அணையா விளக்கு – ஒரு பக்க கதை

 

ஒரு நாட்டில் இராஜா ஒருவன் தன்னுடைய மக்களுக்கு நல்லாச்சியைக் கொடுத்து வந்தான். திடிரென்று சில மாதங்களாக அந்த நாட்டில் மழைவளம் குன்றி போயிருந்தது. என்னவாயிருக்கும் என்று யோசனை செய்தபோது, அந்த நாட்டில் உள்ள காளிக்கோயில் அடைப்பட்டுக் கிடந்ததை அறிந்தான்.

அந்தக் கோவிலைத் திறந்து தினமும் இராஜாவே குதிரையில் வந்து விளக்குப் போட்டுவிட்டுச் சென்றான். வீட்டில் செக்கு ஆட்டிய எண்ணெயை ஊற்றாமல், அதை அதிக விலையில் விற்கும்படிச் சொல்லிவிட்டு வரும்வழியில் உள்ள கடையில் வாங்கிய எண்ணெயை ஊற்றி விளக்கு ஏற்றினான். ஒருமாதம் இருமாதம் ஆறுமாதம் ஒரு வருடமாகியும் நாட்டில் மழையே பெய்யாமல் காய்ந்துபோய் மக்கள் அனைவரும் தண்ணீருக்காகத் துன்பப்பட்டார்கள்.

காளிக்கோவிலில் விளக்குப் போடுவது என்பது எந்தவொரு பலனையும் தரப்போவதில்லை என்று நினைத்தான் மன்னன். அதனால் மீண்டும் கோவிலை இழுத்து மூட உத்தரவு பிரபித்தான்.

அப்போது அந்த ஊரில் கணவனும் மனைவியும் துணிமணிகள் விற்றுக்கொண்டு வந்தனர். மாலை நேரம் ஆனவுடன் கோவிலின் வாசலில் உள்ள மருதமரத்தின் கீழ்ச்சென்று அமர்ந்து ஓய்வு எடுத்தனர். கோவில் ஏன் இப்படி இருட்டாக இருக்கிறது என்று அவர்கள் இருவரும் தன்னுடைய துணிகைளில் ஒன்றைக் கிழித்து எண்ணெய் ஊற்றி விளக்கு பற்ற வைத்தார்கள்.

இரவு நேரத்தில் மாடத்திற்கு வந்த மன்னன், “நாம் மூடிவிட்டு வந்த கோவிலில் யார் மீண்டும் விளக்கு ஏற்றினார்கள்” என்று கோபப்பட்டான்.

“விளக்கு ஏற்றியவர்களைத் தலை வெட்டப்பட்டு துண்டாக்குங்கள்” என்றும் கட்டளை இட்டான்.

மன்னனின் ஆணைக்கிணங்க துணி விற்பவர்களின் தலைகளானது துண்டிக்கப்பட்டது. அவர்களின் இரத்தம் ஆறாக கோவில் வாசலில் ஓடியது. இதனால் கோபமுற்ற காளி தெய்வமானது, கணவனை விளக்காகவும் மனைவியைத் திரியாகவும் படைத்து என்றும் அணையாத விளக்கை உண்டுபண்ணியது.

மன்னன் தன்னுடைய தவறை உணர்ந்தான். செய்வதறியாது தவித்தான். காளிக்கோவிலுக்கு ஓடி வந்தான். காளியைக் கும்பிட்டு அங்கிருந்த அருவாளால் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு உயிர் நீத்தான். மன்னனின் இரத்தமும் துணிவிற்பவர்களின் இரத்தமோடு கலந்தது.

அந்த நாட்டில் விடிவதற்குமுன் மழை கொட்டோ கோட்டோ என்று கொட்டியது.

ஆசிரியர் குறிப்பு:
கொரோனா வைரஸ் காரணமாகக் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு வந்துள்ளேன். பல மாதங்களுக்குப் பிறகு அம்மா அப்பாவுடன் நீண்டதொரு உறவு. அப்போதுதான் அம்மாவிடம் கதை கேட்க ஆரமித்தேன். சின்ன வயசில் நிறைய கதைகள் சொல்லுவார்கள். ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதையென கடந்த பத்து நாட்களிலும் பத்துக் கதைகள் கேட்டேன். இந்தக் கதைகள் யாவும் என்னுடைய கற்பனையில் உருவானவை அல்ல என்பதைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இக்கதைகள் முழுவதும் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சொல்லக்கூடிய கிராமத்துக் கதைகளே ஆகும். கதைகள் பெரும்பாலும் சின்னச்சின்ன கதைகளைக் கொண்டே அமைந்துள்ளன. 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்த இடத்தில்தான் நாய்கள் எல்லாம் ஒன்று கூடின. எங்கெங்கிருந்தோ நாய்களெல்லாம் வந்த வண்ணம் இருந்தன. பணக்கார நாய்களிலிருந்து தெருநாய்கள் வரையும் சில வெளிநாட்டு நாய்களும் வௌவ் வௌவ் என்று குலைத்துக் கொண்டும் வாலை ஆட்டிக்கொண்டும் இங்கிட்டும் அங்கிட்டும் நடப்பதுமாய் போவதுமாய் இருந்தன. ...
மேலும் கதையை படிக்க...
கட்டியக் கணவனோடு திருவிழாவிற்குச் செல்லுகிறாள் ஒருத்தி. தன்னுடைய உடல் முழுக்க அலங்கரித்துக் கொள்ளுகிறாள். தலைநிறைய பூச்சூடிக் கொள்ளுகிறாள். திருவிழாவிற்குப் போகும்போது நடுவில் ஆறு ஒன்று செல்கிறது. ஆற்றிலே வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரை தாண்டி அந்தப்பக்கம் எப்படி செல்வது? திருவிழாவைக் கொண்டாடுவது எப்படி ...
மேலும் கதையை படிக்க...
பார்வதி வீட்டு கல்யாணம். தழைவாழை இலைப்போட்டு ஊருக்கெல்லாம் சாப்பாடு. அருள் சவுண்ட் சிஸ்டம் கல்யாணப்பாடல்கள் காதைப்பிளந்தது. பாவாடை சட்டையிட்ட சிறுமிகளும் டவுசர் போட்ட சிறுவர்களும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். பார்வதி அம்மா வந்தவர்களையெல்லாம் வாங்கன்னு சொல்லிட்டு இருந்தாங்க. பந்தலில் அமர்ந்திருந்த அனைவருக்கும் காபியைக் ...
மேலும் கதையை படிக்க...
பட்டாசு சத்தம் காதைப் பிய்த்துக்கொண்டு போனது. கோவிந்தன் ரெண்டு கிளாஸ் பட்டைச் சாராயத்தை ஊத்திக்கொண்டு ஆடுபவரின் ஆட்டத்திற்கு தகுந்தார் போல் மேளத்தைத் தட்டிக் கொண்டிருந்தான். கையிலே பறை மேளத்தை வைத்துக்கொண்டு ஒரு பக்கமாய் தலைச்சாய்த்து கொட்டு அடிப்பதில் கோவிந்தனுக்கு அலாதி பிரியம்தான். ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு சிறிய வீடு. வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டிய இடத்தில் கனகச்சிதமாகவே இருந்தன. வாழைப்பழமும் திராட்சையும் ஒரு பிளாஸ்டிக் பையில் அடைபட்டு கிடந்தன. அந்த வீட்டில் ஒற்றைக் கட்டில் மட்டும் போடப்பட்டிருந்தது. கட்டிலின் முன்னால் வெற்று ...
மேலும் கதையை படிக்க...
காற்றைப் பிளந்து வந்து கொண்டிருந்தது அந்தப் பேருந்து. மேடு பள்ளங்களைத் தாண்டி குதிரையாய் பறந்தது. அந்தப் பேருந்தில் இரண்டு பக்கங்களிலும் குதிரையின் படம் வரையப்பட்டிருந்தது. அதனாலோ என்னவோ இப்படி வேகமாக புழுதிப் பரப்பியது. “என்னங்க பையன் ராத்திரி வரும்போது புரோட்டா கேட்டான்” ...
மேலும் கதையை படிக்க...
ஆண்டு-1960. படிப்பறிவு இல்லாத கிராமம். பண்ணையார் முதல்கொண்டு தலையாரி வரை பலதரப்பட்ட மக்கள் வாழுகின்ற ஊர். அந்த ஊரில் எல்லோரும் அறிவாளிகள். ராத்திரி ஊருசனமெல்லாம் தூங்கிட்டாங்க. எல்லாம் அடங்கி இருட்டாய் இருந்தது அந்த ஊர். நடுசாமத்து வாக்குல மூணு மாசமா இழுத்துக்கிட்ட கிடந்த ...
மேலும் கதையை படிக்க...
மத்தியான நேரம். உச்சி வெயில் மண்டையப் பிளந்தது. ரெங்கநாயகி கிழவி வேகவேகமாய் ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு வேர்க்க விறுவிறுக்க வந்து கொண்டிருந்தாள். மனதிலே இறுக்கம். தளர்ந்த நடை. தோலெல்லாம் சுருங்கிப்போய் கூன் விழுந்திருந்தது. மூக்கு நுனி கண்ணாடி கீழே விழாத படிக்கு ...
மேலும் கதையை படிக்க...
ஓர் ஊரில் ஏழு அண்ணன்மார்களும் ஒரு தங்கையும் சந்தோசமாக வாழ்ந்த வந்தார்கள். அண்ணன்கள் ஏழு பேரும் காட்டிற்கு வேலைக்குப் போவார்கள். அவர்களுக்கு தங்கைதான் சாப்பாடு கொண்டு செல்வாள். மூத்த ஆறு அண்ணன்களும் சட்டியில் இருக்கும் சாப்பாட்டை வழித்து வழித்து உண்பார்கள். ஏழாவது அண்ணன் ...
மேலும் கதையை படிக்க...
தெருவில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அச்சிறுவர்கள் போடும் சத்தம் அத்தெருமுழுக்க கேட்டது. தெருவின் வடமேற்குப் பகுதியில் வேப்பம்மரம் ஒன்று இருந்தது. அந்த வேப்பமரத்தைச் சுற்றிலும் பத்துப்பேர் கொண்ட கும்பல் ஏதோ ஒரு மொழியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசுவது யாருக்கும் புரியவும் இல்லை. அவர்களை ...
மேலும் கதையை படிக்க...
கடவுளுக்கு நாய்களிடமிருந்து ஒரு கோரிக்கை – ஒரு பக்க கதை
முதலையும் பெண்ணும் – ஒரு பக்க கதை
அலமேலு மங்கை
தோட்டியின் பிள்ளை
நாலணா சில்லரை
ஒரு சிறுவனின் அழுகை
சைக்கிளுக்கு ஒரு ரூபாய் வாடகை
இதயம் பேசுகிறது!
ஏழு அண்ணன்களும் ஒரு தங்கையும்!
பிச்சைக்காரியின் மகன்!

அணையா விளக்கு – ஒரு பக்க கதை மீது ஒரு கருத்து

  1. Dhanvine says:

    Hi.Which temple is this.The name .The story is interesting so I want to know pls reply ASAP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)