இளங்குமணா, என் செய்தாய்?

 

இளங் குமணன் தன் அண்ணன் குமணனை விரட்டி விட்டு, அரசுக்கட்டில் ஏறினான். கொடை வள்ளலாகிய குமணன் காட்டிற் சென்று, தலை மறைவாய் வாழ்ந்து வந்தான்.

பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர், காட்டிற்குச் சென்றார். குமணனைக் கண்டு பாடினார். அப்பொழுது குமணன் கையிற் பொருள் இல்லை! அவன் தன் வாளை உருவி புலவரிடம் கொடுத்துத் தன் தலையை அரிந்து எடுத்துக்கொள்ளுமாறு கூறினான்.

“என் தலையை எடுத்துக்கொண்டு போய் என் தம்பியிடம் கொடுத்தால் அவன் பொன் கொடுப்பான் என் தலைக்கு, அவன் விலை கூறியுள்ளான்” என்றான் குமணன்,
புலவர், கை நடுங்க வாளை எடுத்துக் கொண்டு ஓடினார். இளங் குமணனைக் கண்டார்.

“நிலையற்ற உலகின் தன்மையை அறிந்து, புகழால் தன்மையை நிலைநிறுத்திக் கொண்டோருள், குமணனே உயர்ந்தவன். அவனைப் பாடி நின்றேன். அவன் தலை கொய்ய வாள் கொடுத்தான் உவகையுடன் ஓடி வருகிறேன்” என்றார்.

இளங்குமணனை இரத்த பாசம் பற்றியது. பதை பதைத்தான். மயங்கினான். மயக்கம் தெளிந்தபின் உண்மை உணர்ந்தான். அண்ணன் காலடியில்
விழவேண்டிக் காட்டிற்கு ஓடினான்.

- மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம் 

தொடர்புடைய சிறுகதைகள்
அமுதமே கிடைத்தாலும், அதனைத் தனியே இருந்து உண்ணார். சினங்கொள்ளார். யாரையும் ஏளனம் பண்ணார். சோம்பல் அற்றவர். பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சுவர்; புகழ் கிடைப்பின் உயிரும் கொடுப்பர்! பழியெனின், உலகமே கிடைத்தாலும் விடுப்பர்! அயர்வு அற்றவர். தாம் வாழ வாழாது, பிறர் வாழ ...
மேலும் கதையை படிக்க...
"ஒளவையே" காலையில் உன்னைத் தேடினேன் காணவில்லை. எங்கே போயிருந்தாய் " என்றான் மன்னன் அதிகமான். "ஆற்றில் புது வெள்ளம் வந்திருக்கிறது'' "வயல்களுக்குத் தண்ணீர் திறந்து விட்டிருக் கிறார்களா?" "ஆமாம் வயலில் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்" ''அப்படியானால் அச்சமில்லை . நெல்லும் நீருமே நம் நாட்டிற்கு உயிர்." "இல்லை அரசே இல்லை. ...
மேலும் கதையை படிக்க...
இறந்துப் பிறந்தது குழந்தை இல்லை, இல்லை. தசைப் பிண்டமாய்ப் பிறந்து விட்டது. வீரமன்னர் அதை என் செய்வர்? வாளால் அரிந்து புதைப்பர். ஏன்? மறக்குடியிற் பிறக்கும் எவ்வுயிரும் விழுப்புண் பட்டு மடிதல் வேண்டும். உயிர் வாழ விரும்பி உடல் கொண்டு திரிந்தால் ...
மேலும் கதையை படிக்க...
குற்றம் புரிந்த நண்பரைப் பொருத்தருள்வான் பிறருடைய வறுமையைக் கண்டு, நாணம் அடைவான் மூவேந்தர் அவைக்களத்தில் மேம்பட்டு நடப்பான்! அவன் பெயர் ஏறைக்கோன்! அவன் எங்கட்குத் தலைவன்... உங்கட்கும் தலைவர்கள் உண்டல்லவா? அவர்களின் பண்புகளைக் கூறுங்கள் பார்க்கலாம்! அவர்களுக்கு இத்தகுதி இல்லை என்பதை நன்கு அறிவேன். எங்கள் ...
மேலும் கதையை படிக்க...
அரசனுடைய ஏவலாளர்க்கு ஐயம் தோன்றியது. அதன் முடிவு என்ன தெரியுமா? கிள்ளியின் ஏவலாளர்கள் அயலூரான் ஒருவனைக் கைது செய்து காவலில் வைத்தனர். அவன் ஒற்றன் என்பதாக அவர்கள் கருதினர். கொற்றவனும் அக்கருத்தை ஏற்றான். இச்செய்தி கோவூர் கிழாருக்கு எட்டியது! அவர் ஒடோடியும் ...
மேலும் கதையை படிக்க...
உலகம் இருக்கின்றது!
உலகிற்கு உயிர் எது?
இரந்தும் உயிர் வாழ்வதோ?
ஏறைக் கோன் குணம் எவர்க்கு வரும்?
பரிசில் வாழ்க்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)