அன்னமும் காகமும்

 

கதை கேளுங்கள்: https://youtu.be/YfBTUAOdslM

பசுமை நிறைந்த அழகிய கிராமம். புழுதி பறக்கும் மண்சாலை வசதி இருந்தது.

புழுதி பறக்கும் மண்சாலையைத் தாண்டினால் சிறிய மலைக்குன்று ஒன்று இருந்தது. அந்தக் குன்றின் மேலே ஏறுவதற்கு சரியான பாதை இல்லை!

பாதையில்லாததால். மலைக்குன்றில் மனித நடமாட்டம் இல்லாமல் அமைதியாய் இருந்தது.

அந்த அமைதிதான், மலைக்குன்றில் உள்ள பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் சந்தோஷத்தை உண்டாக்கின. பெரிய மரங்கள் அவ்வளவாக அக்குன்றில் வளரவில்லை.

எனவே, அக்குன்றில் வாழும் பறவைகள், மலைக்குன்றின் குகைக்குள் சிறிய பொந்துகளில் கூடுகட்டி அமைதியாகவும், ஆனந்தமாகவும் வாழ்ந்து வந்தன.

பறவைகளில் அன்னப்பறவை ஒன்று, ஒரு குகைக்குள் பொந்து ஒன்றில், தன் குஞ்களோடு இருந்த து. குஞ்சுப் பறவைகளின் கீச்கீச் சத்த த்தில் மகிழ்ந்து, அதற்கு இரையை ஊட்டி மகிழ்ந்தன. தாய்ப்பறவையான அன்னம் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த நேரத்தில்தான், விடாது மழைப் பெய்த து. மழையால் அன்னப்பறவையும், அதன் குஞ்சுகளும் குளிரால் நடுங்கியபடியே கூட்டைவிட்டு வெளியே வராமல் முடங்கியிருந்தன.

அந்த நேரத்தில்தான் மழையில் நனைந்தபடியே பறந்து வந்த காகமொன்று, அன்னப்பறவையின் கூட்டிற்கு அருகே குளிரால் நடுங்கியபடியே நின்றது.

வெடவெடவன நடுங்கியபடியே அன்னமே! அன்னமே! ரொம்ப குளிரா இருக்குது! கொஞ்ச நேரம் ஒன்னோட கூட்டுல தங்கிக் கொள்கிறேன். மழை நின்றவுடன் பறந்து விடுவேன், உதிவ செய்யேன்” என கெஞ்சியது.

காகத்தின் கெஞ்சல், அன்னப்பறவைக்கு இரக்கம் ஏற்பட்டது. ஆதலால்”காகமே தாராளமாக தங்கி கொள்! மழை விட்டவுடன் செல்ல்லாம்” என அனுமதியளித்த து. காகமும், அன்னப்பறவையின் கூட்டில் குளிரைப் போக்கி கொள்ள தங்கியது.

சிறிது நேரத்தில் மழை நின்றது.

அன்னப்பறவைக்கு நன்றி சொல்லவிட்டு, காகம் பறக்க தயாரானது. பறக்க ஆரம்பிக்கும் பொழுதே, அந்த இடத்தில எச்சமிட்டது.

நாட்கள் பல கடந்து ஆண்டுகள் சில சென்றவுடன் காகம் எச்சத்தில் இருந்து ஆலவிதைகள் முளைத்து செடியாகி, பின் மரமாய் வளர்ந்தது.

மரத்தில் கிளைகளும், விழுதுகளும் தோன்றி பெரிய ஆலமரமாய் காட்சியளித்தன. ஆலமரத்தின் விழுதுகள் குன்றின் அடிவரை சென்றது.

மலைக்குன்றை ஏறமுடியாத வேடன் ஒருவன், ஆலவிழுதினை பிடித்து மேலேறி சென்றான். அங்கே குன்றின் பொந்தில் உள்ள அன்னப்பறையையும், அதன் குஞ்சுப்பறவைகளையும் பிடித்து தன்னுடைய கூடையில் போட்டுக் கொண்டு இறங்கினான்.

சந்தோஷமாக இருந்த அன்னப்பறவையும், அதன் குஞ்சுகளும் கவலையாய் இருந்தன.

நன்றி- பொம்மி- பூவுலகின் பூஞ்சிறகு மாதஇதழ்- மே 2017 

தொடர்புடைய சிறுகதைகள்
நாட்டின் நிதி நிலைமைப் பற்றி, நிதியமைச்சர் கேட்க, “ஸார்;, நம்ம நாட்டோட நிதி நிலைமை அதலபாதாளத்துல இருக்கு” கவலையாக தெரிவித்தார் நிதி துறை செயலாளர்; அப்படியா…. “நான் சி.எம்-கிட்ட சொல்லிடறேன், மீட்டிங் ஏற்பாடு பண்ணுங்க” என்றார். கூட்டம் நடைபெற்றது….ஆலோசனைகள் வாரி வழங்கினர்;. ஓன்றும் உருப்படியாய் ...
மேலும் கதையை படிக்க...
கண்ணயர்ந்திருந்த ராமகோபாலன், வீட்டின் காலிங் பெல் சத்தம் தொடர்ந்து அடித்ததால் வெளியே போய் எட்டிப் பார்த்தார். ”அடே, அடே, வாப்பா இராஜேஷ்” என உள்ளே கூப்பிட்டு போனார். என்ன அங்கிள் வெளியே போகலையா? என்று கேட்டான் இராஜேஷ். அதற்கு ” வெயில் கொளுத்தறதால வீட்டை ...
மேலும் கதையை படிக்க...
“இராமாயி, கதவை நல்லா முடிக்கோ!, யாரு கதவைத் தட்டினாலும் திறக்காதே!” எச்சரித்து கதவைச் சாத்தினான் நல்லக்கண்ணு ”ஏனுங்கோ, அமாவாசை இருட்டுல எங்கே போறீங்க?” ”அமாவாசை இருட்டுதானே, நம்ம தொழிலுக்கு தோதா இருக்கும், அதான், சந்திரபுரிக்கு போறேன், அங்க போனா ஏதாச்சும் தேறும்” எனக் கிளம்பினான். ”ஏன்தான் ...
மேலும் கதையை படிக்க...
அழகியகாளை நல்லூர் என்ற கிராமத்தில் பசுபதி என்ற நடுத்தர வயதுடையவனும் வசித்து வந்தான். அவனிடம் ஏறக்குறைய பத்து மாடுகள் இருந்தன. அந்த மாட்டிடம் இருந்து பால் கறந்து ஊருக்கெல்லாம் அளந்து கொடுத்து தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்வது அவனது வாடிக்கை. அப்படி வியாபாரம் செய்து ...
மேலும் கதையை படிக்க...
“எனக்கு பேஸ்புக்குல அறுநூற்று சொச்சம் பிரன்ட்ஸ் இருக்காங்க, அவங்க கூட நான் பேசி பழகி என்னோட கருத்த அவங்களுக்கு சொல்றேன், அவங்களும் என்னோட கருத்துக்கு லைக்ஸ் தாராங்க” என பெருமிதப்பட்டுக் கொள்வாள் பொன்னி. காலை எழுந்தவுடன் ஒரு காப்பி சாப்பிட்டு விட்டு, வீட்டுக்காரரை ...
மேலும் கதையை படிக்க...
“என்னாப்பா இரகசியம் ஒன் முகம் எப்பவும் சந்தோஷமா மலர்ச்சியா இருக்கு”என்று கேட்பவர்களுக்கு மத்தியில்….. வயிற்றரிச்சல்காரர்கள் சிலர் ஒனக்கு பிரச்னையே இல்லியா எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கீயே” என இரகுராமனிடம் கேட்பவர்களும் உண்டு. அதற்கும் பதில்... அதே புன்னகைதான். அந்த தொழில் நிறுவனத்தில் தொழிலாளியாக இருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
தொழிலதிபர் சிவக்கொழுந்துவுக்கு போன் கால்கள் வந்தவண்ணம் இருந்தன. நாட்டின் சிறந்த தொழிலதிபர் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டிரந்த்து. நான்கு பேரோடு ஆரம்பித்த கம்பெனி….இன்று நாடெங்கும் ஏராளமான கிளைகள். பாக்கி இல்லாமல், ஏமாற்றாமல் வரி செலுத்துவதில் இவருடைய நிறுவனம் நம்பர் ஒன்னாக இருந்து வருகிறது. பரிசு ...
மேலும் கதையை படிக்க...
சங்கரன் முகம் மகிழ்ச்சியில் திளைத்தது. அதைவிட குட்டிப்பொண்ணு சர்மிளா முகமோ அதைவிட பிரகாசமாய் இருந்தது. அவருக்கு சரி. சர்மிளாவுக்கு என்ன?மீனுவுக்கு முகத்தில் பயம் ஒட்டிக் கொண்டது.காரணம், மாமியாருக்கு... மாமியார் வருவதாய் தகவல்மாமியாரே குடைச்சல்., இதில் மாமியாருக்கு மாமியாரா, ஐயோ வேண்டவே வேண்டாம் ...
மேலும் கதையை படிக்க...
அண்ணாந்து பார்க்கும் அரண்மனையைப் போன்ற மாளிகை. அதில் வசிப்பதென்னவோ மூன்று பேர்தான். மூன்று பேரில் முக்கியமானவர்தான் மஞ்சுளா.அந்த மாளிகையைக் கட்டிக்காக்கும் மகாராணி. அந்த மஞ்சுளாதான், வீட்டின் பக்கவாட்டில் காலியாக உள்ள இடத்தில் மரங்களை வளர்ப்பதில் ஆர்வமுள்ளவர். அவள் வளர்த்து வரும் மரங்களில் கொய்ய ...
மேலும் கதையை படிக்க...
தஸ்புஸ்ஸென்று மூச்சிரைத்தபடியே “அடியே, உமா என்னால முடியலைடி, என்னை விட்டுடுடி“ கதறினார் இமயவரம்பன் “அதெப்படி விடமுடியும், வருஷா வருஷம் ஏமாத்துறாங்க… வரமாட்டேங்கறாங்க…. இந்த வருஷம் நடந்தே ஆகணும்…, ஒங்க வயசுக்கும்…. அனுபவத்துக்கும் இத செய்ய முடியலைன்னா இன்னாய்யா நீ ஆம்பள” ஒரு போடு ...
மேலும் கதையை படிக்க...
காடு
கார்பரேட் கம்பெனியில் பாட்டி வடை சுட்ட கதை
பயம்
பால் வியாபாரி
முகநூல் சங்கிலி
மகிழ்ச்சி
வெற்றி
கதை
கொய்யாக்கனி!
இன்னாய்யா நீ ஆம்பள

அன்னமும் காகமும் மீது ஒரு கருத்து

  1. அன்னமும் காகமும் சிறுவர்சி றுகதையை தங்கள் தளத்தில் பதிவிட்டு தொடர் ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உரித்தாக்குகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)