இரவலர் யார்? புரவலர் யார்?

 

“வெளிமான், உன்னிடம் பரிசில் பெற வந்தேன்!” என்றார் பெருஞ்சித்திரனார்.

“தம்பி, இவர்க்குப் பரிசில் தருக” என்று தன் தம்பியை நோக்கிக் கூறினான் வெளிமான்.

இளவெளிமான், புலவர் திறம் உணரா இளையன். எனவே, அவன் தன் கைக்குக் கிட்டிய பொருளைக் கொண்டு வந்து பரிசெனக் கொடுத்தான். பெருஞ்சித்திரனார் பரிசைப் பார்த்தார். இளவெளிமான், முகத்தைப் பார்த்தார். பின்னர் சென்று விட்டார்.

அவர் அம்பென விரைந்து குமணனை அடைந்தார். குமணன் புலவர் முகத்தைப் பார்த்தான், அவர் கண்களில் பனிக்கும் நீர்த் துளியைக் கண்டான்… அவன் கைகள், நீண்டன. புலவர் பாடினார்; குமணன், பெருஞ்சித்திரனாருக்குக் கை நிறையப் பரிசு கொடுக்கவில்லை , அவர், கண் நிறையப் பரிசு கொடுத்தான்!

என்ன பரிசு என்று நினைக்கிறீர்கள்? ஒரு பெரிய யானை!

சித்திரனார் உள்ளத்தில் ஒரு கணம் மின் வெட்டிற்று.

அவர் யானையை ஓட்டிக் கொண்டு, தன் இல்லத்திற்கா போனார்? இல்லை. இல்லை. நேரே இளவெளிமானிடம் சென்றார்! அவன், காவல் மரத்தில், யானையைக் கட்டினார்.

”அரசே, அதோ, உன் காவல் மரத்தில் கட்டியிருக்கும் யானையைப் பார்! அது புரவலன் தந்த பரிசில் இப்போது இதனை இரவலன் உனக்கு அளிக்கிறான். நின்னிடத்து விட்டுச் செல்லுகிறேன். ஏற்றுக் கொள் இதனை. சென்று வருகிறேன்.”

“புரவலர் உண்டு என்பதையும் தெரிந்து கொள், அவ்வாறே இரவலர் உண்டு என்பதையும் தெரிந்து கொள்”, “காவல் மரமும் கட்டப் பெற்றிருக்கும் யானை யும் கதை கூறின.

- மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம் 

தொடர்புடைய சிறுகதைகள்
பாண்டியன் அறிவுடைய நம்பி தன் ஆருயிர் நண்பர் வீட்டிற்குச் சென்றார். அன்று அங்கு அரசனுக்கு விருந்து. அழகான வீடு. ஏழடுக்கு மாளிகை. பொன் மணிகள் எல்லாம் நிறைந்திருக்கின்றன. அரசனோடு விருந்துண்ணப் பலர் வந்திருக்கிறார்கள். உணவு பரிமாறப்படுகிறது. அரசன் உண்ட பின்னரே பிறர் உண்ண ...
மேலும் கதையை படிக்க...
ஒரு கிராமத்தில், ஒரு சமயம் காலரா நோய் பரவியது. சிலர் மருத்துவமனைக்குச் சென்றனர். சிலர் இறந்து போனார்கள். அந்த ஊரில் இருந்த பண்ணையார் பயந்து, பட்டணத்துக்குச் செல்லத் தீர்மானித்தார். அதற்காக வண்டிக்காரனை அழைத்து, இரட்டை மாட்டு வண்டியைக் கொண்டு வரும்படி சொன்னார். வண்டிக்காரன் , சமையல்காரனிடம், ...
மேலும் கதையை படிக்க...
பூங்குன்றனாரைப் பார்க்க வந்தார் ஒரு நண்பர். சிட்டுக் குருவி போல் கவலையற்ற வாழ்வு வாழ வழி கூறும்படி கேட்டார். புலவர் தம் பொன்னுரையைத் தொடங்கினார். "எல்லா ஊரும் நம் ஊரே! எல்லோரும்: நம் உறவினர் ! தீமையும் நன்மையும் பிறர் கொடுக்க வருவதில்லை நம்மால் ...
மேலும் கதையை படிக்க...
மலையமான் திருமுடிக்காரி வரையாது கொடுக்கும் வள்ளல். அவனைக் காணச் சென்றார் கபிலர். நெஞ்சம் நெகிழ்ந்து வாழ்த்தினார்: "திருமுடிக்காரியே! நாட்டில் உனக்கு உடைமையானது எது? பண்டு தொட்டு நின் நாட்டைக் கடல் கவர்ந்து கொள்ளவுமில்லை .... பகைவர் கைப்பற்றவுமில்லை .... ஆனால், பாடி வரும் பரிசிலர் ...
மேலும் கதையை படிக்க...
ஆற்றங்கரையில் ஒருவன் துணி துவைத்துக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் குளிக்கப்போன ஒருவன் ஆழத்தில் சிக்கிக் கொண்டான். துணி துவைத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து, "தோழனே ! என்னைக் காப்பாற்று என்று குரல் கொடுத்தான். "உன்னைக் காப்பாற்றினால், எனக்கு என்ன தருவாய்" என்று கேட்டான் துணி துவைத்தவன். "நான் ...
மேலும் கதையை படிக்க...
மயக்கும் மக்கள்
கடவுள் வேற்றுமை காட்டுவாரா?
யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
எது உடைமை?
கொஞ்சமாவது படித்திருக்கிறாயா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)