ஒரு ரூபாய் எங்கே போச்சு!!

 

ராமும் சோமுவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.இருவரும் ஒரே பள்ளிக் கூடத்தில் எட்டாவது படித்து வந்தார்கள்.இருவரும் பள்ளிகூடத்திலே கால் பந்து விளையாடிக் கொண்டு வந்தார்கள்.இருவரும் மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

ராமு தான் அந்தப் பள்ளிகூடத்தின் Goal keeper.

சனிக் கிழமை,ஞாயிற்றுக் கிழமை மாலை வேளையில் அவர்கள் இருவரும் காலி யாக இருந்த கார்பரேஷன் மைதானத்தில் இருந்த கால் பந்து மைதானத்தில் கால் பந்து ஆடிப் பழகி வருவார்கள்.சோமு பல கோணங்களில் நின்றுக் கொண்டு கால் பத்தை உதைப்பான்.ராமு அந்த பத்து goal க்குள் போகாம தடுத்து வருவான்.

அவர்கள் இடம் இருந்த கால் பந்து ரொம்ப கிழிந்துப் போய் விடவே இருவரும் ஒரு புது கால் பந்து வாங்க நினைத்தார்கள்.

சோமு “ராமு,நாம ஒரு புது கால் பந்து வாங்கிக் கிட்டு விளாயாடி வரலாமா” என்று கேட்டதும் சோமு ஒத்துக் கொண்டான்.

சோமு வீட்டுக்கு வந்து அவன் அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி இருபத்தி ஐஞ்சு ரூபாய் வாங்கிக் கொண்டு வந்தான்.ராமுவும் அதே போல அவன் அம்மாவிடம் கெஞ்சி க் கூத்தாடி இருபத்தி ஐஞ்சு ரூபாய் வாங்கிக் கொண்டு வந்தான்.

இருவரும் தங்களிடம் இருபத்தி ஐஞ்சு ரூபாய் இருப்பதை சொன்னார்கள்.

உடனே சோமு ராமுவைப் பார்த்து “ராமு,இங்கே நீ உடல் பயிறிசி பண்ணிகிட்டே இரு.நான் கடைக்குப் போய் ஒரு புது கால் பந்தை வாங்கிக் கிட்டு வறேன்.உன் கிட்டே இருக்கிற இருபத்தி ஐஞ்சு ரூபாயைக் குடு” என்று கேட்டதும் ராமு தன்னிடம் இருந்த இருபத்தி ஐஞ்சு ரூபாயை சோமுவிடம் கொடுத்தான். ராமு கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு சோமு கடை வீதிக்குப் போனான்.

ராமு மைதானத்தில் உடல் பயிற்சி பண்ணிக் கொண்டு இருந்தான்.

கால் பந்து விற்கும் கடையில் கடைக்காரரைப் பார்த்து “ஒரு கால் பந்து என்ன விலைங்க” என்று சோமு கேட்டான்.

அந்தக் கடைக்காரர் “ஒரு கால் பந்து நாப்பத்தி ஐஞ்சு” என்று சொன்னதும் சோமு தன்னிடம் இருந்த மொத்த பணமான ஐம்பது ரூபாயை அவரிடம் கொடுத்தான்.

உடனே கடைகாரர் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு சோமுவிடம் ஒரு புது கால் பந்தைக் கொடுத்து விட்டு,மீதி சில்லரையான ஐந்து ரூபாய்க்கு மூன்று ஒரு ரூபாய் நாணயங்களையும்,நான்கு அரை ரூபாய் நாணயங்களையும் கொடுத்தார்.

சோமு புது கால் பந்தை ஒரு கையில் வாங்கிக் கொண்டு, மற்ற ஒரு கையிலே கடைக்காரர் கொடுத்த சில்லரையையும் வாங்கிக் கொண்டு கடையை விட்டு வெளியே வந்தான்.சோமு கண்ணில் அங்கே பிச்சை எடுத்துக் கொண்டு இருந்த ஒரு வயசான பிச்சைக்கார அம்மாவைப் பார்த்ததும் அவன் ரொம்ப பரிதாப் பட்டு அந்த அம்மாவுக்கு ரெண்டு ரூபாய் பிச்சைப் போட்டான்.

சோமு சந்தோஷப் பட்டுக் கொண்டே கால் பந்து மைதானத்துக்கு வந்து ராமு இடம் புது கால் பந்தைக் காட்டி “ராமு,நான் நம்ம ரெண்டு பேர் பணமும் சேத்து மொத்தம் ஐம்பது ரூபாய் எடுத்துக் கிட்டுப் போனேன் இல்லையா.இந்த புது கால் பந்து விலை நாப்பத்தி ஐஞ்சு ரூபாய்.நான் புது பந்தை வாங்கிக் கிட்டு வெளியே வந்தப்ப ஒரு வயசான பிச்சைக்கார அம்மாவைப் பாத்தேன்.அந்த பிச்சைக்கார அம்மாவே பாக்க ரொம்ப பரிதாபமா இருந்திச்சு.அவங்களுக்கு நான் ரெண்டு ரூபாய் பிச்சைப் போட்டேன். ரெண்டு சேந்து நாப்பத்தி ஏழு ரூபா ஆச்சு.மீதி மூனு ரூபா.இந்தா உனக்கு ஒன்னரை ரூபா.நான் எனக்கு ஒன்னரை ரூபாயை வச்சிக்கிடறேன்” என்று சொல்லி ராமுவுக்கு ஒன்னரை ரூபாயைக் கொடுத்து விட்டு மீதி பணத்தை கவனிக்காமல் தன் பாக்கெட்டில் இருந்த சில்லரையுடன் போட்டுக் கொண்டான்.

சோமு கொடுத்த ஒன்னரை ரூபாயை வாங்கி தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான் ராமு.

சோமு கால் பந்தை பல கோணங்களில் இருந்து உதைக்க,ராமு அந்த பந்து ‘Goal Post’க்குள் போகாம தடுத்து பழகி வந்தான்.இரண்டு மணி நேரம் ஆடின பிறகு இருட்டி விடவே இருவரும் சந்தோஷமாக வீட்டுக்கு வந்தார்கள்.

வீட்டுக்கு வந்த ராமு சோமு சொன்ன கணக்கை சரிப் பார்த்தான்.

‘நான் சோமு கிட்டே 25 ஐஞ்சு ரூபா குடுத்தேன்.சோமு எனக்கு மீதி ஒன்னரை ரூபாய் குடுத்தான்.அப்போ பந்துக்கு நான் செலவு பண்ணது இருபத்தி மூனறை ரூபா. அதே போலத் தான் சோமுவும் பந்துக்கு இருபத்தி மூனறை ரூபா தான் செலவு பண்ணி இருப்பான்.ரெண்டும் சேந்து 47 ஏழு ரூபாய் ஆவுது.பிச்சைக் காரிக்கு 2 ரூபாய் பிச்சைப் போட்டான் சோமு.எல்லாம் சேந்து 49 ரூபாய் தானே ஆவுது.மீதி ஒரு ரூபாய் இருக்கணுமே.சரி, நாளைக்கு நாம சோமுவே கேக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டு சாப்பிட்டு விட்டு படுத்துக் கொண்டான்.

அடுத்த நாள் ராமு சோமுவைப் பார்த்த போது “சோமு, நான் கேக்கறேன்னு என்னே தப்பா எடுத்துக்காதே…” என்று சொல்லி முடிக்கவில்லை “ நான் உன்னுடைய ‘பெஸ்ட் ·ப்ரெண்டாச்சே’.நான் உன்னே தப்பா எடுத்தக்கவே மாட்டேன்.நீ என்னே ¨தா¢யமா கேளு ராமு” என்று சொன்னான்.

உடனே ராமு “நான் உன் கிட்டே 25 ரூபா குடுத்தேன்.நீ எனக்கு மீதி ஒன்னரை ரூபாய் குடுத்தே.அப்போ நான் பந்துக்கு செலவு பண்ணினது இருபத்தி மூனறை ரூபாய். நீ பந்துக்கு செலவு பண்ணனதும் இருபத்தி மூனறை ரூபாய் தான்.ரெண்டும் சேந்து 47 ரூபாய் ஆவுது.நீ பிச்சைக்காரிக்கு 2 ரூபாய் போட்டே.மொத்தம் 49 ஒன்பது ரூபாய் தானே ஆவுது.மீதி ஒரு ரூபாய் எங்கே போச்சு” என்று கேட்டதும் சோமு அசந்து விட்டான்.

உடனே சோமு, ராமு சொன்னதைப் போலவே கணக்குப் போட்டுப் பார்த்தான். அவனுக்கும் அந்த ‘ஒரு ரூபாய் எங்கே போச்சு’ என்று தெரியவில்லை.

எப்படிங்க கணக்கிலே ஒரு ரூபாய் குறையுது!!!!! 

தொடர்புடைய சிறுகதைகள்
அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 அப்போது அங்கு வந்துக் கொண்டு இருந்த சுரேஷிடம் “சுரேஷ்,உனக்கு நான் ‘நெட்டில்’ ஒரு நல்ல பொண்ணா ப் பாத்து இருக்கேன்.இந்த பொண்ணு நன்னா படிச்சு இருக்கா.நம் அந்தஸ்த்துக்கு ரொம்ப ஏத்த பொ ண்ணு.அவ சென்னையிலே அடையார்லே இருக்கா.நீ ஓ.கே.ன்னு ...
மேலும் கதையை படிக்க...
சென்னையில் ஒரு பள்ளிக்கூடத்தில் எட்டாம ‘க்ளாஸ்’ படித்து வந்த ராதாகிருஷ்னன் குளிக் கும் போது ஒரு வாரமாகவே தன் உடம்பைக் கவனித்து வந்தான். அவனுக்கே கொஞ்சம் பயமாய் இருந்தது. ‘எப்படி இதை நாம் சொல்றது.முதல்லே நம்ம அம்மா கிட்டே சொல்லலாமா, இல்லே அப்பா ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 கொஞ்ச நேரம் கழித்து காயத்திரி “அப்படி சொன்னா எப்படிடீ. நீ என்ன காலம் பூராவும் கல்யா ணம் பண்ணிக்காம இருக்கப் போறயா என்ன.எனக்குப் புரியலையே” என்றாள் கலவரத்தோடு. கொஞ்ச நேரம் ஆனதும் காயத்திரி லதாவைக் கட்டிக் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 நளினி கிருஷ்ணன் தம்பதிகளுக்குப் பிறந்த ஒரே செல்லப் பொண்ணு.நளினி பிறந்த பிறகு அவர்களுக்குக் குழந்தியே பிறக்கவில்லை. கிருஷ்ணன் தம்பதிகள் நளினியை நன்றாகப் படிக்க வைத்துக் கொண்டு இருந்தார்கள். நளினியும் மிக நன்றாகப் படித்துக் கொண்டு வந்தாள். நளினி B.Com.பாஸ் பண்ணினதும்,ராதா தன் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 பிறகு ரமேஷ்”இப்போ அதே மனசு நீங்க ரெண்டு பேரும் இந்த மாதிரி விலை ஒசந்த புடவை களை கட்டிண்டு இருக்கும் போது எவ்வளவு சந்தோஷபடறது தொ¢யுமா”என்று சொன்னான்.உடனே காயத்திரி “நீ கவலைப்படாதே.நாங்க நீ வாங்கிக் குடுத்த புடவைகளை எல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம் - 1 | அத்தியாயம் - 2 | அத்தியாயம் - 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 ”நீங்க ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 | அத்தியாயம்-17 வாத்தியாரை கேட்டு ஒரு நல்ல நாளாகப் பார்த்து ராகவன் அப்பா,அம்மா,பாட்டி,சிதம்பரத்தில் இருந்த மாமா,மாமி எல்லோர் இடமும் சொல்லிக் கொண்டு சென்னைக்குப் போய் ‘ஆர்டர்’ வந்த IT கம்பனியிலே வேலைக்கு சேர்ந்தான்.அன்று சாயந்திரமே ராகவன் ஒரு ‘ஆண்கள் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 ஏழு மணி நேரம் ஆனதும் ’லேபர் வார்ட்டில்’ இருந்து ஒரு நர்ஸ் வெளியே வந்து எங்களைப் பார்த்து “அவங்களுக்கு ரெட்டை குழந்தைங்க பொறந்து இருக்கு.ஒரு ஆண் குழந்தேயும்,ஒரு பெண் குழந்தையும் பொறந்து இருக்கு.இன்னும் அரை மணி நேரம் ஆனதும் ...
மேலும் கதையை படிக்க...
பீ. ஈ படிப்பு முடித்து விட்டு ‘இன்போஸிஸ்’ கம்பனியில் வேலை செய்து வந்தாள் வனஜா. அன்று தன் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது ரொம்ப ‘டயர்ட்டா’ இருந்த தால் ‘காபி டேயில்’ ஒரு காபி குடிக்க வந்து உட்கார்ந்தாள் வனஜா.எதிரே ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-29 | அத்தியாயம்-30 கொஞ்ச நேரமானதும் “என் அக்காவும்,அத்திம்பேரும் என் கல்யாண செலவே முழுக்க ஏத்துண்டு பண்னதாலே தான் எனககு ஒரு கல்யாணம் ஆச்சு.இல்லாட்டா,சுந்தரம் மாமா மாதிரி, நானும் ஒரு கட்டே பிரம்மசாரியாத் தான் இருந்துண்டு வந்து இருக்கணும்” என்று சொல்லி வருத்தப் ...
மேலும் கதையை படிக்க...
தீர்ப்பு உங்கள் கையில்…
பேரெ சுருக்கி ’ஜெண்ட’ரெ மாத்தி எல்லாம்…
தீர்ப்பு உங்கள் கையில்…
புயலுக்குப் பின் அமைதி
தீர்ப்பு உங்கள் கையில்…
குழந்தை
அப்பா, நான் உள்ளே வரலாமா…
வாழ்க்கை என்னும் என் ஊஞ்சல்…
அம்பை ஏய்தவன் எங்கோ…
அப்பா, நான் உள்ளே வரலாமா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)