உண்மை…

 

ஓரு ஊரில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் மிகுந்த கடவுள் பக்தியும் நல்ல உள்ளமும் கொண்டவன். அவனது தாயார் அவனுக்கு நல்ல நீதிக் கதைகளைக் கூறி வளர்த்து வந்தார். அந்தத் தாய், கஷ்டப்பட்டாலும் தனது மகன் நல்லவனாக பிற்காலத்தில் வாழ்ந்து சிறப்புப் பெற வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டாள்.

உண்மைஅதனால் அவனுக்குத் தீய பழக்கங்கள், தீய நண்பர்கள் சேர்ந்துவிடாமல் மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்.

அவன் வாலிபனான். வேலைக்குச் சென்றால்தான் தாயைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

வேறு ஒரு ஊருக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு ஏற்பட்டது. தாயைவிட்டுப் பிரிந்து செல்ல வேண்டுமே என்ற வருத்தம் இருந்தாலும், நன்கு வேலை பார்த்துத் தாயைக் கவனிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் ஊரை விட்டுக் கிளம்பினான்.

அவன் ஊருக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைத் தாய் மிகுந்த அக்கறையுடன் செய்து முடித்தாள். அவன் கிளம்பும் நாள் வந்த போது தாய் அவனிடம் -

“மகனே! உனக்கு என்ன நேர்ந்தாலும் உண்மை பேசுவதை மட்டும் விட்டுவிடாதே! எங்கும் எப்போதும் யாரிடத்திலும் உண்மையை மட்டுமே நீ பேச வேண்டும். இதை மட்டும் மறக்காதே!’ என்று கூறி அவனை அனுப்பி வைத்தாள்.

அக்காலத்தில் எங்கு சென்றாலும் நடைப் பயணம்தான். வாகன வசதிகள் கிடையாது. ஆகவே, அந்த வாலிபன் ஒரு கூட்டாத்தாருடன் சேர்ந்து தனது பயணத்தைத் துவக்கினான்.

செல்லும் வழியில் சில கொள்ளையர்கள் அந்தக் கூட்டத்தை வழிமறித்தனர். கூட்டத்தினரிடம் இருந்த பொருள்களையெல்லாம் பறித்தனர்.

அந்த வாலிபனிடம் ஒரு கொள்ளையன் வந்து, “உன்னிடம் என்ன உள்ளது?’ என்று கேட்டான்.

அப்போது, அந்த வாலிபன் தனது தாய் சொன்னது போல, மறைக்காமல் உண்மையைக் கூறினான் -

“என்னிடம் நாற்பது ரூபாய்கள் மட்டுமே உள்ளன…’

கொள்ளையர்கள் அவனைப் பரிசோதித்துப் பார்த்தனர். ஆச்சரியமைடந்தனர். அவன் சொன்னது போலவே அவனிடம் நாற்பது ரூபாய்கள் மட்டுமே இருந்தன.

கொள்ளையர்களின் தலைவன் அசந்து போனான்.

அந்த சிறிய வாலிபனிடம் இருந்த உண்மை பேசும் குணம் கொள்ளையனின் மனதைக் கரைத்தது.

ஆபத்திலும் இவ்வளவு நேர்மை, உண்மை ஒரு மனிதனிடம் காணப்பட்டதைக் கண்டு மனம் மாறினான்.

அன்றே தனது திருட்டுத் தொழிலை விட்டுவிட முடிவெடுத்தான். அவர்களிடமிருந்து திருடிய பொருள்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டு நல்ல மனிதனாக மாறி உழைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திரும்பிச் சென்றான், தனது கூட்டத்தையும் அழைத்துக் கொண்டு!

- முஜ்ஜம்மில் (மார்ச் 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
செந்தில் ஒரு வேலையில்லாத பட்டதாரி. எத்தனையோ நிறுவனங்களில் அவன் நேர்முக தேர்வுக்கு சென்று வந்திருக்கிறான். இதுவரை அவன் ஒரு தேர்வில் கூட வெற்றி பெறவில்லை. அவனை ஒத்த நண்பர்கள் அனைவரும் ஒரு வேலையில் சேர்ந்து விட்டிருந்தனர். அவர்களை எல்லாம் விட செந்தில் ...
மேலும் கதையை படிக்க...
பறக்கும் குதிரை !
பெர்ஷியாவின் சுல்தான் எப்போதும் விந்தையான பொருள்களைக் கண்டால், அவற்றைத் தாம் அடைய விரும்புவார். ஒருநாள் ஓர் இளவரசன் மாயக் குதிரை ஒன்றில் ஏறி அரண்மனை உப்பரிகை மேல் பறந்து கொண்டிருந்தான். ""இந்த அற்புதமான குதிரையின் விலை என்ன?'' என்று கேட்டார் சுல்தான். அந்த இளவரசன், ...
மேலும் கதையை படிக்க...
கபாலிபுரம் என்ற மாநகரில் கபிலன் என்ற ஓவியன் இருந்தான். ஓவியம் வரைவதில் மிகுந்த திறமை உடையவன். யாரைப் பார்த்தாலும் அவர்களை அப்படியே ஓவியம் வரைந்து விடுவான். ஓவியத்திற்கும் அந்த ஆளுக்கும் சிறு வேறுபாடு கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு பொருத்தமாக ஓவியம் வரைவான். பணக்காரர்களை ...
மேலும் கதையை படிக்க...
உயர்நிலைப் பள்ளி ஒன்றின் 9-ஆம் வகுப்பு. அறிவியல் ஆசிரியர் அன்று விடுப்பு. தமிழாசிரியர் அவருக்குப் பதிலாக வகுப்புக்கு வந்தார். வழக்கத்துக்கு மாறாக அன்று அவரது கையில் ஒரு கண்ணாடி ஜாடி இருந்தது. மாணவர்களிடம் சிறு சலசலப்பு. தமிழய்யா ஏன் இந்தக் கண்ணாடி ஜாடியைக் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
நினைத்ததும்…நடந்ததும்…
தீபாவளி நாள். மாலை மணி நான்காகிவிட்டது. மழை வரும்போல லேசாக இருட்டிக் கொண்டிருந்தது. அப்போது அந்த வடுகவிருட்சியூர் கிராமமும் தீபாவளி பரபரப்பிலிருந்து கொஞ்சம் அமைதியாயிருந்தது. வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ராஜேந்திரனும் முகுந்தராஜனும் தீபாவளி சந்தோஷங்களை பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். குறும்புக்கார வால் பசங்களான ...
மேலும் கதையை படிக்க...
நேர்மையாய் இரு!!
பறக்கும் குதிரை !
பீர்பால் – ஏமாற்றாதே, ஏமாறாதே
உண்மை அறிந்தால்…
நினைத்ததும்…நடந்ததும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)