அபசகுனம்

 

அக்பர் தினமும் தூங்கி எழுந்தவுடன் அவர் எதிரில் உள்ள வினாயகர் படத்தை தான் பார்ப்பார்.

ஒரு நாள் அவர் கண் விழிக்கும் போது சிப்பாய் ஒருவர் வந்து விட்டார். அன்று முழுவதும் அக்பருக்கு பல‌ பிரச்சனைகள் வ்ந்தது. எல்லாம் அந்த‌ சிப்பாய் முகத்தில் விழித்ததால் தான் என்று அந்த‌ சிப்பாயை தூக்கில் போட‌ உத்தரவிட்டார்.

இந்த‌ விஷயம் பீர்பாலுக்கு தெரிய‌ வந்தது.பீர்பால் மன்னரிடம் ஏன் அவரை தூக்கிலிடபோகிறீர் என்று கோபமாக கேட்டார்.

அதற்கு அக்பர் இவனுடைய‌ முகத்தில் விழித்ததால் எனக்கு ஏகப்பட்ட‌ பிரச்சனைகள் வந்தது, இவனுடைய‌ முகம் அபசகுனமானது என்று கூறினார்.

அதற்கு பீர்பால் பயங்கரமாக‌ சிரித்தார்.

“ஏன் சிரிக்கிறாய்?” என்று அக்பர் கோபமாக‌ பீர்பாலை பார்த்து கேட்டார்.

அதற்கு பீர்பால் “நீங்கள் அவனுடைய‌ முகத்தில் விழித்ததால் உங்களுக்கு பிரச்சனைகள் மட்டும் தான் வந்தது. ஆனால் அவன் உங்கள் முகத்தில் விழித்ததால் அவனுக்கு உயிரே போகப்போகிறதே , அப்போ யாருடைய‌ முகம் அபசகுனமானது என்று நினைத்து சிரித்தேன்” என்றார்.

அக்பர் தன் தவறை உணர்ந்து அந்த‌ சிப்பாயை விடுதலை செய்தார்.‌ 

தொடர்புடைய சிறுகதைகள்
பீர்பாலின் நகைச்சுவையான பேச்சுகளை அக்பர் மட்டுமன்றி தர்பாரில் பலரும் ரசித்தனர். ஆனால், சிலருக்கு மட்டும் பீர்பாலுக்குக் கிடைத்த பாராட்டுகள் பொறாமையை அளித்தன. ஒவ்வொரு முறையும் அக்பர் மனந்திறந்து பீர்பாலைப் பாராட்டுகையில், அவர்களுடைய மனம் பற்றியெரிந்தது. எப்படியாவது பீர்பாலை மட்டம் தட்ட வேண்டும் ...
மேலும் கதையை படிக்க...
அக்பர் சக்ரவர்த்தியின் அரண்மனையில் பாதுகாவலர்களில் 'செல்வம்' என்ற பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் ஒரு நாள் ஏதோ தவறு செய்து விட்டான். அதனால் அவனை வேலையிலிருந்து நீக்கி விடும்படி உத்தரவிட்டார் அக்பர். செல்வம் ஏழைக் குடும்பத்தைச்சேர்ந்தவன்; வேலை நீக்க உத்தரவினால் அவன் மிகவும் ...
மேலும் கதையை படிக்க...
பேரரசர் அக்பர், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். அமைச்சராக இருந்த பீர்பாலோ இந்து மதத்தைச் சேர்ந்தவர். இதனால் சில நேரங்களில் அவர்களிடையே விவாதங்கள் நிகழும். ஒரு முறை பீர்பாலிடம் அக்பர், ''எங்கள் இஸ்லாம் மதத்தில் ஒரே கடவுள்தான் உள்ளார். அதே போல கிறிஸ்தவ மதம், ...
மேலும் கதையை படிக்க...
அக்பரும் பீர்பாலும் வழக்கம்போல் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பீர்பால் கூறிய கருத்து அக்பர் ஏற்கக்கூடியதாக இல்லாததோடு கோபத்தையும் தூண்டிவிட்டது. உடனே பீர்பாலைக் கடிந்து கொண்டு உடனே நாட்டை விட்டு வெளியேறும்படி கண்டிப்பான கட்டளையிட்டு விட்டார். மன்னரின் கட்டளையை மீற முடியுமா? பீர்பால் சீனா ...
மேலும் கதையை படிக்க...
பீர்பால், அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும், தமது அறிவுத் திறமையாலே சமாளித்து விடுவார்னு கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு, பீர்பாலின் அறிவாற்றலை ஆராய்ந்து அறிய ஆவல் ஏற்பட்டது. அதனால ஒரு கடிதத்துல, மேன்மை தாங்கிய அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு, ஆண்டவன் தங்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
முட்டாள்களின் கேள்விகள்
செல்வம் நம்மோடு இருக்கட்டும்
ஏன் நிறைய கடவுள்கள்?
உங்கள் பூமியில் நான் இல்லையே!
பீர்பாலின் புத்திசாலித்தனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)