ஒரு நல்ல செய்தி!

 

அந்த ஊரில் ஒரு வழக்கம் உண்டு.

யாராவது ஒருவர் நல்ல செய்தியொன்றைச் சொன்னால், அதற்காக அவர்களுக்கு பணம் வசூலித்து அன்பளிப்பாகக் கொடுப்பார்கள்.

அந்த வழக்கம் ஒருவிதமான மூடநம்பிக்கை என்பது முல்லாவின் கருத்து.

அந்த மக்களுக்குப் புத்தி கற்பிக்க வேண்டும் என்று முல்லா கருதினார்,

ஒருநாள் அவர் சந்தை கூடும் இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த ஒர் இடத்தில் நின்று கொண்டு, ”அன்பார்ந்த பொதுமக்களே! உங்களுக்குச் சொல்வதற்காக அருமையான நல்ல செய்தி ஒன்றை வைத்திருக்கிறேன். எனக்குப் பரிசு தருவதற்காக உடனே பணம் வசூலியுங்கள் ” என்று கூச்சல் போட்டார்.

முல்லா ஒரு செய்தியினைச் சொல்லுகிறார் என்றால் உண்மையிலேயே அது நல்ல செய்தியாகத் தான் இருக்கும் என்ற நம்பிய மக்கள் அவசர அவசரமாக பணம் வசூலித்து ஒரு கணிசமான தொகையை முல்லாவிடம் கொடுத்தனர்.

அந்த அன்பளிப்புத் தொகையை வாங்கி எண்ணி சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்ட முல்லா மக்களை நோக்கி, “அன்பார்ந்த பொதுக்களே! நான் கூற இருக்கும் நல்ல செய்தி இதுதான். இந்த முல்லா ஒரு மகனுக்குத் தந்தையாகியிருக்கிறார்”, என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். 

தொடர்புடைய சிறுகதைகள்
முல்லா ஒரு தடவை அயல்நாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் எவ்வளவு தொலைதூரமாக இருந்தாலும் கழுதையின் மீது சவாரி செய்துதான் செல்ல வேண்டும். முல்லா செல்ல வேண்டியிருந்ததோ பயங்கரமான காட்டு வழி. அங்கு கள்வர் பயமும் உண்டு. முல்லா நீண்ட தொலைவு பணயம் புறப்பட்ட ...
மேலும் கதையை படிக்க...
நம்பிக்கை மோசம் !
ஒருநாள் முல்லாவிடம் ஒரு மனிதன் வந்தான் ""முல்லா அவர்களே! எனக்குக் கொஞ்சம் பணக்கஷ்டமாக இருக்கிறது. தயவுசெய்து ஒரு பொற்காசு கடனாகக் கொடுங்கள். கூடிய விரைவில் நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்!'' என்று அந்த மனிதன் கூறினான். அந்த மனிதனைப் பற்றி முல்லாவிற்கு நன்றாகத் தெரியும். கண்டவர்களிடம் ...
மேலும் கதையை படிக்க...
முல்லா நஸ்ருதீன் ஒரு பெண்ணைக் காதலித்தார். முல்லாவுக்கு எல்லாம் நல்லபடி அமைந்திருந்தது. ஆனால் அவருடைய கண்பார்வை மங்கலானது. ஆகவே அவர் கண் டாகடரிடம் கேட்டார், “ கண்ணுக்கு சோடாபுட்டி போட்டுக் கொண்டிருந்தால் அந்தப் பெண் எப்படி என்னைக் காதலிப்பாள் ? அவளுடைய முகம் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு நாள் துருக்கி மன்னனும் முல்லாவும் அரண்மனைப் பழத்தோட்டதில் உலாவிக்கொண்டிருந்தனர். துருக்கி மன்னன் முல்லாவை நோக்கி, ”முல்லா அவர்களே உங்களைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுகிறார்கள்! ஒரு மனிதனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனை மனத்திற்குள் எடை போட்டுப் பார்த்து அவடைய மதிப்பு என்ன ...
மேலும் கதையை படிக்க...
முல்லா ஒரு புதிய சுவர் கடிகாரம் வாங்கி வந்தார். அதை சுவரில் மாட்ட ஆணி அடிக்க அவரிடம் சுத்தியல் இல்லை! பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்க வேண்டும்.நேரம் இரவாகிவிட்டது.இந்நேரம் போய் கேட்பது சரியல்ல, மறுநாள் காலையில் கேட்க்கலாம் என் நினைத்து தூங்க சென்றார். மறுநாள் காலை ...
மேலும் கதையை படிக்க...
முல்லாவின் உடைவாள்
நம்பிக்கை மோசம் !
முல்லாவின் காதலி
மன்னரின் மதிப்பு
எண்ணங்களை பூட்ட வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)