கடல் எவ்வளவு பெரியது?

 

கடலில் வசித்து வந்த தவளை ஒரு நாள் கரைக்கு வந்தது.

அருகில் இருந்த கிணற்றில் வசித்த தவளையும் வெளியே வந்தது.

இரண்டு தவளைகளும் சந்தித்துக் கொண்டன. ஒன்றை ஒன்று அறிமுகம் செய்து கொண்டது.

அப்போது, “கடல் எவ்வளவு பெரிது?” என்று கேட்டது கிணற்றுத் தவளை. ஏனென்றால் அதற்கு கடலைப் பற்றி தெரியாது.

”கடல் மிகப் பெரிது!” என்றது கடல் தவளை.

“இவ்வளவு பெரிது என்று ஒரு அளவு சொல்லு என்று கேட்டது கிணற்றுத்தவளை.

”அதாவது கடலுக்கு அளவே கிடையாது. எங்கே தொடங்குகிறது, எங்கே முடிகிறது” என்ற அளவே இல்லை என்றது கடல் தவளை.

“எதற்குமே ஒரு அளவு உண்டு என்பார்களே. அப்படி ஒரு அளவைக் கூறு!” என்று வற்புறுத்தியது கிணற்றுத் தவளை.

”என்னால் அப்படிக் கூறவே முடியாது, பார்த்தால்தான் புரிந்து கொள்ள முடியும்,” என்று கூறியது கடல் தவளை.

கடல் தவளை கூறியதைக் கேட்டுப் பொறுமை இழந்த கிணற்றுத் தவளை, ” இந்தக் கிணற்று அளவாவது இருக்குமா நீ வசிக்கும் கடல்?” என்று கேட்டது கிணற்றுத் தவளை .

கடல் தவளை பலமாகச் சிரித்துக் கொண்டே, என்ன சொல்லியும் உனக்குப் புரியவில்லையே! கடுகு எங்கே? மலை எங்கே? என்பது புரியாத உனக்கு எப்படி புரிய வைக்க முடியும்?” என்று சலித்துக் கொண்டது கடல் தவளை.

உடனே கிணற்றுத் தவளைக்குக் கோபம் அதிகரித்து, “நீ ஒரு பொய்யன் ! கிணற்றை விட கடல் பெரிதாகவே இருக்க முடியாது என்று கூறிவிட்டுச் சென்றது.

உலக நடப்புத் தெரியாதவனை கிணற்றுத் தவளை’ என்று கூறுவது வழக்கம்.

- மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம் 

தொடர்புடைய சிறுகதைகள்
இறந்துப் பிறந்தது குழந்தை இல்லை, இல்லை. தசைப் பிண்டமாய்ப் பிறந்து விட்டது. வீரமன்னர் அதை என் செய்வர்? வாளால் அரிந்து புதைப்பர். ஏன்? மறக்குடியிற் பிறக்கும் எவ்வுயிரும் விழுப்புண் பட்டு மடிதல் வேண்டும். உயிர் வாழ விரும்பி உடல் கொண்டு திரிந்தால் ...
மேலும் கதையை படிக்க...
அரசனுடைய ஏவலாளர்க்கு ஐயம் தோன்றியது. அதன் முடிவு என்ன தெரியுமா? கிள்ளியின் ஏவலாளர்கள் அயலூரான் ஒருவனைக் கைது செய்து காவலில் வைத்தனர். அவன் ஒற்றன் என்பதாக அவர்கள் கருதினர். கொற்றவனும் அக்கருத்தை ஏற்றான். இச்செய்தி கோவூர் கிழாருக்கு எட்டியது! அவர் ஒடோடியும் ...
மேலும் கதையை படிக்க...
"அண்ணே , காலையிலிருந்து இவ்வழியில் யானைகள் போனவண்ணமாய் இருக்கின்றன" என்றான் கந்தன். "போருக்குப் போகின்றனவா?" என்று கேட்டான் முகுந்தன். "போ அண்ணே போ . புலவர்கள் கொண்டு போகிறார்கள். நம் மன்னன் ஆய் பரிசளித்த யானைகள்?" "எண்ணினாயா? எத்தனை யானைகள் ?" ''எண்ணத் தொலையாத யானைகள்!" கொங்கரை மேலைக்கடல் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு ஊரில் ஒரு பண்ணையார் இருந்தார். அவளுக்குச் சொத்துக்கள் ஏராளமாக இருந்தன. பண்ணையாருக்கு ஒரே ஒரு பெண்தான்! ஆனால், அந்தப் பெண் ஆணைப் போலவே வளர்ந்தாள். கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றாள். மேலும், கலை, இலக்கியம், இசை ஆகிய வற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தாள். பெண்ணுக்கத் ...
மேலும் கதையை படிக்க...
யானைக்கு மதம் பிடித்தது. அது, கட்டுத்தறியை அறுத்துக் கொண்டு பிளிறியவாறு, ஓட்டம் எடுத்தது... பெருநற் கிள்ளி அதனைப் பார்த்தான் : அதன் மதத்தை அடக்குவேன் என்று எழுந்தான். யானையை எதிர் கொண்டான்; அதன் மேற் பாய்ந்தான்; முதுகில் மேல் அமர்ந்து காதுகளைப் பற்றித் ...
மேலும் கதையை படிக்க...
இரந்தும் உயிர் வாழ்வதோ?
பரிசில் வாழ்க்கை!
எண்ண முடியாத யானைகள்!
பொது அறிவு இல்லாதவன்
மதம் பிடித்த யானை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)