Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

எண்ணங்களை பூட்ட வேண்டாம்

 

முல்லா ஒரு புதிய சுவர் கடிகாரம் வாங்கி வந்தார்.

அதை சுவரில் மாட்ட ஆணி அடிக்க அவரிடம் சுத்தியல் இல்லை!

பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்க வேண்டும்.நேரம் இரவாகிவிட்டது.இந்நேரம் போய் கேட்பது சரியல்ல, மறுநாள் காலையில் கேட்க்கலாம் என் நினைத்து தூங்க சென்றார்.

மறுநாள் காலை எழுந்ததும் கடிகாரம் நினைவுக்கு வந்தது.

பக்கத்து வீட்டுக்காரரிடம் சுத்தியல் கேட்க எண்ணியபோது, அன்று வெள்ளிக்கிழமை என்பது நினைவுக்கு வந்தது!

இன்று போய் கேட்டால் ஏதாவது நினைத்துக்கொள்வாரோ? என எண்ணி அன்றும் சுத்தியல் வாங்கவில்லை!.

மறுநாள் போய் கேட்க முடிவு செய்து, பக்கத்து வீட்டை நெருங்கினார்.

பக்கத்து வீட்டில் நிறைய விருந்தினர்கள் வந்திருப்பதை பார்த்து கேட்காமலே திரும்பினார்.

இப்படி பல காரணங்களினால் ஒரு வாரமாகியும் முல்லாவால் கடிகாரத்தை மாட்ட முடியவில்லை!

அன்று வாங்கி வந்த கடிகாரம் அவரை பார்த்து சிரிப்பது போல இருந்தது.

உடனே விடுவிடு என பக்கத்து வீட்டுக்கு சென்றார்.

பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து, ”உன் சுத்தியலை நீயே வைத்துக்கொள்! எனக்கு தேவையில்லை. பொல்லாத சுத்தியல்! நீ மட்டும் தான் சுத்தியல் வைத்திருக்கின்றாயா?” என கோபமாக பேசினார்.

பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை!

பரிதாபமாக முல்லாவை பார்த்தார்.

நம்மில் பலரும் இப்படித்தான் மனதில் உள்ளதை தெளிவாக பேசாமல், மனதில் ஒன்றை வைத்து பேசி பிரச்சினைகளுக்கு காரணமாகின்றோம் என்பதே இக்கதையின் நீதி!! 

தொடர்புடைய சிறுகதைகள்
முல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை. ஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவாக்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள், எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார். அதை ...
மேலும் கதையை படிக்க...
முல்லா ஒரு தடவை அயல்நாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் எவ்வளவு தொலைதூரமாக இருந்தாலும் கழுதையின் மீது சவாரி செய்துதான் செல்ல வேண்டும். முல்லா செல்ல வேண்டியிருந்ததோ பயங்கரமான காட்டு வழி. அங்கு கள்வர் பயமும் உண்டு. முல்லா நீண்ட தொலைவு பணயம் புறப்பட்ட ...
மேலும் கதையை படிக்க...
ஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நண்பன் கிண்டலாக , “நசுருதீன், உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய மாந்தோப்பில் காதல் புரிந்து கொண்டிருக்கிறாள் “ என்று சொன்னான். முல்லா கம்பீரமானார். “எப்போது அவள் வருகிறாள் ? “ என்று கேட்டார். “இங்கு ...
மேலும் கதையை படிக்க...
முல்லா ஒரு மாலை நேரத்தில் தன் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்று அவருடன் நேரம் போனது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார். இருட்டாகி விட்டது. நண்பருக்கு மெழுகுவர்த்தியை எங்கு வைத்தேன் என்று தெரியவில்லை. இருட்டில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தார். ”என்ன சமாச்சாரம்”, என்று கேட்டார் முல்லா. ”மெழுகுவர்த்தியை ...
மேலும் கதையை படிக்க...
மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார். அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள். அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் ...
மேலும் கதையை படிக்க...
குழப்பவாதிகள்
முல்லாவின் உடைவாள்
கற்பனை காதலி
இருட்டிலும் ஒலி கேட்கும்
தளபதியின் சமரசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)