நக்கீரர் குளித்து காலைக் கடன்களை முடித்து விட்டு வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். அவரது மாணவன் வந்தான். வணங்கி விட்டு உட்கார்ந்தான். ”குருவே” என்றான் மாணவன்.
“நேற்றைய பாடத்தில் ஐயம் ஏதேனும் உண்டா ?”
“ஒரு சந்தேகம். பொருளைப் பெருக்க வேண்டும் என்றீர்கள். உண்மை விளங்கியது. ஆயினும் பலர் குங்குமம் சுமக்கும் கழுதையாக இருக்கிறார்கள். பொருளைத்திரட்டி வைத்துப் பார்த்து மகிழ்வதுதான் குறிக்கோளாக இருக்க வேண்டுமா?”
நக்கீரர் விளக்கம் கூறத் தொடங்கினார்.
“உலகத்தையெல்லாம் ஒரு குடையின் கீழ் வைத்து ஆளும் மன்னனைப் பார்த்திருக்கிறாய். தனக்கென எதுவும் இல்லாமல் இரவும் பகலும் வேட்டை யாட விரையும் வேடனையும் பார்த்திருக்கிறாய், இருவருமே உண்பது நாழி. உடுப்பதோ மேலாடை, கீழாடை என்னும் இரண்டு. பிற தேவைகளிலும் ஒன்றாகவே, விளங்குகிறார்கள். செல்வத்தைச் சேர்த்து வைப்பதாலும் பயன் இல்லை. செலவழிப்பதிலும் பயன் இல்லை கொடுத்தலில் தான் பயன் இருக்கிறது. செல்வத்துப்பயன் ஈதலே.”
- மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்
தொடர்புடைய சிறுகதைகள்
"அம்மா" என்று அழைத்து கூப்பிட்டுக் கொண்டே வந்தான் போர் உடை அணிந்த மகன்.
''கண்மணி, உட்கார்'' என்றாள் தாய். "சொல்வதைக் கவனமாகக் கேள்.. மகனைப் பெற்றெடுத்து வளர்ப்பது தாயின் கடன். அதனைச் செம்மையாகச் செய்து விட்டேன். கல்வி அளித்துச் சான்றோன் ஆக்குதல் தந்தை ...
மேலும் கதையை படிக்க...
பாண்டியன் அறிவுடைய நம்பி தன் ஆருயிர் நண்பர் வீட்டிற்குச் சென்றார். அன்று அங்கு அரசனுக்கு விருந்து. அழகான வீடு. ஏழடுக்கு மாளிகை. பொன் மணிகள் எல்லாம் நிறைந்திருக்கின்றன.
அரசனோடு விருந்துண்ணப் பலர் வந்திருக்கிறார்கள். உணவு பரிமாறப்படுகிறது. அரசன் உண்ட பின்னரே பிறர் உண்ண ...
மேலும் கதையை படிக்க...
மறக்குல மங்கை . ஒரே புதல்வன். அவனும் கைக்குழந்தை; போர் முரசு முழங்கியது. கணவன் விடை பெற்றுப் போய்விட்டான்.
போர் முடிந்தது. சிலர் திரும்பினர். யானை, பரி, தேர் மீது வந்தனர். கைக்குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு வரும் குதிரைகளை யெல்லாம் பார்க்கிறாள்.
தன் கணவன் ...
மேலும் கதையை படிக்க...
பாணனே! நின் கையில் இலக்கணம் நிறைந்த பாழ்கொண்டாய்... ஆனால் கொடுக்கும் இயல்பினர் இலாமையால் பசியைக் கொண்டனை! சுற்றி அலைந்தும் வறுமை தீர்ப்பார் எவருமிலையே என்று சோர்வுற்று நிற்கிறாய்.
நின் நிலையை நான் அறிவேன்... நீ நேரே கிள்ளி வளவனைச் சென்று பார் ! ...
மேலும் கதையை படிக்க...
"முரசும், சங்கமும், முழங்கும்படி மூவேந்தருடன் போரிட்டான், பறம்பு மலைத் தலைவன் பாரி வெற்றித்தார் பூண்டு வில்லேந்திய ஓரி கொல்லி மலையை ஆண்டான். காரி என்ற கருங்குதிரையைச் செலுத்திப் போர் வென்றான் மலையன். குதிரை மலைத் தலைவன் அதியமான். பேகன் பெரிய மலை ...
மேலும் கதையை படிக்க...
குமணன் புகழ், குரங்குக்கும் தெரியும்