அப்பாவின் சட்டை!

 

வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்த கேசவனின் அப்பா சிவகுமார் தனது மேல்சட்டையைக் கழற்றி தனது அறையிலுள்ள ஹேங்கரில் மாட்டியதைப் பார்த்துக் கொண்டேயிருந்தான் கேசவன்.

அம்மா சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார். சட்டையை மாட்டிய சிவகுமார் துண்டை எடுத்துக் கொண்டு முகம் அலம்புவதற்காக குளியலறை நோக்கிச் சென்றார்.

மெதுவாக எழுந்த கேசவன் சுற்றுமுற்றும் பார்த்தான். தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டான்.

அப்பாவின் அறைக்குள் சென்று அவருடைய சட்டைப் பைக்குள் கைவிட்டான்.

பத்து, இருபது, ஐம்பது, நூறு என ரூபாய் நோட்டுகள் இருந்தன.

பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துத் தனது பாக்கெட்டில் திணித்துக் கொண்டு, மீதிப் பணத்தை அப்படியே அப்பாவின் சட்டைப் பைக்குள் வைத்துவிட்டு ஏதுமறியாதவன் போல வெளியே வந்த அமர்ந்து கொண்டு பாடப்புத்தகத்தை எடுத்துவைத்துக் கொண்டான். படிப்பது போல பாசாங்கு செய்ய ஆரம்பித்தான் கேசவன்.

மறுநாள் பள்ளி சென்றபோது, அப்பாவின் பாக்கெட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் எடுத்த பத்து ரூபாய்க்கு ஆசைதீர தின்பண்டங்கள் வாங்கிச் சாப்பிட்டான்.

அன்று பத்து ரூபாய் காணாமல் போனது பற்றி அப்பா யாரிடமும் கேட்கவில்லை. இருக்கும் அத்தனை பணத்தில் ஒரே ஒரு பத்து ரூபாய் காணாமல் போனது பற்றி அப்பாவுக்குக் கணக்கு தெரியவில்லை என எண்ணிக் கொண்டான் கேசவன்.

அடுத்த நாள், அப்பா சட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டிவிட்டுப் போக, கேசவன் இப்போது இருபது ரூபாயை எடுத்துத் தனது சட்டைப் பாக்கெட்டில் மறைத்து வைத்துக் கொண்டான். மறுநாள் பள்ளி சென்றபோது, இன்னும் நிறையத் தின்பண்டங்கள் வாங்கிச் சாப்பிட்டு மகிழ்ந்தான்.

அந்த இருபது ரூபாய் பற்றியும் அப்பா ஒன்றுமே பேசாததால் கேசவனுக்குத் தைரியம் அதிகமாகிப் போனது.

அடுத்த நாள் அப்பா கழற்றிப் போட்ட சட்டையிலிருந்து ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துத் தனது பாக்கெட்டுக்குள் திணித்தபோது -

“”டேய், கேசவா… பத்து இருபதாகி இருபது ஐம்பதாகிவிட்டதா? இது நியாயமாடா? அப்பாவின் சட்டைப் பைக்குள்ளிருந்து தெரியாமல் பணத்தை எடுத்துத் தின்பண்டங்கள் வாங்க செலவு செய்வது திருட்டுத்தனம் இல்லையா? படிக்கிற மாணவன் இப்படிச் செய்யலாமா?” என்று யாரோ கேட்கும் குரல் கேட்டது.

குரல் எங்கிருந்து வருகிறது என்று சுற்றுமுற்றும் பார்த்தான் கேசவன். அங்கே அவனைத் தவிர யாரும் இல்லை… இப்போது பயத்தினால் அவனது முகம் குப்பென்று வியர்க்கத் தொடங்கியது. கைகால்கள் நடுங்கின…

மெதுவாக, ”யார் அது?” என்று கேட்டான்.

“”டேய் கேசவா… இன்னுமாடா நான் யார் என்று தெரியவில்லை? நன்றாக யோசி… நான்தான் உன்னுடைய மனச்சாட்சி!” என்றது அந்தக் குரல்.

தப்புதான்… யாரும் என்னைக் கவனிக்கவில்லை என்ற தைரியத்தில் தவறு செய்துவிட்டேன். ஆனால், என்னுடன் எப்போதும் இருக்கும், எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கும், மெüனமாகப் பேசும் மனசாட்சி இருப்பதை மறந்துவிட்டேன். இது தவறுதான்… இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன். இது சத்தியம்! என்று எண்ணியபடி ஐம்பது ரூபாயை மீண்டும் அப்பாவின் சட்டைப் பைக்குள் வைத்துவிட்டு, மானசீகமாக மனச்சாட்சியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் கேசவன்.

கேசவன் இப்பொழுதெல்லாம் தனக்குத் தின்பண்டங்கள் வேண்டும் என்றால் அப்பா அல்லது அம்மாவிடம் கேட்டுப் பணம் வாங்கிக் கொள்கிறான். திருடவேண்டும் என்ற நினைப்பே அவனுக்கு வருவதில்லை. காரணம் அவனுடைய மனச்சாட்சி!

- டே.கிருபாதேவி (மே 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
உண்மை மதிப்பு!
விறகுவெட்டி வீழிநாதன், ஒருசமயம் ஒரு மன்னனை உயிர் ஆபத்தில் இருந்து காப்பாற்றினான். மன்னன் மகிழ்ந்து வீழிநாதனுக்கு ஒரு காட்டினைப் பரிசாக அளித்தான். மரக்கட்டைகளை வெட்டி விற்கலாம் என்று. வீழிநாதனுக்கு மரக்கட்டைகளை வெட்டிக் கடைத்தெருவுக்குச் சுமந்து செல்வது சிரமமாக இருந்தது. அக்கட்டைகளைச் சுட்டுக் கரியாக்கினான். ...
மேலும் கதையை படிக்க...
ஊர்மிளை
இருள் பிரியாத புலர் காலைப்பொழுதில் கிளம்புவதற்கான ஆயத்தங்களுடன் அரண்மனை முகப்பில் அந்தத் தேர் நின்றுகொண்டிருந்தது. சீதையின் வரவை எதிர்நோக்கியபடி சாரதிக்கு அருகே இறுகிய முகத்தோடு இலட்சுமணன். ""அவர் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்ததால் கொஞ்ச நேரம் காத்திருந்தேன்! இன்னும் உறக்கம் கலைந்தபாடில்லை...நேற்றுப் பகல் முழுவதும் ...
மேலும் கதையை படிக்க...
உயிர்
எல்லாம் முடிந்துவிட்டது என்றே மல்லிகா நினைத்தாள். வாழ்க்கையில் இனிமேல் அவளுக்கு என்ன இருக்கிறது? அவள் பிறந்ததிலிருந்து பட்ட துன்பங்களையும் மன வேதனைகளையும் நினைத்துப் பார்க்கும்போது இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. பிறந்ததிலிருந்தே அவள் கஷ்டங்களுக்கு நடுவிலே வளர்ந்து வந்தாலும் ஆண்டவனாகப் பார்த்து அவளுக்கென ராசய்யாவை ...
மேலும் கதையை படிக்க...
ஒரு ஊரில் மருதலிங்கம் என்ற வியாபாரி ஒருவர் இருந்தார். மாதம் ஒருமுறை அயல்நாட்டிற்குச் சென்று பொருள்களை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார். வியாபாரம் நன்றாக நடந்தாலும் அவருக்கு ஒரு பிரச்னை இருந்து வந்தது. பல மாதங்களுக்கு முன்பு அயல்நாட்டுக்குச் சென்ற போது நிறைய ...
மேலும் கதையை படிக்க...
மலர் மனம்
ராமையா வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு வீட்டுக்குள் வந்தார். வீடு நிசப்தமாக இருந்தது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதது போல், சுவரில் இருந்த பழைய கடிகாரம் பதினோரு முறை காறிற்று. ""இன்னும் பொட்டுண்டு வரலையா?'' என்று சமையலறையைப் பார்த்துக் கேட்டார். ""பத்தரைக்கே வந்துடுவானே'' உள்ளேயிருந்து ஒன்றும் ...
மேலும் கதையை படிக்க...
உண்மை மதிப்பு!
ஊர்மிளை
உயிர்
செலவும் சிக்கனமும்
மலர் மனம்

அப்பாவின் சட்டை! மீது ஒரு கருத்து

  1. N.Chandrasekharan says:

    மனிதர்கள் எக்காலத்திலும் மனசாட்சிக்குப் பயந்து நின்றால் போலீஸ் கோர்ட் எதுவும் வேண்டாமே! கதை நல்ல அறிவு புகட்டுவது சிறப்புத்தான். நன்று. வாழ்த்துக்கள். லென்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)