எந்த விரல் முக்கியம்?

 

ஒரு நாள், கையில் உள்ள ஐந்து விரல்களுக்குள் எந்த விரல் முக்கியமானது என்ற பிரச்சனை உண்டாயிற்று.

கட்டை விரல், “நான் தான் முக்கியம், என் உதவி எல்லோருக்கும் தேவை” என்று பெருமையுடன் கூறியது.

அடுத்த விரல், “என்னைக் கொண்டே எல்லோரும் சுட்டிக் காட்டுவதால், எனக்கு ஆள்கட்டி விரல் என்று பெருமை உண்டு” என்று கூறியது.

நடுவிரலுக்கு மிகவும் கோபம், “எல்லோரையும் விட நானே உயரமானவன்” என்று இறுமாப்புடன் கூறியது.

நான்காவது விரல் அமைதியாக, “உங்களில் எவருக்கும் இல்லாத பெருமை எனக்கு மட்டுமே உண்டு. தங்க மோதிரத்தையோ வைரமோத்திரத்தையோ என்மீது போடுவதால், மோதிர விரல் என்ற மதிப்பு எனக்கே உண்டு” என்று அமைதியாகக் கூறியது. ஐந்தாவது விரலான சுண்டு விரல், “வணக்கம் என்று சொல்லி ஒருவரை வணங்கினாலும், அல்லது கடவுளை வணங்கினாலும், எப்போதும் நான்தான் முதலில் நிற்கிறேன். நீங்கள் நால்வரும் எனக்குப் பின்னே அல்லவே நிற்கிறீர்கள்?” என்று கூறியது.

பிரச்சினை முடிவாகவில்லை.

அப்போது ஒருவன், ‘லட்டு லட்டு’ என்று கூறிக் கொண்டிருந்தான்.

எல்லா விரல்களும் ஒன்று சேர்ந்து அவனிடம் லட்டை வாங்கி கொண்டன.

இப்போது எந்த விரல் முக்கியமானது?

- மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் தொகுப்பிலிருந்து (ஜூன் 1998). 

தொடர்புடைய சிறுகதைகள்
" போர்க் கோலம் பூண்டு எதிரெதிரே நின்றனர் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும். புலவர் கோவூர் கிழார் ஓடோடி வந்தார். முதலாவது நலங்கிள்ளியை நாடினார். நலங்கிள்ளியின் இருகரங்களையும் பிடித்துக் கொண்டு "அரசே நான் கேட்கும் கேள்விகட்குப் பொறுமையுடன் பதில் கூறுக'' என்றார். "உன் கண்ணி ?" "ஆத்தி ...
மேலும் கதையை படிக்க...
ஒரு கிராமத்தில், ஒரு சமயம் காலரா நோய் பரவியது. சிலர் மருத்துவமனைக்குச் சென்றனர். சிலர் இறந்து போனார்கள். அந்த ஊரில் இருந்த பண்ணையார் பயந்து, பட்டணத்துக்குச் செல்லத் தீர்மானித்தார். அதற்காக வண்டிக்காரனை அழைத்து, இரட்டை மாட்டு வண்டியைக் கொண்டு வரும்படி சொன்னார். வண்டிக்காரன் , சமையல்காரனிடம், ...
மேலும் கதையை படிக்க...
ஒரு சிற்றூரில் சந்நியாசி ஒருவன் இருந்தான். அவன் நாள்தோறும் வீடுவீடாகச் சென்று, பிச்சை எடுத்து உண்டு, இரவில் மரத்தடியில் தூங்குவான். ஊரை ஒட்டியுள்ள பறம்போக்கு நிலத்தில் சிறுகுடிசை போட நினைத்தான். அதற்காக பலரிடம் யாசகம் வாங்கி, ஒரு குடிசையைக் கட்டினான். பக்கத்தில் இருந்த காலி ...
மேலும் கதையை படிக்க...
காய்ந்த நெல்லை யறுத்து அடித்து, குற்றிச் சமைத்துக் கவளங் கவளமாய்த் திரட்டி யானைக்கு உணவு அளித்தால் சிறு நிலத்தில் விளைந்த நெல்லும் பல நாள் உணவாகும்! நூறு காணி நிலமாயினும், யானையை மேய விட்டால், அது தின்பது குறைவாகவும், அதன் கால்கள் அழித்து ...
மேலும் கதையை படிக்க...
ஆதனுங்கன் வேங்கடமலைத் தலைவன். ஞாயிறு மண்டலத்தைப் போன்றவன். யாவரையும் காப்பதையே தன் கடமையாகக் கொண்டவன். அவனைத் தந்தையாகக் கொண்டு வாழ்ந்தார் ஆத்திரையன் என்னும் புலவர். அவனையே நினைத்தார். அவன் புகழையே பாடினார். அவர் நெஞ்சில் வேறு யாருக்கும் இடமில்லை. ஆதனே, எந்தையே நீ ...
மேலும் கதையை படிக்க...
கன்றுகளும் பெண்மானும் சூழ்ந்து நிற்கக் கலைமான் நிற்கிறது. வேடன் வருகிறான். கலைமான் நடுக்கம் கொள்கிறது. தான் மட்டுமே நின்றால் விரைவாக ஓடிவிடலாம். தன் கன்றுகள் தப்ப வேண்டுமே, தன் காதலி பிழைக்க வேண்டுமே என்று அஞ்சி ஓடுகின்றது. இந்தக் காட்சி புலவர் ...
மேலும் கதையை படிக்க...
சேரமான் இரும்பொறையைக் கண்டு பாட இளங்கீரனார் சென்றார். அவன் புலவர் முகத்தைப் பார்த்தான். ஏனோ அவனுக்குக் கபிலர் நினைவு வந்து விட்டது: தமிழ்ப்புலம் உழுத கபிலன் இன்று இருப்பின் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று தன் ஆற்றாமையை வெளியிட்டான். இளங்கீரனார் கூறினார்: அரசே! சிறப்புற்ற பெரியோர் ...
மேலும் கதையை படிக்க...
பெரியவர் ஒருவர் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார். அவனுக்கு வருவாய் கிடைக்க வழியையும் ஏற்படுத்தி, தனிக் குடித்தனம் அமைத்து கொடுத்தார். அவ்வப்போது வந்து மகனைப் பார்த்துச் செல்வார் தந்தை ஒரு நாள் தந்தை வந்திருந்தார். இரவு நேரம், தந்தையும் மகனும் பேசிக் கொண்டிருந்தனர். ''அப்பா ...
மேலும் கதையை படிக்க...
ஒரு முது மகள்; அவள் தோற்றம் எப்படி இருக்கிறது? மணப் பொருள் மறந்த கூந்தல். நரைத்த தலை பஞ்சடைந்த கண்கள், சுருக்கம் விழுந்த தோல். அவள் வற்றி உலர்ந்த கள்ளி போல் தோன்றுகின்றாள். ஆனால் அவள் பெற்றெடுத்த மகன் யார் தெரியுமோ? ...
மேலும் கதையை படிக்க...
இடையன் ஆடுகளை ஓட்டுகிறான். குகையொன்று குறுக்கிடுகிறது. குகையைக் கண்டதும் ஆடுகளை வேறு பக்கம் திருப்புகிறான். அவன் நெஞ்சம் படபடக்கிறது. ஆடுகளை வேகமாக விரட்டுகிறானே, ஏன்? புலியின் குகை அது. புலிக்கு அஞ்சி பயந்தோடுகிறான். பாவம் புலி கண்டால் அவன் ஆடுகளின் கதி ...
மேலும் கதையை படிக்க...
அண்ணனும் தம்பியும்
கடவுள் வேற்றுமை காட்டுவாரா?
சந்நியாசி சம்சாரி ஆனான்
முறையாகத் திறை கொள்க!
நெஞ்சம் திறப்பவர் நின்னைக் காண்பர்!
தனி வாழ்வும் குடும்ப வாழ்வும்!
அவரவர் பங்கு!
பணத்தைச் சேமித்தது எப்படி?
உறை மோர்த் துளி
பகைவர்களின் நடுக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)