அவமானப்பட்ட கணவர்கள்

 

ஒரு நாட்டை நந்தன் என்ற பெயருடைய மன்னன் ஆண்டு வந்தான். குடி தழுவிக் கோல் ஓச்சி வாழ்ந்த அவனுடைய புகழ் எங்கும் பரவியிருந்தது. நந்தனிடம் வரனாசி என்ற ஒரு அமைச்சன் இருந்தான். அவன் நல்ல மதியூகி, கல்விமான, உலக அனுபவம் உடையவன், சிறந்த இராஜ தந்திரி.

அரசனும் அமைச்சனும் சிறந்த பண்பும் புகழும் பெற்றவர்களாக இருந்தாலும் மனைவியரிடம் அடங்கிக் கிடப்பவர்கள். மனைவியர் என்ன சொன்னாலும் தட்டாது செய்து பழகிவிட்டவர்கள்.

ஒருநாள் அமைச்சருக்கும் அவன் மனைவிக்கும் சிறு சச்சரவு மூண்டது. சச்சரவை முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய அமைச்சன் அன்பே அர்த்தமற்ற சிறு விஷயத்துக்காக இப்படி நீ சண்டை பிடிப்பது நல்லதல்ல. உன்னுடன் சமரசமாகப் போக எண்ணுகின்றேன். நான் என்ன செய்தால் திருப்தியடைந்து சண்டையை நிறுத்துவாய் என்று சொன்னால் அவ்வாறே செய்யத் தயாராக இருக்கின்றேன் என்றான்.

உங்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டு என் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று உத்தரவிட்டாள் மனைவி.

அமைச்சன் அவ்வாறே செய்த ஒரு வகையாக மனைவியைச் சமாதானப்படுத்தினான்.

பிறிதொரு நாள் மன்னனுக்கு அவன் மனைவிக்கு மிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
என்ன முயற்சியெடுத்தும் மனைவியைச் சமாதானப் படுத்த முடியாத அரசன் அவளிடம் சரணாகதியடைந்துவிடத் தீர்மானித்தான்.

அன்பே நீ தொடர்ந்து சண்டை போட்டால் ஊர் சிரிக்கும் நிலை ஏற்பட்டுவிடும். இது நம் இருவருக்கும் நல்லது அல்ல. அதனால்தான் என்ன செய்தால் நீ திருப்தியடைந்து சண்டையை நிறுத்துவாயோ அதைச் சொல். அப்படியே செய்து விடுகின்றேன் என்று கூறினான். 

தொடர்புடைய சிறுகதைகள்
முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன். கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ...
மேலும் கதையை படிக்க...
நாடகம்!
இரவு பனிரெண்டு மணி இருக்கும். பரீட்சைக்கு படித்து கொண்டிருந்த சிவா புத்தகத்தை மூடி வைத்துவிட்டு படுக்கச் சென்றான். அப்போது அவன் அப்பாவின் அறைக்கு வெளியே இருந்த வராண்டாவில் நான்கு நபர்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடை பெற இருந்தனர். அவர்களது பேச்சுக்களை ஒட்டுகேட்ட ...
மேலும் கதையை படிக்க...
ஒரு தேவதையும், மயிலும் !
முற்காலத்தில் பறவைகள், விலங்குகள் யாவும் மனிதர்களைப் போலவே பேசும் திறன் படைத்திருந்தன. ஒருநாள் காட்டில் அவைகளுக்குள் ஒரே சண்டை. காரணம் தங்கள் தங்கள் அழகைப் பற்றிய பெருமை. அழகை ஆராதிக்காதவர்கள் யார்? இவைகளின் சண்டையை மிகவும் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு ...
மேலும் கதையை படிக்க...
மாட்டிகிச்சு நரி !
ஒரு கிராமத்தின் ஒதுக்குப்புறமாக இருந்த மடத்தில் ஒரு சந்நியாசி இருந்தான். அவன் பெயர் தேவசன்மா. அவன் பிச்சை எடுத்துச் சேர்த்த காசையெல்லாம் கந்தையில் முடித்துத் தன் அக்குளில் வைத்துக் கொண்டு திரிந்தான். இரவும் பகலும் அந்தக் கந்தை அவனை விட்டு நீங்காமல் ...
மேலும் கதையை படிக்க...
மகாத்மா காந்தி குட்டிபிள்ளையாக இருக்கும் போது, விளையாடுவதில் பிரியம் அதிகம். எனவே, அவர் தன்னுடைய சகோதரர்களுடன் சேர்ந்து விளையாடுவார். காந்திஜியை அவருடைய பெற்றோர் "மோனியா' என்று செல்லமாக அழைப்பர். காந்திஜி தன் சகோதரர்களுடன் சிறு குழந்தைகள் விளையாடும் சாதாரண விளையாட்டுக்களான ஓடிப் பிடித்து ...
மேலும் கதையை படிக்க...
பூதம் சொன்ன கதை
நாடகம்!
ஒரு தேவதையும், மயிலும் !
மாட்டிகிச்சு நரி !
மோனியா !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)