இளவரசி+மோதிரம்=கல்யாணம்

 

வெகு காலத்திற்கு முன், ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பேரழகியான ஒரு மகள் இருந்தாள். அவளைத் திருமணம் செய்து கொள்ளப் பலரும் போட்டி போட்டுக்கொண்டு வந்தனர்.

Ilavarasi

ஆனால், அரசனோ, “”யார் என் மகளின் கையிலுள்ள மோதிரத்தை அவளுக்கே தெரியாமல் எடுத்து வந்து தருகிறாரோ, அவருக்கே தன் மகளைத் திருமணம் செய்து வைப்பேன்!” என்றான்.

“இளவரசியின் கையிலுள்ள மோதிரத்தை எப்படி எடுப்பது’ என்று பலரும் சிந்தித்தனர். ஆனால், வழி ஒன்றும் தெரியவில்லை. ஏனென்றால், யாருமே பார்க்க முடியாத வண்ணம், அரண்மனை அந்தப்புரத்தில் பாதுகாவலுடன் தங்கி இருந்தாள் இளவரசி.

அந்நாட்டிலிருந்த எழிலன் என்ற இளைஞன், எப்படியும் இளவரசியை மணப்பது என்று முடிவு செய்தான். தன் நண்பன் ஒருவனின் உதவியை வேண்டினான்.
அதற்கு அவன், “”கவலைப்படாதே! நீ உள்ளே மறைந்து கொள்ளக்கூடிய வகையில் பெரிய கடிகாரம் செய்கிறேன். அரசனும், இளவரசியும் இவ்வழியே வரும்போது, நீ கடிகாரத்தினுள் இருந்து இனிய இசை எழுப்பு. இளவரசி கடிகாரத்தை வாங்குவாள். உன் எண்ணம் ஈடேறும்!” என்றான்.

இதைக் கேட்டு எழிலனும் மகிழ்ந்தான். சில நாட்களுக்குள் கடிகாரம் தயாரானது. வழக்கம் போல் அரசனும், இளவரசியும் வருவதை, கடிகாரத்தினுள் இருந்த இடைவெளி வழியாகப் பார்த்தான் எழிலன். உடனே, இனிய இசை எழுப்பினான். இசையால் ஈர்க்கப்பட்ட இளவரசி, அவர்கள் நினைத்தபடி அந்தக் கடிகாரத்தை வாங்கினாள்.

நான்கு வீரர்கள் அந்த கடிகாரத்தைத் தூக்கிச் சென்று இளவரசியின் அறையில் வைத்தனர். உள்ளிருந்த எழிலனும், நேரத்துக்குத் தக்கபடி இசை எழுப்பிக் கொண்டிருந்தான். அதைக் கேட்டுக்கொண்டே இளவரசி தூங்கி விட்டாள்.
நள்ளிரவு நேரம், கடிகாரத்தைத் திறந்து வெளியே வந்தான் எழிலன். இளவரசி அறியாமல், அவள் கையில் இருந்த மோதிரத்தைக் கழற்றினான். மீண்டும் பழையபடி கடிகாரத்துக்குள் பதுங்கிக்கொண்டான்.

மறுநாள் காலையில் விழித்த இளவரசி, கடிகாரம் இசை எழுப்பாதது கண்டு வருந்தினாள். அரசனிடம் சென்ற அவள், “”கடிகாரத்தைச் சரி செய்ய வேண்டும். அதைச் செய்தவனை வரவழையுங்கள்!” என்றாள்.

எழிலனின் நண்பன் அங்கே வரவழைக்கப்பட்டான். கடிகாரத்தைச் சோதித்த அவன், “”இதை என் வீட்டிற்குத் தூக்கி வரச் செய்யுங்கள். நான் சரி செய்து, இன்று மாலையே அரண்மனைக்கு அனுப்பி விடுகிறேன்!” என்றான்.

கடிகாரம் வீடு வந்து சேர்ந்தது. அதற்குள் இருந்த எழிலன் வெளியே வந்தான். பின்னர், இயந்திரங்களினாலேயே அதேபோல இசை எழும்பும்படிச் செய்தான் அவன் நண்பன். மாலையில் அங்கு வந்த வீரர்கள், கடிகாரத்தை அரண்மனைக்கு எடுத்துச் சென்றனர்.

மறுநாள் அரசனைச் சந்தித்த எழிலன், இளவரசியின் மோதிரத்தைத் தந்தான். எப்படி இவன் கையில் மோதிரம் கிடைத்திருக்கும் என்று அறியாமல் திகைத்தான் அரசன். நடந்ததை அப்படியே சொன்னான் எழிலன்.

அவனின் அறிவுக் கூர்மையை மெச்சிய அரசன், அவனுக்கும், இளவரசிக்கும், சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து வைத்தான்.

- ஜூலை 02,2010

  

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு தெருவில் மூதாட்டி ஒருத்தி சென்று கொண்டிருந்தாள். அவள் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் சங்கிலி ஒரு திருடனின் கண்ணில் பட்டுவிட்டது. சற்று நேரத்தில் அவளது காலடி யருகே ஏதோ ஒரு பை உருண்டு வந்தது. பாட்டி பையை எடுத்துப் பார்த்தாள். ...
மேலும் கதையை படிக்க...
சிம்மபுரத்து மன்னன் பிறைசூடன் பராக்கிரமசாலி; நியாயம் தவறாதவன். அவன் மனைவி எழில்கொடி. அவர்களுக்குப் பிறந்தது ஒரே பெண் குழந்தை. அவளுக்கு பவழா என்று பெயரிட்டு செல்லமாகவும் ஆண்பிள்ளையைப் போலவும் வளர்த்து வந்தனர். பவழா கல்வியோடு அரசகுமாரர்களுக்கான வில், வாட் போர் ஆகியவற்றில் நல்ல ...
மேலும் கதையை படிக்க...
முன்னொரு காலத்தில், சூரியன் தனக்கு கொஞ்சம் பணம் தேவை என்றும், அதை வெகு விரைவிலேயே திருப்பித் தந்து விடுவதாகவும், இராசாளியிடம் கடன் கேட்டது. இராசாளியும், சூரியனுக்கு பணத்தைக் கொடுத்தது. ஆனால் வாரங்கள், மாதங்கள் என்று நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தனவே தவிர, சூரியன் வாங்கிய ...
மேலும் கதையை படிக்க...
மாட்டிகிச்சு நரி !
ஒரு கிராமத்தின் ஒதுக்குப்புறமாக இருந்த மடத்தில் ஒரு சந்நியாசி இருந்தான். அவன் பெயர் தேவசன்மா. அவன் பிச்சை எடுத்துச் சேர்த்த காசையெல்லாம் கந்தையில் முடித்துத் தன் அக்குளில் வைத்துக் கொண்டு திரிந்தான். இரவும் பகலும் அந்தக் கந்தை அவனை விட்டு நீங்காமல் ...
மேலும் கதையை படிக்க...
உண்மை விளம்பி !
சிந்து நதி தீரத்தில் சச்சிதானந்தா என்ற யோகி, ஒரு ஆஸ்ரமத்தை ஸ்தாபித்து தன் சிஷ்யர்களோடு வாழ்ந்து வந்தார். அவர் உண்மைதான் தேசத்தை முன்னேறச் செய்யும் என்றக் கொள்கையைக் கடைப்பிடித்ததால் மக்கள் அவரை, "யோகி உண்மை விளம்பி' என வர்ணித்தனர். "மெய் உயர்வைத் ...
மேலும் கதையை படிக்க...
பேராசை பெருநஷ்டம்
புதிர்கதை – ஏன் மணக்கவில்லை
பணம் கொடு!
மாட்டிகிச்சு நரி !
உண்மை விளம்பி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)