்து விழுவர்..தாயற்ற குழந்தை போற்கதறி அழுவர்!

- மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம் 

தொடர்புடைய சிறுகதைகள்
"ஏடீ விறலி” என்று பாணன் ஆசையுடன் கூப்பிட்டு கொண்டு வந்தான். ஓடி வந்தாள் விறலி. உலையை யேற்று. சோற்றை ஆக்கு. விறலியே, கோதைகளைப் புனைந்து கொள்" பிட்டங் கொற்றனா இவ்வளவையும் கொடுத்தார்?" "பிட்டன் வெற்றி பெற்று விட்டான்! அவன் வாழ்க! அவனது மன்னன் வாழ்க . ...
மேலும் கதையை படிக்க...
இளஞ்சேட் சென்னி ஆற்றல் மிகுந்த அரசன். தென்பாதவரைத் தோற்கடித்தான். வட வடுகரைவாட்டி ஓட்டினான். பொருநன் போய் கிணயை இயக்கி அவன் புகழ் பாடினான். விலையுயர்ந்த அணிகளைக் குவித்தான் அம்மன்னன். அவ்வணிகளை சுமந்து வந்து சுற்றத்தார்க்கு அளித்தான் பொருநன் அவர்களோ அத்தகைய அணிகலன்களைப் பார்த்ததே ...
மேலும் கதையை படிக்க...
காட்டில் படுத்திருந்த சிங்கத்திடம் போய் ஒரு கொசு பேசத் தொடங்கியது. "என்னைவிட நீ பலசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் அல்லவா? அது மிகவும் தவறு. "உன் வலிமை எப்படிப்பட்டது?. பற்களை நறநற என்று கடித்து, நகங்களால் பிராண்டுகிறாய், இது எப்படி இருக்கிறது என்றால், ஏழைப் ...
மேலும் கதையை படிக்க...
"உச்சி வானத்தில் முழு நிலவு ஊர்கிறது. பாணன் காண்கிறான். விறலிக்கு காட்டுகிறான். விறலியோ களிப்பு மிகுதியால் காட்டு மயில்போல் ஆடுகிறாள். ஆகா என்ன அழகு. நீலக் கடல் நடுவே நெருப்புப் பந்து மிதப்பது போல் காட்சியளிக்கிறதே பாணனும் ஆனந்தக் கூத்தாடுகிறான். ...
மேலும் கதையை படிக்க...
பாண்டியன் அறிவுடைய நம்பி தன் ஆருயிர் நண்பர் வீட்டிற்குச் சென்றார். அன்று அங்கு அரசனுக்கு விருந்து. அழகான வீடு. ஏழடுக்கு மாளிகை. பொன் மணிகள் எல்லாம் நிறைந்திருக்கின்றன. அரசனோடு விருந்துண்ணப் பலர் வந்திருக்கிறார்கள். உணவு பரிமாறப்படுகிறது. அரசன் உண்ட பின்னரே பிறர் உண்ண ...
மேலும் கதையை படிக்க...
ஏற்றுக உலை! ஆக்குக சோறு!
நகை அணிந்தனர்
சிங்கத்தை வெற்றி கொண்ட கொசு
துன்பம் துடைக்கும் குடை
மயக்கும் மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)