அல்ட்ராமேன் சைக்கிள்

 

சன்னலுக்கு அருகில் தொங்கிக் கொண்டிருந்த மரக்கிளை வெகுநேரம் கதவை உரசிக் கொண்டிருந்தது. முகிலன் மெல்ல கண்களைத் திறந்தான். சன்னல் கதவின் சிறு துளையிலிருந்து உள்ளே நுழைந்த ஒளி அவன் முகத்தில் படர்ந்தது.

தம்பி அழும் சத்தம் அவனுடைய காதைக் குடைந்தது. வெளியே வந்து சத்தம் கேட்டத் திசையை நோக்கிச் சென்றான். ஒரு கால் உடைந்த தம்பியின் சைக்கிள் முன்வாசல் கதவோரம் கிடந்தது.

“தம்பி சைக்கிள் உடைஞ்சிருப்பா” என அம்மா கூறிவிட்டு அவனைச் சமாதானப்படுத்துவதில் மும்முரமாக ஆனார்.

எப்பொழுதும் இந்நேரம் முகிலனின் தம்பி சைக்கிள்தான் உலா வந்து கொண்டிருப்பான். மதியம் மெல்ல தொடங்கும் அந்தச் சைக்கிள் சத்தம் மாலை முகிலனின் அப்பா வரும்வரை அடங்காது. இரவில் அவன் படுத்துறங்கியதும் முகிலனின் அப்பா சைக்கிளை எடுத்து மேலே மாட்டி வைத்துவிடுவார்.

இப்பொழுது சைக்கிள் பரிதாபகாமக் கிடந்தது. ஒரு கால் இல்லாமல் சைக்கிளைத் தம்பியால் ஓட்ட முடியாது. அம்மா என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பியிருந்தார். தம்பி அழுகையை நிறுத்துவதாகத் தெரியவில்லை. தேம்பி தேம்பி அழுதான்.

முகிலன் வீட்டுக்கு வெளியே யோசனையுடன் வந்து நின்றான். சுற்றும் முற்றும் பார்த்தான். இரண்டு வீடு தள்ளி இருக்கும் அவனுடைய நண்பனிடம் சங்கிளி அறுந்த ஒரு பழைய சைக்கிள் இருப்பது ஞாபகத்திற்கு வந்தது. ஆனால், அவன் வீட்டுக்குப் போனாள் அவனுடைய அம்மா தூரத்திலேயே முகிலனைத் திட்டத் தொடங்கிவிடுவார்.

மெதுவாக வீட்டைவிட்டு வெளியேறி மாலனின் வீட்டுக்குச் சென்றான். காற்று அவன் உடலை உரசிச் சென்றது. நல்லவேளை மாலம் வெளியில்தான் இருந்தான்.

“டே…. இங்க வா” என முகிலன் மெதுவான குரலில் மாலனை அழைத்தான்.

மாலன் வேலிக்கு அருகில் வந்து முகிலனைப் பார்த்தான்.

“எனக்கு உன்னோட அந்தப் பழைய சைக்கிள் வேணும்டா… கொஞ்ச நேரம் கொடுக்க முடியுமா?” எனக் கேட்டுவிட்டு அந்தச் சைக்கிளையே பார்த்து நின்றான்.

முகிலன் அவன் அம்மாவுக்குத் தெரியாமல் முன்கதவை மெல்ல திறந்து அந்தப் பழைய சைக்கிளை உருட்டிக் கொண்டு வெளியே வந்தான். முகிலனும் முகமெல்லாம் மலர்ச்சி. சங்கிலி இல்லாத சைக்கிள் ஓடப்போவதில்லை. முகிலனை ஆச்சர்யமாகப் பார்த்தான் மாலன்.

“இதை எப்படிடா ஓட்ட போறே?” எனக் கேட்டுவிட்டு முன்கதவை அடைத்தான்.

முகிலன் பதில் ஏதும் சொல்லாமல் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான். அவனைவிட கொஞ்சம் உயரமான சைக்கிள் அது. வீட்டை நெருங்க நெருங்க தம்பியின் ஓயாத அழும் குரல் வேகமாகக் கேட்டது. முகிலனால் அதைக் கேட்கமுடியவில்லை. சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.

“குமரா! வெளிய பாரு அண்ணன் பெரிய சைக்கிள் கொண்டு வந்துருக்கேன். வந்து பாருங்க.. அல்ட்ரமேன் சைக்கிள் இது” எனக் கண்களைப் பெரிதாக்கிக் காட்டினான் முகிலன்.

தம்பி அழுது வீங்கிய கண்களுடன் வெளியே வந்தான். தம்பியைத் தூக்கி சைக்கிளின் இடைக் கம்பியில் உட்கார வைத்தான். பின்னர், முகிலன் சைக்கிளில் ஏறி கால்கள் இரண்டையும் தரையில் வைத்துச் சைக்கிளைத் தள்ளினான். தம்பியின் அழுகை நின்று இலேசாகச் சிரிக்கத் துவங்கினான். சங்கிலி இல்லாத அந்த அல்ட்ராமேன் சைக்கிள் முகிலனின் காலால் ஓடிக் கொண்டிருந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
நான் ஒரு எம்.எல்.எம் வியாபார ஏஜேண்ட. அதனால் என் காருக்குள் ஒரு எளிய கொசு நுழையக்கூடாது என்றெல்லாம் இல்லைத்தான். யார் காரைத் திறந்து வைத்திருந்தாலும் இந்த எழவெடுத்த கொசு சட்டென நுழைந்துவிடும். நீங்கள் என்னை எங்காவது பார்த்திருக்கக்கூடும். தைப்பிங் நாலு ரோடு ...
மேலும் கதையை படிக்க...
பரப்பரப்பான நகரத்தின் சாலை அது. வாகனங்கள் அங்கும் இங்குமாக அலைமோதிக் கொண்டிருந்தன. ‘பீங்! பீங்!’ என வாகனங்கள் எழுப்பிய சத்தங்கள் காதைத் துளைத்தன. சாலையோரங்களில் நின்று கொண்டிருந்தவர்கள் சாலையைக் கடக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தனர். “சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என வேகமாக அந்த வாகன நெரிசலை ...
மேலும் கதையை படிக்க...
காலம் ஒவ்வொரு கணமும் எங்கோ தவறிவிடுவது போல அச்சமாக இருக்கிறது. வீட்டு மேல் சட்டங்கள், வெளியிலுள்ள குளிரையும் வெயிலையும் உள்ளிழுத்து பரவவிடும் தகரங்கள், பாதி நீரை நிரப்பிக்கொண்டு பல நாட்களாக இடைச்சட்டத்திலேயே உட்காந்திருக்கும் குவளை, என அனைத்தையும் வெகுநேரம் பார்த்திருக்க முடியவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
1 துண்டை இழுத்துக் கட்டும்போது அது தொடைவரை இறங்கி கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறது. என்னுடைய குளியல் நேரம் சரியாக 6 மணிக்குத் தொடங்கும். முன்கதவை அடைத்துவிட்டு அறைக்கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு முதலில் ஆடையைக் களைவேன். சிறிது நேரம் நிர்வாணமாக இருப்பதற்கு ஒரே ஒரு ...
மேலும் கதையை படிக்க...
இரயில் கிளம்பும்போது மணி 4.50 இருக்கும். இரயில் பயணம் என நினைக்கும்போது ஒரு வகையான பூரிப்பு சட்டென மனத்திலிருந்து தாவி உடலில் நெளிகிறது. பயணங்களில் கிடைக்கும் ஓர் அர்த்தமற்ற தனிமை விசாரணைகளற்றது. எவ்வித யோசனையுமின்றி வெறுமனே வெளியைப் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு ...
மேலும் கதையை படிக்க...
கொசு
ஓரம் போ
கனவைக் கொல்வது அல்லது கனவுக்குள் சாவது
குளியல்
நெடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)