அணையா விளக்கு – ஒரு பக்க கதை

 

ஒரு நாட்டில் இராஜா ஒருவன் தன்னுடைய மக்களுக்கு நல்லாச்சியைக் கொடுத்து வந்தான். திடிரென்று சில மாதங்களாக அந்த நாட்டில் மழைவளம் குன்றி போயிருந்தது. என்னவாயிருக்கும் என்று யோசனை செய்தபோது, அந்த நாட்டில் உள்ள காளிக்கோயில் அடைப்பட்டுக் கிடந்ததை அறிந்தான்.

அந்தக் கோவிலைத் திறந்து தினமும் இராஜாவே குதிரையில் வந்து விளக்குப் போட்டுவிட்டுச் சென்றான். வீட்டில் செக்கு ஆட்டிய எண்ணெயை ஊற்றாமல், அதை அதிக விலையில் விற்கும்படிச் சொல்லிவிட்டு வரும்வழியில் உள்ள கடையில் வாங்கிய எண்ணெயை ஊற்றி விளக்கு ஏற்றினான். ஒருமாதம் இருமாதம் ஆறுமாதம் ஒரு வருடமாகியும் நாட்டில் மழையே பெய்யாமல் காய்ந்துபோய் மக்கள் அனைவரும் தண்ணீருக்காகத் துன்பப்பட்டார்கள்.

காளிக்கோவிலில் விளக்குப் போடுவது என்பது எந்தவொரு பலனையும் தரப்போவதில்லை என்று நினைத்தான் மன்னன். அதனால் மீண்டும் கோவிலை இழுத்து மூட உத்தரவு பிரபித்தான்.

அப்போது அந்த ஊரில் கணவனும் மனைவியும் துணிமணிகள் விற்றுக்கொண்டு வந்தனர். மாலை நேரம் ஆனவுடன் கோவிலின் வாசலில் உள்ள மருதமரத்தின் கீழ்ச்சென்று அமர்ந்து ஓய்வு எடுத்தனர். கோவில் ஏன் இப்படி இருட்டாக இருக்கிறது என்று அவர்கள் இருவரும் தன்னுடைய துணிகைளில் ஒன்றைக் கிழித்து எண்ணெய் ஊற்றி விளக்கு பற்ற வைத்தார்கள்.

இரவு நேரத்தில் மாடத்திற்கு வந்த மன்னன், “நாம் மூடிவிட்டு வந்த கோவிலில் யார் மீண்டும் விளக்கு ஏற்றினார்கள்” என்று கோபப்பட்டான்.

“விளக்கு ஏற்றியவர்களைத் தலை வெட்டப்பட்டு துண்டாக்குங்கள்” என்றும் கட்டளை இட்டான்.

மன்னனின் ஆணைக்கிணங்க துணி விற்பவர்களின் தலைகளானது துண்டிக்கப்பட்டது. அவர்களின் இரத்தம் ஆறாக கோவில் வாசலில் ஓடியது. இதனால் கோபமுற்ற காளி தெய்வமானது, கணவனை விளக்காகவும் மனைவியைத் திரியாகவும் படைத்து என்றும் அணையாத விளக்கை உண்டுபண்ணியது.

மன்னன் தன்னுடைய தவறை உணர்ந்தான். செய்வதறியாது தவித்தான். காளிக்கோவிலுக்கு ஓடி வந்தான். காளியைக் கும்பிட்டு அங்கிருந்த அருவாளால் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு உயிர் நீத்தான். மன்னனின் இரத்தமும் துணிவிற்பவர்களின் இரத்தமோடு கலந்தது.

அந்த நாட்டில் விடிவதற்குமுன் மழை கொட்டோ கோட்டோ என்று கொட்டியது.

ஆசிரியர் குறிப்பு:
கொரோனா வைரஸ் காரணமாகக் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு வந்துள்ளேன். பல மாதங்களுக்குப் பிறகு அம்மா அப்பாவுடன் நீண்டதொரு உறவு. அப்போதுதான் அம்மாவிடம் கதை கேட்க ஆரமித்தேன். சின்ன வயசில் நிறைய கதைகள் சொல்லுவார்கள். ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதையென கடந்த பத்து நாட்களிலும் பத்துக் கதைகள் கேட்டேன். இந்தக் கதைகள் யாவும் என்னுடைய கற்பனையில் உருவானவை அல்ல என்பதைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இக்கதைகள் முழுவதும் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சொல்லக்கூடிய கிராமத்துக் கதைகளே ஆகும். கதைகள் பெரும்பாலும் சின்னச்சின்ன கதைகளைக் கொண்டே அமைந்துள்ளன. 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்தக் குடிசையில் உள்ளே நுழைந்தபோது விளக்கின் ஒளி எங்கும் நிறைந்திருந்தது. சுவற்றில் கண்ணாடி போட்ட அட்டையினுள்ளே புகைப்படமாக கோவிந்தனும் அவனது மனைவி வெண்மதியும் திருமணக்கோலத்தில் அழகாய் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அதற்கு பக்கத்தில் உள்ள புகைப்படத்தில் கோவிந்தன் வெண்மதியுடன் அழகான ஒரு ஆண்குழந்தையும் புன்னகை ...
மேலும் கதையை படிக்க...
நடுசாமம். என் மனைவி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். நான் மட்டும் தூக்கம் வராமல் விழித்துக்கொண்டிருந்தேன். என் மனைவி நாற்பதைந்தை தாண்டியிருந்தாள். திருமணமாகி இருபத்தைந்து ஆண்டுகளில் நான் இப்படியொரு மனநிலையில் இருந்ததில்லை. எனக்கும் ஐம்பதை நெருங்கியிருந்தது. புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வருவதாக இல்லை. ...
மேலும் கதையை படிக்க...
ஓர் ஊரில் கணவனும் மனைவியும் சந்தோசமா வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. இருவரும் காட்டுக்கு விறகு வெட்ட போவர்கள். வெட்டிய விறகினை ஊருக்குள் சென்று விற்று வருவார்கள். அப்படி ஒருநாள் விறகு வெட்ட காட்டுக்குள் போகும்போது, அங்கு ஒரு இளைஞன் ஒருவனும் ...
மேலும் கதையை படிக்க...
ஆட்டோவிற்கு மூன்று சக்கரம்தான் உள்ளது. நான்காவதாக இன்னொரு சக்கரம் இருந்தால் நன்றாய் இருந்திருக்கும். மூன்று சக்கரம் உள்ளதால்தான் ஆட்டோ என்கிறோம். நான்கு சக்கரம் இருந்துவிட்டால் குட்டியானை, டெம்போ, லாரி என்றல்லவா அழைத்திருப்போம். கையில் பிடித்த ஸ்டிரிங்கை சாலையில் குண்டு குழியில் சக்கரம் ...
மேலும் கதையை படிக்க...
சிங்கப்பூரிலிருந்து விடியற்காலை 6:30 மணியளவில் ஆண்ட்ரூ லைன் இந்தியாவில் சென்னை நகரில் இருக்கும் நளபாகம் சுவை உணவகம் உரிமையாளர் பார்த்திபனுடன் ஸ்கைப் வழியாக உரையாடுகிறார். சிங்கப்பூர்க்கும் இந்தியாவிற்கும் நேர அளவு 2:30 மணித்துளிகள். இப்பொழுது சென்னையில் சரியான நேரம் விடியற்காலை 4:00 ...
மேலும் கதையை படிக்க...
திரௌபதை
தேன்மொழியாள் என்கிற தேவதை
தாம்பூலம் – ஒரு பக்க கதை
இரண்டாவது மனைவி
அர்த்தநாரி

அணையா விளக்கு – ஒரு பக்க கதை மீது ஒரு கருத்து

  1. Dhanvine says:

    Hi.Which temple is this.The name .The story is interesting so I want to know pls reply ASAP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)